தோல் நோய்த்தொற்றுகளுக்கு ஃபியூஸிடிக் அமிலம் - ஃபியூஸிடின் (Fusidic Acid in Tamil | Fucidin in Tamil)

Last updated by Peer reviewed by Dr John Cox
Last updated

Added to Saved items

ஃபியூஸிடினை (Fuscidin) எப்படி பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தால் அதன்படியே பயன்படுத்துங்கள், அப்படியில்லையென்றால் ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு முறைகள் கிரீமை அல்லது ஆயின்ட்மென்ட்டை பூசுங்கள்.

பூசிய பிறகு, உங்கள் கைகளை நன்கு கழுவுங்கள். இதன் மூலம் நோய்த்தொற்று பரவும் இடரை குறைக்க முடியும்.

உங்கள் தோல் ஒரு சில நாட்களுக்குப் பிறகு முன்னேற்றமடையத் தொடங்கும். வரையறுக்கப்பட்ட கால அளவுக்குப் பிறகு, உங்கள் தோல் முன்னேற்றமடையவில்லை என நீங்கள் நினைத்தால், உங்கள் மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள்.
மருந்தின் வகைஒரு பாக்டீரியா எதிர்ப்பு தோல் தயாரிப்பு
பயன்பாடுகள்தோல் நோய்த்தொற்றுகள் (பெரியவர்கள் மற்றும் குழந்தைகள்)
பிற பெயர்கள்பிராண்டு பெயர்கள்: ஃபியூஸிடின்® (Fucidin®); ஃபியூஸிடின்® H (Fucidin® H) (ஹைட்ரோகார்டிசோன் (hydrocortisone) கலந்த ஃபியூஸிடிக் அமிலம்); ஃபியூஸிபெட்® (Fucibet®) (பீட்டாமீத்தேசோன் (betamethasone) கலந்த ஃபியூஸிடிக் அமிலம்); ஸீமாகோர்ட்® (Xemacort®) (பீட்டாமீத்தேசோன் (betamethasone) கலந்த ஃபியூஸிடிக் அமிலம்)
மாற்று பொதுவின மருந்துப்பெயர்: சோடியம் ஃபியூஸிடேட் (sodium fusidate)
கிடைக்கும் வகைகிரீம் மற்றும் ஆயின்ட்மென்ட்

ஃபியூஸிடிக் (Fusidic) அமிலம் ஸ்டஃபைலோகோக்கல் (staphylococcal) பாக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளால் ஏற்படும் தோல் நோய்த்தொற்றுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய நோய்த்தொற்றுகள் impetigo (சிரங்கு), நோய்த்தொற்றுள்ள வெட்டுகள் மற்றும் மேலோட்டமான உராய்வுகள், மற்றும் நோய்த்தொற்றுள்ள dermatitis (தோல் அழற்சி) ஆகியவற்றை உள்ளடக்கியது. இது, நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்ற கிருமிகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் நல்ல பலனளிக்கிறது. சோடியம் ஃபியூஸிடேட்(sodium fusidate) என்பது ஃபியூஸிடிக் (fusidic) அமிலத்தின் ஒரு உப்பு ஆகும். மேலும், இது ஃபியூஸிடிக் அமிலத்தைப் போலவே பலனளிக்கிறது. இந்தப் பெயரை, உங்கள் பயன்பாட்டுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு ஆயின்ட்மென்ட்டில், ஒரு சேர்மானப் பொருளாகக் கொடுக்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம்.

ஃபியூஸிடிக் (Fusidic) அமிலம் மற்றும் சோடியம் ஃபியூஸிடேட் (sodium fusidate) ஆயின்ட்மென்ட் ஆகியவை பாக்டீரியா எதிர்ப்புத் தயாரிப்புகள் ஆகும். இவை, வழக்கமாகத் தோல் நோய்த்தொற்றை, அதிலும் குறிப்பாக நோய்த்தொற்று ஒரு சிறிய பரப்பளவில் இருந்தாலும் கூட, விரைவாக அழித்தொழிக்கிறது. நோய்த்தொற்று அதிகளவு பரவியிருந்தால், ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் அல்லது ஒரு திரவ மருந்து தேவைப்படலாம் (இதைப் பற்றி மேலும் தகவல் அறிய Sodium fusidate for infections (நோய்த்தொற்றுகளுக்கு சோடியம் ஃபியூஸிடேட்) என அழைக்கப்படும் ஒரு தனி மருந்துத் துண்டுப்பிரசுரத்தைப் பாருங்கள்).

தோலின் பகுதி அழற்சியுடனும் நோய்த்தொற்றுடனும் இருந்தால், உங்கள் மருத்துவர் ஹைட்ரோகார்டிசோன் (hydrocortisone) போன்ற ஒரு அழற்சி எதிர்ப்புப் பொருள் கலந்த ஃபியூஸிடிக் (fusidic) அமிலத்தைக் கொண்டுள்ள ஒரு கிரீமை பரிந்துரைக்கலாம் (பிராண்டுப் பெயர் ஃபியூஸிடின்® H(Fucidin® H)) அல்லது பீட்டாமீத்தேசோன் (பிராண்டுப் பெயர்கள் ஃபியூஸிபெட்® (Fucibet®) மற்றும் ஸீமாகோர்ட்® (Xemacort®)).

சில மருந்துகள் சில குறிப்பிட்ட நிலைமைகள் கொண்ட மக்களுக்கு ஏற்றவை அல்ல மற்றும் சில சமயங்களில் கூடுதல் கவனிப்பு மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே ஒரு மருந்து பயன்படுத்தப்பட முடியும். இந்தக் காரணங்களுக்காக, நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், உங்கள் மருத்துவர் அல்லது பல் மருத்துவர் பின்வருவனவற்றை அறிவது முக்கியமாகும்:

 • நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பாலூட்டிக் கொண்டிருந்தால் (ஃபியூஸிடிக் (fusidic) அமிலம், குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியதாக அறியப்படவில்லை என்கிற போதிலும்).
 • நீங்கள் ஏதாவது மருந்தை பயன்படுத்தியதன் காரணமாக அல்லது தோல் சார்ந்த தயாரிப்புக் காரணமாக, உங்களுக்கு எப்போதாவது ஒவ்வாமை தோல் வினை ஏற்பட்டிருந்தால்.
 • நீங்கள் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், பேக்கின் உள்ளே இருக்கும் உற்பத்தியாளரின் அச்சிடப்பட்ட தகவல் துண்டுப்பிரசுரத்தை படிக்கவும். இது, உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கிரீம் அல்லது ஆயின்ட்மென்ட் பிராண்டை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய கூடுதல் தகவல்களைக் கொடுக்கும், மேலும் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது அனுபவிக்கக் கூடிய பக்க விளைவுகளின் முழுப் பட்டியலையும் உங்களுக்கு வழங்கும்.
 • உங்கள் மருத்துவர் உங்களுக்குக் கூறியபடி மிகச்சரியான தயாரிப்பைப் பயன்படுத்துங்கள். நோய்த்தொற்றுள்ள பகுதியில் கிரீமின்/ஆயின்ட்மென்ட்டின் ஒரு மெல்லிய படலத்தைப் பூசி, மென்மையாகத் தேயுங்கள். இதை, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தால் அதன்படியே பயன்படுத்துங்கள், அப்படியில்லையென்றால் ஒரு நாளுக்கு 3-4 முறைகள் பயன்படுத்துங்கள். இதை நீங்கள் பயன்படுத்திய பிறகு, உங்கள் கைகளை நன்கு கழுவ மறந்துவிட வேண்டாம் (உங்கள் கைகளில் பயன்படுத்துவதாக இருந்தால், கைகளைக் கழுவ வேண்டியதில்லை).
 • இதை உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியுள்ள காலம் வரையிலும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு சிகிச்சைக் காலம் வழக்கமாக ஏறத்தாழ ஏழு நாட்களுக்கு நீடிக்கும். நீங்கள் 10 நாட்களை விட அதிகமாகக் கிரீமை அல்லது ஆயின்ட்மென்ட்டை பயன்படுத்தக் கூடாது.
 • உங்கள் தோலானது சிகிச்சை தொடங்கப்பட்டு ஒரு சில நாட்களுக்குப் பிறகு முன்னேற்றமடையத் தொடங்கும். வரையறுக்கப்பட்ட கால அளவுக்குப் பிறகு, உங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை என நீங்கள் நினைத்தால், உங்கள் மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள். சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட ஆன்ட்டிபயாட்டிக் மருந்திற்கு, நோய்த்தொற்று, எதிர்ப்புத்திறன் கொண்டதாக இருக்கலாம். அப்படியானால், உங்களுக்கு ஒரு மாற்று ஆன்ட்டிபயாட்டிக் மருந்து தேவைப்படும். அதேபோல, சிகிச்சைக் காலம் முடிந்த பிறகும் நோய்த்தொற்று குணமாகவில்லை எனில், உங்கள் மருத்துவரை சந்தியுங்கள்.
 • பல தோல் நோய்த்தொற்றுகள் எளிதில் தொற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை. மேலும், வெறுமனே தொடுவதன் மூலம் பரவக்கூடியவை. இந்த இடரை குறைப்பதற்கு, மருந்தை பூசும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் நோய்த்தொற்றுள்ள பகுதியை தொடுவதைத் தவிர்ப்பதற்கு முயற்சியுங்கள். உங்கள் குடும்பத்தினருடைய டவல்களையும், முகம் துடைப்புத் துணிகளையும் பயன்படுத்தாமல், உங்களுக்கு எனத் தனியாக மேற்கூறியவற்றைப் பயன்படுத்துங்கள்.
 • நீங்கள், மருந்தை உங்கள் முகத்திற்கு அருகில் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் கண்களில் படாமல் கவனமாக இருங்கள். ஒருவேளை பட்டுவிட்டால், உடனடியாக ஏராளமான வெதுவெதுப்பான நீரால் கண்களைக் கழுவுங்கள்.

ஃபியூஸிடிக் (Fusidic) அமிலத்தாலான தோல் தயாரிப்புகள் எப்போதாவது எரிச்சலை ஏற்படுத்தலாம். இது, வழக்கமாக மிதமானது மற்றும் பிரச்சினையற்றது.

ஒவ்வாமை வினைகள் அரிதாக ஏற்படலாம். உங்களுக்கு ஒரு கடுமையான சொறி ஏற்பட்டால், முடிந்தவரை விரைவாக ஆலோசனையைப் பெறுவதற்காக உங்கள் மருத்துவரை அல்லது மருந்தாளுநரை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்.

தயாரிப்பு காரணமாக வேறு ஏதாவது அறிகுறிகளை நீங்கள் அனுபவிப்பதாகக் கருதினால், உங்கள் மருத்துவரிடம் அல்லது மருந்தாளுநரிடம் பேசுங்கள்.

 • அனைத்து மருந்துகளையும் குழந்தைகளுக்கு எட்டாத மற்றும் அவர்கள் கண்களுக்குப் புலப்படாத இடத்தில் வையுங்கள்.
 • நேரடி வெப்பம் மற்றும் வெளிச்சத்தில் வைக்காமல் குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமியுங்கள்.

மருந்தை தோலின் மீது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருந்தை யாராவது விழுங்கிவிட்டால், ஆலோசனையைப் பெறுவதற்காக உங்கள் உள்ளூர் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவை தொடர்புகொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை அல்லது ஏதாவது பல் சார்ந்த சிகிச்சையைப் பெறுவதாக இருந்தால், நீங்கள் என்ன மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள் அல்லது பயன்படுத்தி வருகிறீர்கள் என்று சிகிச்சையை மேற்கொள்ளும் நபரிடம் கூறுங்கள்.

நீங்கள் ஏதேனும் மருந்துகளை விலைக்கு வாங்கினால், அவற்றை உங்கள் மற்ற மருந்துகளுடன் எடுத்துக்கொள்வதற்குப் பாதுகாப்பானதா என்று ஒரு மருந்தாளரிடம் சரிபாருங்கள்.

இந்த மருந்து உங்களுக்கானது ஆகும். உங்களுடைய நிலைமை மற்றவர்களுக்கு இருப்பதாகத் தோன்றினாலும் கூட, ஒருபோதும் அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது.

காலாவதியான அல்லது தேவையற்ற மருந்துகளை வைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்காக அவற்றை அகற்றும் உங்கள் உள்ளூர் மருந்தகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

உங்களுக்கு இந்த மருந்தைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Further reading and references

 • Manufacturer's PIL, Fucidin® Cream; Leo Laboratories Limited, The electronic Medicines Compendium. Dated May 2011.

 • Manufacturer's PIL, Fucidin® Ointment; Leo Laboratories Limited, The electronic Medicines Compendium. Dated November 2015.

 • British National Formulary; 72nd Edition (Sep 2016) British Medical Association and Royal Pharmaceutical Society of Great Britain, London

newnav-downnewnav-up