அடிவயிற்றின் வலது மேல்புற கால்வட்டத்தில் ஏற்படும் வலி Right upper quadrant pain

Last updated by Peer reviewed by Dr Adrian Bonsall
Last updated

Added to Saved items
This article is for Medical Professionals

Professional Reference articles are designed for health professionals to use. They are written by UK doctors and based on research evidence, UK and European Guidelines. You may find one of our health articles more useful.

Read COVID-19 guidance from NICE

Treatment of almost all medical conditions has been affected by the COVID-19 pandemic. NICE has issued rapid update guidelines in relation to many of these. This guidance is changing frequently. Please visit https://www.nice.org.uk/covid-19 to see if there is temporary guidance issued by NICE in relation to the management of this condition, which may vary from the information given below.

அடிவயிற்றின் வலது மேல்புற கால்வட்டத்தில் (RUQ) ஏற்படும் வலியானது, பல்வேறு வகையான நிலைமைகளால் ஏற்படுகிறது. நோயாளியின் வயது, பாலினம் மற்றும் பொதுவான மருத்துவ நிலைமை ஆகியவை, நோயறியும் நடைமுறையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த கால நிகழ்வுகள் மற்றும் ஆய்வுகள் ஆகியவையும், வகையீட்டு நோயறியும் நடைமுறையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். மிகக்கடுமையான அல்லது நாள்பட்ட நோய், உடல் எடை இழப்பு, காய்ச்சல், பொதுவான உடல் நலக் குறைபாடு மற்றும் சிறுநீர் மண்டலம் சார்ந்த அல்லது குடல் சார்ந்த அறிகுறிகள் ஆகியவையும் கூட, நோயறியும் நடைமுறையைச் சுட்டிக்காட்டுவதற்கு உதவும். Acute abdomen (மிகக்கடுமையான அடிவயிற்று மருத்துவ அவசரநிலை) உள்ளதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது முக்கியமாகும். Left Upper Quadrant Pain (அடிவயிற்றின் இடது மேல்புற கால்வட்டத்தில் ஏற்படும் வலி)Abdominal Pain (அடிவயிற்று வலி)Abdominal Pain in Pregnancy (கர்ப்பக் காலத்தில் அடிவயிற்று வலி) மற்றும் Abdominal Pain in Children (குழந்தைகளிடத்தில் அடிவயிற்று வலி) எனத் தொடர்புடைய தனிக் கட்டுரைகள் உள்ளன.

அறிகுறிகள்

முதலில் வலியைப் பற்றி விசாரியுங்கள்.

 • வலி எங்கே இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுமாறு நோயாளியைக் கேளுங்கள். நோயாளி ஒற்றை விரலை பயன்படுத்துகிறாரா அல்லது சுட்டிக்காட்டப்படும் பகுதி மிகவும் பரவலாக உள்ளதா என்பதைக் கவனியுங்கள்.
 • எப்போது வலி தொடங்கியது என்பதை உறுதிசெய்வதற்கு, நோயாளியைக் கேளுங்கள்.
 • வலி திடீரெனத் தொடங்கியதா அல்லது படிப்படியாக அதிகரித்ததா என்பதைத் தீர்மானியுங்கள்.
 • வலி தொடர்ச்சியாக இருந்ததா அல்லது இடையிடையே வலித்ததா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
 • வலியின் இயல்பை, அதாவது குத்துதல், எரிகிற வேதனை, இறுக்கப்பிடித்தல் முதலிய, வலிக்கும் இயல்பை விவரிக்குமாறு நோயாளியைக் கேளுங்கள். நோயாளியின் உடல் மொழியையும், கைகளைப் பயன்படுத்தும் விதத்தையும் கவனியுங்கள்.
 • மிகவும் கடுமையாக்குகின்ற அல்லது நிவாரணம் அளிக்கின்ற காரணிகள் ஏதாவது இருக்கின்றனவா என நோயாளியைக் கேளுங்கள்.
 • ஏதாவது கதிர்வீச்சு உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.

கடந்தகால மருத்துவ வரலாற்றைக் கவனியுங்கள். ஒரு ஒழுங்குமுறையான விசாரணையைச் செய்யுங்கள். காய்ச்சல், இருமல் அல்லது சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்ற வேறு ஏதாவது தகவல்களை, நோயாளி தன்னார்வத்துடன் முன்வந்து சொல்லலாம். பின்வருவனவற்றைப் பற்றி கலந்தாலோசியுங்கள்:

 • சாப்பிடும் விருப்பம்
 • உடல் எடையில் ஏதாவது மாற்றம்
 • குடல் பகுதிகள்
 • சிறுநீர்
 • புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
 • மருந்து

குடும்ப வரலாறும் வெளிப்படுத்தப்படலாம்.

அடையாளங்கள்

 • நோயாளியின் பொதுவான மருத்துவ நிலைமையைக் கவனியுங்கள் - அதாவது, அவை நியாயமான அளவுக்கு நன்றாக உள்ளதா, அதிர்ச்சியடைந்து உள்ளதா, காய்ச்சல் அல்லது மூச்சுத்திணறல் உள்ளதா என்பதைக் கவனியுங்கள். மஞ்சள் காமாலை உள்ளதா என்பதைக் கவனியுங்கள்.
 • உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு விகிதம் மற்றும் தரம், மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கவனியுங்கள்.
 • நோயாளி போதுமான அளவில் ஆடைகளை அகற்றியிருக்க வேண்டும். மேலும், நோயாளி மற்றும் ஆய்வாளர் ஆகிய இருவரும் ஒரு சௌகரியமான இடநிலையில் இருக்க வேண்டும். அடிவயிறு முழுவதையும் ஒரு ஒழுங்குமுறையான ஆய்வு செய்ய வேண்டும். அடிவயிற்று ஆய்வு பற்றி மற்றொரு இடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. Abdominal Examination (அடிவயிற்று ஆய்வு) என்னும் தனிக் கட்டுரையைப் பாருங்கள்.
 • நோயறிதல் தெளிவாக இல்லை எனில், மற்ற உடல்சார் மண்டலங்களைப் பற்றிய, ஒரு முழுமையான ஆய்வு தேவைப்படுகிறது - உதாரணத்திற்கு, examination of the respiratory system (சுவாச மண்டலத்தைப் பற்றிய ஆய்வு)

அடிப்படையான வகையீட்டு நோயறிதல் ஏராளமாக உள்ளன, ஆனால், போதுமான அளவு, கடந்த கால நிகழ்வுகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, வகையீட்டு நோயறிதல், மிகவும் சிறிய அளவில் ஆகிவிடும். பின்வரும் வரிசையானது, நிகழும் வாய்ப்பை சுட்டிக்காட்டுவதை, நோக்கமாகக் கொண்டதல்ல:

கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்

குடல் புண்கள்

கார்டியோவாஸ்குலர் (Cardiovascular) நோய்

 • Abdominal aortic aneurysm (அடிவயிற்று பெருந்தமனி நீட்சியம்) கூறுபாட்டில் இருந்து வலி ஏற்படுவது என்பது, வழக்கமாக, நோயாளியால் முதுகில் அடையாளம் காட்டப்படும். இது, மார்பில் இருந்து தோன்றி கால்களை நோக்கிக் கீழே பரவலாம். மற்ற இரத்தத் தமனிகள் விரிவடையலாம் மற்றும் அவற்றில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
 • மேல்புற அடிவயிற்று வலி காரணமாக, இதய வலி எப்போதாவது இருக்கலாம்.
 • இரத்தக்கட்டு இதயச் செயலிழப்பு ஆனது கல்லீரல் இணைப்புத்திசு உறையை, விரிவடையச் செய்யலாம்.

சிறுநீரகக் கோளாறுகள்

சுவாச நோய்

நுரையீரல்களின் வலது கீழ்புற மடலில் இருந்து வலி உருவாகலாம்.

உட்சுரப்பி அல்லது வெளிச்சுரப்பி நோய்

நோய்த்தொற்றுகள்

 • Herpes zoster (அக்கி அம்மையானது) தோலில் வழக்கமான சிறுகுமிழ்கள் தோன்றுவதற்கு முன்னதாக வலியாக இருக்கும். இது, ஆழமான கட்டமைப்புகளை விட அதிகமாக, மென்மையான தோலில் காணப்படும்.
 • வயிற்றுவிதானத்திற்குக் கீழான சீழ்க்கட்டி அல்லது இன்னும் சொல்லப்போனால் வயிற்றறைத் திறப்பாய்வுக்குப் பிறகு வாய்வு, அல்லது மிகப்பெரும்பாலும் நுண்துளை (லேப்ராஸ்கோப்பி - Laproscopy) அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாய்வு. மீண்டும், தோள் வலிப்பதாக நோயாளியால் குறிப்பிடப்படலாம்.
 • Fitz-Hugh and Curtis syndrome (ஃபிட்ஸ்-ஹியூக் மற்றும் கர்ட்டிஸ் நோய்க்குறி) .[2] என்பது ஒரு அரிதான மருத்துவ நிலைமை ஆகும். இதில், பிறப்புறுப்புப் பாதை நோய்த்தொற்றுடன் தொடர்புடைய கல்லீரல் இணைப்புத்திசு உறையின் அழற்சி இருக்கும். இது, pelvic inflammatory disease (இடுப்பெலும்புக்கூடு அழற்சி நோய்). கொண்டுள்ள நோயாளிகளுள் நான்கில் ஒருவருக்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. செம்மையான முறையில், கூர்மையான, நுரையீரல் உறையழற்சி அடிவயிற்றின் வலது மேல்புற கால்வட்டத்தில் (RUQ) ஏற்படும் வலியாக இருக்கிறது. ஆனால், கருப்பைக்குழாய் அழற்சியின் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம்.

கர்ப்பம்

கர்ப்பக் காலத்தின் கடைசி மூன்று மாத காலம் கூடுதல் பிரச்சினைகளைக் கொடுக்கிறது.[3] கல்லீரல் நொதிகளின் சிறிய அளவிலான உயர்வுகளைத் தொடர்ந்து கர்ப்பக் காலத்தின் மிகக்கடுமையான கொழுப்புள்ள கல்லீரல் (AFLP) அல்லது இரத்தச் சிவப்பணுச் சிதைவு, உயர்த்தப்பட்ட கல்லீரல் நொதி அளவுகள், குறைந்த இரத்த வட்டு எண்ணிக்கை (HELLP) ஆகியவற்றுடனான கருக்கலைப்பின் நோயறிகுறி, போன்ற உயிருக்கு ஆபத்தான நோய் ஏற்பலாம்.

Pre-eclampsia (முன்சூல்வலிப்பு (ப்ரீஎக்ளாம்சியா)), HELLP syndrome (உயர்த்தப்பட்ட கல்லீரல் நொதி அளவுகள், குறைந்த இரத்த வட்டு எண்ணிக்கை நோயறிகுறி), மற்றும் கர்ப்பக் காலத்தின் மிகக்கடுமையான கொழுப்புள்ள கல்லீரல் (AFLP) ஆகியவை பலதரப்பட்ட நோய்களை உருவாக்குகின்றன. இவை, லேசான அறிகுறிகள் முதற்கொண்டு உயிருக்கு ஆபத்தான பல உறுப்பு செயல்கோளாறு வரை பலதரப்பட்டது. இந்த அறிகுறிகள், கர்ப்ப காலத்தில் கடுமையான கல்லீரல் சார்ந்த செயல்கோளாறுக்கான முதன்மையான காரணங்களாக இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளன.

பரிசீலிக்கப்பட வேண்டிய மற்றவை

 • முதுகுத்தண்டில் உள்ள நரம்புகளில் இருந்து அல்லது அந்தப் பகுதிகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற புற நரம்புகளில் இருந்து வலி இருப்பதாக நோயாளியால் குறிப்பிடப்படலாம். முதுகுத்தண்டுக் காசநோய் என்பது அடிவயிற்று வலிக்கான ஒரு அரிய காரணம் ஆகும்.[4]
 • துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு நீடித்து உழைக்கும் ஆற்றல் கொண்ட தடகள வீரர்களிடத்தில் திரும்பத்திரும்ப ஏற்படும் அடிவயிற்று வலி சற்று அரிதானது மற்றும் அதன் நோயறிதல் கடினமாக இருக்கலாம். [5]
 • குழந்தைகள் 'வயிற்று வலி' பற்றி மிகவும் வரையறுத்துக் கூற இயலாமல் இருப்பார்கள். இதற்கு, கிட்டதட்ட எதுவும் காரணமாக இருக்கலாம். காதுகள், தொண்டை மற்றும் சிறுநீர் ஆகியவற்றைச் சரிபாருங்கள். குடலைத் தாங்குகின்ற திசு மடிப்பில் உள்ள நிணநீர்க் கணுக்களின் அழற்சியானது பொதுவாக லேசான காய்ச்சலின் போது அல்லது அநேகமாக மற்ற நிணநீர்க்கணு நோயின் போது இருக்கிறது.[6]
 • Left upper quadrant pain (அடிவயிற்றின் இடது மேல்புற கால்வட்டத்தில் ஏற்படும் வலியுடன்) தொடர்புடைய புண்கள் எப்போதாவது மறுபுறத்தில் இருக்கலாம். உள்ளுறுப்பு இடப்பிறழ்வு என்பது பத்தாயிரத்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது.

இது முழுமையான பட்டியல் அல்ல. Familial Mediterranean fever (குடும்பவழி மத்தியதரைக்கடல் காய்ச்சல்), முதுகுத்தண்டுக் கிரந்தி மற்றும் குடற்புழு மொய்ப்பு உள்பட அடிவயிற்று வலிக்கு வேறு பல அரிதான காரணங்களும் உள்ளன. Münchhausen's syndrome (மன்சாஸன் நோய்க்குறி) இருப்பதற்கான சாத்தியமும் உள்ளது.

ஆய்வுகளின் விருப்பத்தேர்வு, மேலே உள்ள கண்டறிதல்களைப் பொறுத்து அமையும்.

 • முழு இரத்த உயிரணு எண்ணிக்கை (FBC), இரத்தச் சிவப்பணுக்கள் ஒரு மணி நேரத்தில் எந்த விகிதத்தில் கீழே வந்து படிகின்றன என்பதைக் கணக்கிட்டுச் சொல்லும் அளவு (ESR) மற்றும் C-வினைபுரிப்புரதம் (CRP) ஆகியவை நோய்த்தொற்றைப் பற்றிய அல்லது அழற்சியை விளைவிக்கின்ற செயல்முறையைப் பற்றிய ஒரு சுட்டிக்காட்டலைக் கொடுக்கலாம். இரத்தப்போக்கு ஆனது இரத்தச்சோகையை ஏற்படுத்தலாம். இது, வேகமாகப் பரவக்கூடிய புற்றுத்தன்மையைச் சுட்டிக்காட்டலாம்.
 • கல்லீரலில் முதல்நிலை பித்தநீர்க் கரணை நோய் இருந்தால், கல்லீரல் செயல்பாட்டை அறியும் பரிசோதனைகளில் (LFTs) வழக்கத்துக்கு மாறான முடிவுகள் கிடைக்கும். மேலும், மைட்டோகாண்டீரியா எதிர்ப்பு ஆட்டோஆன்ட்டிபாடிகள் இருப்பதாகப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கும். இது, வழக்கமாக மஞ்சள் காமாலை மற்றும் கடுமையான தோல் அரிப்பு உள்ள நடுத்தர வயது பெண்ணிடத்தில் இருக்கிறது.
 • சிறுநீர் பகுப்பாய்வு ஆனது கற்கள் அல்லது வேகமாகப் பரவக்கூடிய புற்றுத்தன்மை போன்ற, நுண்ணிய இரத்தப்போக்கை ஏற்படுத்துகிற சிறுநீரக நுணுகுழல் அழற்சி அல்லது ஒரு புண் உள்படச் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று இருப்பதைப் பரிந்துரைக்கலாம்.
 • மார்பு எக்ஸ்-ரே (CXR) மற்றும் பக்கவாட்டுக் காட்சியானது, வலதுக் கீழ்புற மடலில் ஒரு புண் இருப்பதைக் காட்டலாம். நோய்த்தொற்றினால் ஏற்படுகின்ற நுரையீரல் செயலிழப்பும், இரத்த ஒட்டத்தடையால், திசு இறப்புக் காரணமாக ஏற்படுகின்ற நுரையீரல் செயலிழப்பும் ஒரேமாதிரி தோற்றமளிக்கும். அடிவயிற்று எக்ஸ்-ரே சாதாரணக் கதிர்வீச்சுப் படங்கள், நிமிர்ந்த மற்றும் மல்லாந்த நிலை படங்கள் வழக்கத்துக்கு மாறான குடல் உரு அமைப்புகளையும், இடைத்திரைக்குக் கீழ் உள்ள திரவ அல்லது வாயு அளவுகளையும் காட்டும். சிறுநீரகக் கற்களில் 70% மற்றும் பித்தப்பைக் கற்களில் 30% கதிர்வீச்சு புகாதவை ஆகும்.
 • பெருங்குடல் சார்ந்த புண்களுக்கு “பெருங்குடல் அகநோக்கல்” அல்லது “இரட்டை வேறுபாட்டுப் பேரியம் எனிமா” மருத்துவ நடைமுறை தேவைப்படலாம்.
 • சிறுநீரகப் பாதையில் கற்கள் அல்லது விரிவுறுதல் பற்றி ஆய்வு செய்வதற்கு அல்ட்ராசவுண்டு பயனுள்ளதாக இருக்கிறது. இதுவே, பித்தப்பைக் கற்களைக் கண்டறிவதற்கான சிறந்த வழியாகும்.[7] இதை, கல்லீரல் பெரிதாக்கத்தைச் சரிபார்ப்பதற்கும், அதில் ஏதாவது ஒருமைச்சீரான உருவகையோ அல்லது வெவ்வேறு எதிரொலி அடர்த்தியைக் கொண்ட பகுதிகளோ உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும்.
 • முதுகுத்தண்டை ஆய்வு செய்வதற்கு, சிடி ஸ்கேன் (CT scan) நல்லது. இது, எலும்பின் புண்களை வெளிப்படுத்திக் காட்டுகிறது; எனினும், நரம்பு மண்டலத்தில் உள்ள புண்களைக் காட்டுவதற்கு எம்ஆர்ஐ ஸ்கேன் (MRI scan) சிறந்தது.
 • அடிவயிற்று சிடி அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் (CT or MRI scan) ஒரு புண்ணை வரையறுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கலாம். அதிக உடல் எடை கொண்ட மக்களிடத்தில், அல்ட்ராசவுண்டு (ultrasound) சோதனையைச் செய்வது கடினமாக இருக்கலாம். இத்தகைய நேர்வில், எம்ஆர்ஐ ஸ்கேன்னிங் ஆனது அல்ட்ராசவுண்டு சோதனையை ஒத்த முடிவுகளைத் தருகிறது.[8] கதிரியக்க ஐசோட்டோப் படிமமாக்கல் (Radio-isotope imaging) ஆனது கல்லீரலையும் மண்ணீரலையும் காட்டும்.
 • கர்ப்பக் காலத்தில், எம்ஆர்ஐ ஸ்கேன்னிங் மிகவும் விரும்பப்படும் விருப்பத்தேர்வாக உள்ளது. எனினும், சிடி ஸ்கேன்னிங் குறிப்பிட்ட நேர்வுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு, இது உள்ளுறுப்புக்கல் காரணமாக, சந்தேகத்திற்கிடமான சிறுநீர்ப் பாதையின் அடைப்பைக் கொண்டுள்ள நோயாளிகளின் நோயறிவதற்கு மிகவும் நம்பகமான முறையாக உள்ளது. சிடி ஸ்கேன்னிங்கில் சம்பந்தப்பட்டுள்ள அயனியாக்குக் கதிர்வீச்சில் இருந்து வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏற்படும் இடரானது மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கின்றன. சிடி ஸ்கேன்னிங் எடுப்பது நோயாளியின் சிறந்த நலன்களுக்கு சாதகமாக இருக்கும் என ஒரு இடர்-பலன் பகுப்பாய்வு உறுதிப்படுத்துகிறது எனில், அது எடுக்கப்படாமல் இருக்கக்கூடாது.

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Further reading and references

 1. Zimmerman MA, Cameron AM, Ghobrial RM; Budd-Chiari syndrome. Clin Liver Dis. 2006 May10(2):259-73, viii.

 2. Peter NG, Clark LR, Jaeger JR; Fitz-Hugh-Curtis syndrome: a diagnosis to consider in women with right upper quadrant pain. Cleve Clin J Med. 2004 Mar71(3):233-9.

 3. Steingrub JS; Pregnancy-associated severe liver dysfunction. Crit Care Clin. 2004 Oct20(4):763-76, xi.

 4. Elgendy AY, Mahmoud A, Elgendy IY; Abdominal pain and swelling as an initial presentation of spinal tuberculosis. BMJ Case Rep. 2014 Feb 192014. pii: bcr2013202550. doi: 10.1136/bcr-2013-202550.

 5. Dimeo FC, Peters J, Guderian H; Abdominal pain in long distance runners: case report and analysis of the literature. Br J Sports Med. 2004 Oct38(5):E24.

 6. Kim JS; Acute Abdominal Pain in Children. Pediatr Gastroenterol Hepatol Nutr. 2013 Dec16(4):219-224. Epub 2013 Dec 31.

 7. Miller AH, Pepe PE, Brockman CR, et al; ED ultrasound in hepatobiliary disease. J Emerg Med. 2006 Jan30(1):69-74.

 8. Oh KY, Gilfeather M, Kennedy A, et al; Limited abdominal MRI in the evaluation of acute right upper quadrant pain. Abdom Imaging. 2003 Sep-Oct28(5):643-51.

newnav-downnewnav-up