இருமல் மருந்துகள் Cough Medicines
மேல் மூச்சுக்குழாயில் தொற்று (URTI) ஏற்படும்போது உண்டாகும் இருமலை, இருமல் மருந்துகள் மூலம் சரி செய்வதற்கு இது பொதுவாக வாங்கப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் இந்த இருமல்கள், வறட்டு (உலர்ந்த) இருமல் மற்றும் மார்பக இருமல் என்று இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இருமல் மருந்துகள் உண்மையில் வேலை செய்வதில்லை என்று கருதப்படுகிறது. எப்படி இருந்தாலும், சிலர் ‘அவர்களுக்கு இது வேலை செய்கிறது’ என்று நினைக்கிறார்கள், மேலும் இது பாதுகாப்பான மருந்து என்றும் நினைக்கிறார்கள். 6 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு கிளிசரின், தேன் மற்றும் எலுமிச்சை சாறு போன்றவற்றினை கலந்த எளிய கலவையினைத்தான் இருமலுக்கு கொடுக்க வேண்டும்.
இருமல் என்றால் என்ன?
நுரையீரலில் இருந்து காற்று வெளியே வரும் பாதையில், ஏதேனும் எரிச்சல் ஏற்படும்போது தானாக (நிர்பந்தமான) இருமல் உண்டாகிறது. நுரையீரலில் உள்ள சுவாசப்பாதைகளை எரிச்சலூட்டுவதற்கென, பலவிதமான காரணிகள் உள்ளன – உதாரணமாக, அதிகப்படியான கசிவுகள், தொற்றுகள், எரிச்சலூட்டும் வாயுக்கள், மற்றும் ஒவ்வாத பொருட்கள் அல்லது அளவுக்கதிகமான தூசுகள், அல்லது புகை.
இருமல் ஏதேனும் ஏற்பட்டால், Upper Respiratory Tract Infection (URTI) (மேல் மூச்சுக்குழாயில் தொற்று (யூஆர்டிஐ)) உள்ளதென்பதற்கான முக்கிய அறிகுறியாகும். எப்படி இருந்தாலும், இருமல் ஏற்படுவதற்கான பிற அறிகுறிகளாக கருதப்படும் நிலைகள், ஆஸ்துமா அல்லது பிற நுரையீரல் நோய்கள்.
Coughs caused by an URTI (யூஆர்டிஐ - ஆல் எற்படும் இருமல்களுக்கான) சிகிச்சைக்கு இருமல் மருந்துகளை எப்போது தரவேண்டும் என்பதை பற்றி மட்டும்தான் துண்டு பிரசுரத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்த இருமலினால் வேறு எந்த தீவிரமான விளைவுகளோ அல்லது மற்ற விளைவுகளோ உங்களுக்கு ஏற்படாது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பதாக கருதப்படுகிறது. உங்களுக்கு அப்படி எந்த மன உறுதியும் இல்லை என்றால் மருத்துவ ஆலோசனையினை பெறவும்.
யூஆர்டிஐ (URTI)–ஆல் உங்களுக்கு ஏற்படும் இருமல், பொதுவாக மார்பக இருமல் அல்லது வறட்டு (உலர்ந்த) இருமல் என்று இரு வகையாக விவரிக்கப்படுகிறது. உங்களுக்கு மார்பக இருமல் எப்படி ஏற்படுகிறது என்றால், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்தொற்றின் காரணமாக உங்களுடைய நுரையீரலானது வழக்கத்திற்கு மாறாக அதிகமான கபத்தினை (சளி) கொண்டு இருக்கும், எனவே, இந்த அதிகப்படியான சளியினால் உங்களுக்கு மார்பக இருமல் (நெஞ்சு இருமல்) ஏற்படுகிறது. உங்களுக்கு வறட்டு இருமல் உள்ளது எனில், அடிக்கடி இடைவிடாது வறட்டு இருமல் இருக்கும், ஆனால் அதில் சளி இருக்காது.
மேல் மூச்சுக்குழாய் தொற்று (URTI) என்றால் என்ன?
தொண்டை (குரல்வளை / லேரின்க்ஸ் (larynx)), அல்லது முக்கிய சுவாசப்பாதை (மூச்சுக்குழாய் / ட்ரேச்சியா (trachea)), அல்லது நுரையீரல்களுக்கு செல்லும் சுவாசப்பாதை (ப்ரோன்ச்சி (bronchi)/ மூச்சுக்குழல்), இவற்றில் ஏற்படும் நோய்தொற்றுக்கள் எல்லாம் பொதுவானவை. இந்த நோய்தொற்றுக்கள் சில சமயம் லேரிங்கிட்டீஸ் (laryngitis), ட்ரேச்சிட்டீஸ் (tracheitis), அல்லது ப்ரோன்ச்சிட்டீஸ் (bronchitis) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய்தொற்றுக்களில், ஏதேனும் ஒன்று அல்லது எல்லாவற்றிற்கும் மருத்துவர்கள் ‘மேல் மூச்சுக்குழாய் தொற்று (யூஆர்டிஐ)’ என்ற வார்த்தையினை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான URTI-க்கள் வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது. சளியின் அறிகுறிகளான நோய்தொற்றானது, ஒருவேளை மூக்கினையும் கூட பாதிக்கலாம்.
இந்த அறிகுறிகள் பொதுவாக 2-லிருந்து 3 நாட்கள் வரை அதிகமாக இருக்கும், பிறகு மெதுவாக குறைந்து தானாகவே சரியாகிவிடும். இருந்தாலும், நோய் தொற்றானது போய்விட்டாலும் கூட இருமல் தொடர்ந்து இருக்கும். இதற்கான காரணம், சுவாசப்பாதையில் உண்டான வீக்கமானது சரியாக சிறிது காலம் ஆகும். இருமல் முழுவதும் குணமாவதற்கும், இந்த அறிகுறிகள் முழுமையாக நீங்குவதற்கும், சுமார் 2-லிருந்து 3 வாரங்கள் ஆகலாம்.
இருமலுக்கான மருந்துகள் எவை?
இருமல் மருந்துகள், ஒரு மருந்துகளின் குழு ஆகும். இதன் நோக்கம் என்னவென்றால், வறட்டு இருமலை அடக்கவும் அல்லது உங்களுக்கு மேல் மூச்சுக்குழாய் தொற்று (URTI) இருக்கும் போது ஏற்படும் அதிகமான கபத்தினை (சளி) கொண்ட மார்பக இருமலை அடக்குவதற்கும் இது உதவுகிறது. இருமல் மருந்துகளின் நோக்கம் , வறட்டு இருமலை அடக்குவதற்கு உதவுவது, இது சில சமயங்களில் ஆண்டிடுஸ்ஸிவ்ஸ் (antitussives) (இருமல் அடக்கி) என்றும் அழைக்கப்படும் மற்றும் அதிகப்படியான சளியினால் ஏற்படும் இருமலில் சளியினை அகற்றுவதற்கு உதவுவது, இது சில சமயங்களில் எக்ஸ்பெக்ட்ரோனட்ஸ் (expectorants) (கோழை / சளி அகற்றி) என்றும் அழைக்கப்படும்.
மருந்து கடைகள் அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்குவதற்கென்றே ஏராளமான இருமல் மருந்துகள் இருக்கின்றன. பின்வருபவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவைகளை அவை கொண்டுள்ளன:
- ஆண்டிடுஸ்ஸிவ் (Antitussive) (இருமல் அடக்கி) – உதாரணத்திற்கு, டெக்ஸ்ட்ரோமெத்தொர்பேன் (dextromethorphan) அல்லது போல்கொடைன் (pholcodine).
- எக்ஸ்பெக்ட்ரோனட் (Expectorant) (கோழை / சளி அகற்றி) – உதாரணத்திற்கு, குவைஃபெனிசின் (guaifenesin) அல்லது ஐபெககுவன்ஹா (ipecacuanha).
- ஆண்டிஹிஸ்டமைன் (Antihistamine) - ப்ரோம்பெனிராமைன் (brompheniramine), குளோர்பெனமைன் (chlorphenamine), டைபென்ஹைட்ரமைன் (diphenhydramine), டாக்ஸிலாமைன் (doxylamine), ப்ரோமேத்தசைன் (promethazine) அல்லது டிரைப்ரோலிடைன் (triprolidine).
- டிகாங்கெஸ்டண்ட் (decongestant) (மூச்சடைப்பை நீக்கும் மருந்து) - உதாரணத்திற்கு, பெனிலேப்ரைன் (phenylephrine), சூடோபெட்ரைன் (pseudoephedrine), எபெட்ரைன் (ephedrine), ஆக்ஸிமெட்டாஜொலைன் (oxymetazoline) அல்லது ஸைலோமெட்டாஜொலைன் (xylometazoline).
கிளிசரின், தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த இருமல் மருந்தானது வாங்குவதற்கும் கிடைக்கிறது. இந்த தயாரிப்பில் வினைபுரியும் பொருட்கள் எதுவும் இல்லை. இது ஒரு ஆறுதலான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இருமல் மருந்துகளில், பிற மருந்துகளும் இருக்கின்றன. அதாவது பேராசிட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரோஃபென் (ibuprofen). சிலவற்றில் ஆல்கஹாலும் கலந்து இருக்கும்.
இருமல் மருந்துகள் எப்படி வேலை செய்கிறது?
இருமல் மருந்துகள் பல்வேறு வழிகளில் வேலை செய்வதாக கருதப்படுகிறது, அதில் எந்தவிதமான வினைதிறன்மிக்க பொருட்கள் இருக்கிறதென்றால்:
- ஆண்டிடுஸ்ஸிவ்ஸ் (Antitussives) (இருமல் அடக்கிகள்) ஆனது இருமலினால் ஏற்படும் நிர்பந்தத்தை குறைப்பதற்காக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.
- எக்ஸ்பெக்ட்ரோனட்ஸ் (Expectorants) (கோழை / சளி அகற்றி), நுரையீரல்களில் அளவுக்கு அதிகமாக கபத்தினை ஏற்படுத்துவதாக கூறுவார்கள். ஆனால் இது இருமல் மூலமாக சுரக்கும் சளியினை எளிதாக அகற்றுகிறது.
- ஆண்டிஹிஸ்டமைன்ஸ் (Antihistamines) (ஒவ்வாமையில் இருந்து பாதுகாக்கும் பொருள்) ஆனது ஒவ்வாமையினை குறைத்து அதில் இருந்து விடுவிக்கிறது. மேலும் இது நெருக்கடியினை குறைப்பதோடு, நுரையீரலினால் ஏற்படும் சுரப்பினை அதிக அளவில் குறைக்கிறது.
- டிகாங்கெஸ்டண்ட் (Decongestants ) (மூச்சடைப்பை நீக்கும் மருந்து) ஆனது நுரையீரல்களில் இருக்கும் இரத்த நாளங்கள் மற்றும் மூக்கில் இருக்கும் இரத்த நாளங்களை குறுகலானதாக்குகிறது (சுருங்கச்செய்கிறது), மேலும் இது நெரிசலையும் குறைக்கிறது.
இருமல் மருந்துகள் உண்மையிலேயே வேலை செய்கிறதா?
இருமல் மருந்துகள் வேலை செய்வதற்கான நல்ல சான்றுகள் எதுவும் ஆராய்ச்சியின் மூலமாக கிடைக்கவில்லை. இருமலின் (அல்லது சளியின்) அறிகுறிகளினால் அவர்களுக்கு ஒரு சிறிய நன்மை உள்ளது என்று கருதப்படுகிறது. எப்படி இருந்தாலும், சிலபேர் இந்த மருந்துகள் வேலை செய்கின்றன' என்று நினைக்கின்றனர் மற்றும் இந்த மருந்துகள் 6 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கும், இள வயதினருக்கும் ஏற்றது என்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிறார்கள்.
எந்த இருமல் மருந்தினை நான் வாங்க வேண்டும்?
உங்களுக்கு வறட்டு இருமல் இருந்தால், ஆண்டிடுஸ்ஸிவ் (antitussive) (இருமல் அடக்கிகள்) தயாரிப்பான டெக்ஸ்ட்ரோமெத்தொர்பேன் (dextromethorphan) அல்லது போல்கொடைன் (pholcodine), இதில் எது பொருந்துமோ அதைக்கொண்டு முயற்சிக்கலாம். உங்களுக்கு மார்பக இருமல் இருந்தால், எக்ஸ்பெக்ட்ரோனட் (expectorant) (கோழை / சளி அகற்றி) தயாரிப்பான குவைஃபெனிசின் (guaifenesin) அல்லது ஐபெககுவன்ஹா (ipecacuanha), இதில் எது பொருந்துமோ, அதைக் கொண்டு முயற்சிக்கலாம். உங்களுக்கு பொருத்தமானது எது என்பதை உங்களுடைய மருந்து கடைக்காரர் சொல்லுவார். நீங்கள் இந்த மருந்துகளை சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கினால், அவர்கள் அந்த மருந்து பெட்டிகளின் மீது, இந்த மருந்துகள் எந்த விதமான இருமலுக்கு உதவும் என்பதை தெளிவான விளக்கத்தினை கொண்ட ஒரு லேபிளை ஒட்டி இருப்பார்கள்.
சில அவசியமாக பரிசீலிக்கப்படவேண்டியவை
இருமல் மருந்துகளை பற்றிய சில முக்கியமான பரிசீலனைகள்:
- அவர்கள் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளாக இருக்கும் போது.
- பிற மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது.
6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்
6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளாக இருக்கும் போது, அவர்களுக்கு கிளிசரின், தேன் மற்றும் எழுமிச்சை சாறு கலந்த எளிய கலவையினை மட்டுமே தர வேண்டும். மேலே பட்டியலில் கூறப்பட்டுள்ள வினைதிறன் மிகுந்த பொருட்களை (ஆண்டிடுஸ்ஸிவ்ஸ் (antitussives) (இருமல் அடக்கிகள்), எக்ஸ்பெக்ட்ரோனட்ஸ் (expectorants) (கோழை / சளி அகற்றி), ஆண்டிஹிஸ்டமைன்ஸ் (antihistamines) (ஒவ்வாமையில் இருந்து பாதுகாக்கும் பொருள்), அல்லது டிகாங்கெஸ்டண்ட் (decongestants) (மூச்சடைப்பை நீக்கும் மருந்து)) கொண்டுள்ள இருமல் மருந்துகள் எதையும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் யாருக்கும் கொடுக்கக்கூடாது. ஏனென்றால் இந்த மருந்துகளை உட்கொள்வதால் மிகவும் தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படும், ஆனால் மேலே கூறிய எளிய தயாரிப்பினால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. நன்மைகள் மட்டும்தான் ஏற்படும்.
மற்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது
ஒருவேளை நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் சூப்பர்மார்க்கெட் அல்லது வேதியியலாளரிடம் இருப்பதை பார்க்க நேர்ந்தால் அதை வாங்கி பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்பதை, அந்த மருந்தினை வாங்குவதற்கு முன்பே உங்களுடைய மருந்து கடைக்காரரிடம் எப்போதும் கேட்டு சரிபார்த்துக்கொள்ளவும்.
சில இருமல் மருந்துகளில் பிற மருந்துகளும் இருக்கின்றன. உதாரணமாக, சிலவற்றில் பேராசிட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரோஃபென் (ibuprofen) இருக்கும் மற்றும் சிலவற்றில் ஆல்கஹாலும் கலந்து இருக்கும். உங்களுடைய நோய்தொற்றின் அறிகுறிகளுக்கு (உதாரணமாக, அதிக உடல் வெப்ப நிலை) உதவுவதற்காக, நீங்கள் ஏற்கனவே பேராசிட்டமால் அல்லது இபுப்ரோஃபென் (ibuprofen)-யை எடுத்துக்கொண்டிருந்தால் அதன் முக்கியத்துவத்தினை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் உங்களுக்கே தெரியாமல் அளவுக்கதிகமாக பேராசிட்டமால் அல்லது இபுப்ரோஃபெனை (ibuprofen) நீங்கள் எடுத்துக்கொண்டிருந்தால், உங்களுடைய சிறுநீரகமானது பாதிக்கப்படும்.
நீங்கள் குறிப்பிட்ட வகையினை கொண்ட ஆண்ட்டிப்ரஸன்ட் (antidepressant)-யை எடுத்துக்கொள்ளும் போது – அதாவது மோனோமைன் – ஆக்ஸிடேஸ் – இன்ஹிபிட்டார்ஸ் (monoamine-oxidase inhibitors (MAOI)) –இந்த மருந்தானது சில குறிப்பிட்ட இருமல் மருந்துகளின் பொருட்களுடன் பொருந்தி செயல்புரிகிறது. இந்த இரண்டையும் சேர்த்து உபயோகிக்கும் போது உங்களுடைய இரத்த அழுத்தமானது (உயர் இரத்த அழுத்த நெருக்கடி) உடனடியாக அதிகரிக்கும், அல்லது உங்களை அதிக உணர்ச்சிவசப்படுபவராக செய்யும் அல்லது மனச்சோர்வு மிக்கவராக செய்யும். குறிப்பாக, மக்கள் எம்ஏஒஐ ஆண்ட்டிப்ரஸன்ட் (MAOI antidepressant) எடுத்துக்கொள்ளும்போது, டெக்ஸ்ட்ரோமெத்ரோபேன் (dextromethorphan), எபெட்ரைன் (ephedrine), சூடோஎபிட்ரைன் (pseudoephedrine)அல்லது பெனில்ப்ரொபனொல்மைன் (phenylpropanolamine) போன்றவற்றினை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் இரண்டு வாரங்களுக்கு பிறகு இவற்றை நிறுத்தியது:
- எம்ஏஒஐ ஆண்ட்டிப்ரஸன்ட் (MAOI antidepressant) உடன் டெக்ஸ்ட்ரோமெத்ரோபேன் (Dextromethorphan) – யை எடுத்துக்கொள்ளும்போது இது உங்களை அதிக உணர்ச்சிவசப்படுபவராக அல்லது மனச்சோர்வு மிக்கவராக செய்யும்.
- எபெட்ரைன் (Ephedrine), சூடோஎபிட்ரைன் (pseudoephedrine) மற்றும் பெனில்ப்ரொபனொல்மைன் (phenylpropanolamine), போன்றவற்றினை எம்ஏஒஐ ஆண்ட்டிப்ரஸன் (MAOI antidepressant) உடன் எடுத்துக்கொள்ளும்போது, ஒருவேளை இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகலாம்.
இதனால் ஏற்படக்கூடைய சாத்தியமான பக்க விளைவுகள் என்ன?
இருமல் மருந்துகளை உட்கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை. சில இருமல் தயாரிப்புகள் (உதாரணமாக, போல்கொடைன் (pholcodine) மற்றும் டைபென்ஹைட்ரமைன் (diphenhydramine)) அரைத்தூக்க நிலையினை ஏற்படுத்தும். நீங்கள் இருமல் மருந்துகளை எடுத்துக்கொண்ட பின்பு தூக்கம் வருவது போல உணர்ந்தால், அந்த சமயம் கண்டிப்பாக வண்டியினை ஓட்டக்கூடாது அல்லது இயந்திரங்களை இயக்கக்கூடாது. உங்களுடைய மருந்துகளுடன் வரும் துண்டு பிரசுரத்தில், இந்த மருந்தினை உட்கொண்டால் தூக்கம் வரும் என்று குறிப்பிட்டு இருக்கும்.
போல்கொடைன் (Pholcodine) மருந்து மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
குறிப்பு: இந்த மருந்துகளுக்கான பக்க விளைவுகளின் முழு பட்டியல் மேலே குறிப்பிடப்படவில்லை. உங்களுடைய குறிப்பிட்ட பிராண்டுடன் வரும் துண்டுப் பிரசுரத்தில் சாத்தியமான பக்கவிளைவுகள் மற்றும் எச்சரிக்கைகளின் முழுவிவர பட்டியலை தயவு செய்து பார்க்கவும்.
இந்த சிகிச்சைக்கான வழக்கமான கால அளவு என்ன?
அனைத்து மருந்துகளைப் போலவே, இருமல் மருந்துகளை தேவைப்பட்டால் குறுகிய காலத்திற்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றும் பெரும்பாலான மக்களுக்கு ஒரு சில நாட்களுக்கு மட்டும், இருமல் மருந்தினை பயன்படுத்தினால் போதும். பொதுவாக, பெரும்பாலான இருமல்கள் எல்லாம் 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கும். உங்களுடைய இருமல் சரியாகாமல் தொடர்ந்து இருந்தால், நீங்கள் கட்டாயம் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.
யாரெல்லாம் இருமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது?
பெரும் பாலானவர்கள் இருமல் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இதற்கு விதிவிலக்கானவர்கள். 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வினை புரியும் பொருட்கள் இல்லாத மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் – உதாரணமாக, கிளிசரின், தேன் மற்றும் எழுமிச்சை சாறு. நீங்கள் வேறு ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொண்டாலோ அல்லது நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து இருமல் மருந்துதானா என்பதை உறுதி செய்து கொள்வதற்கு, உங்களுடைய மருந்து கடைக்காரரிடம் இதை சரிபார்க்கவும்.
மஞ்சள் அட்டை திட்டத்தினை (Yellow Card Scheme) எப்படி பயன்படுத்துவது (ஐக்கிய அரசாட்சிக்குட்பட்ட நாடுகளைச் சேர்ந்த (United Kingdom) மக்களுக்கு மட்டும்)
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளினால் ஏதேனும் ஒரு பக்க விளைவு ஏற்பட்டிருப்பதாக நினைத்தால், இதை மஞ்சள் அட்டை திட்டத்தின் மூலமாக நீங்கள் புகாரளிக்கலாம். இதை நீங்கள் பின்வரும் வலைதளத்தில் ஆன்லைனில் கூட புகாரளிக்கலாம்: www.mhra.gov.uk/yellowcard.
உங்களுடைய மருந்துகளினால் ஏதேனும் புதிய பக்க விளைவுகள் ஏற்பட்டாலோ அல்லது மற்ற சுகாதார பொருட்களின் மூலமாக ஏற்பட்டாலோ, இந்த மஞ்சள் அட்டை திட்டத்தின் மூலமாக மருந்து கடைக்காரர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எல்லாம் இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவுகிறது. நீங்கள் இந்த பக்க விளைவினை பற்றி தெரிவிக்க விரும்பினால், நீங்கள் அடிப்படை தகவலை கொடுக்க வேண்டும்:
- பக்க விளைவு.
- இந்த மருந்துதான் இதை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் நினைக்கும் மருந்தின் பெயர்.
- பக்க விளைவினை கொண்ட நபர்.
- பக்க விளைவினை கொண்ட நபரின் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்.
அறிக்கையினை பூர்த்தி செய்வதற்கு உங்களுடைய மருத்துவ அறிக்கை மற்றும்/அல்லது துண்டுப்பிரசுரம் ஏதாவதை நீங்கள் உங்களுடன் கொண்டு வைத்திருந்தால், அது உதவிகரமாக இருக்கும்.
பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.
Further reading and references
Over-the-counter cough and cold medicines for children; Medicines and Healthcare products Regulatory Agency (MHRA), 2009
Common cold; NICE CKS, November 2011 (UK access only)
British National Formulary; NICE Evidence Services (UK access only)
Smith SM, Schroeder K, Fahey T; Over-the-counter (OTC) medications for acute cough in children and adults in community settings. Cochrane Database Syst Rev. 2014 Nov 2411:CD001831. doi: 10.1002/14651858.CD001831.pub5.