பெண்களின் இடுப்பெலும்பு வலி Pelvic Pain in Women in Tamil

Authored by , Reviewed by Dr Hannah Gronow | Last edited

இடுப்பெலும்பு வலி பெண்களில் மிகவும் பொதுவானது. உங்கள் இடுப்பெலும்பில் ஏற்படும் வலிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை எப்பொழுது ஏற்படுகின்றன என்பதைப் பொறுத்து பிரிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் கர்ப்பமாக இருத்தல் மற்றும் யோனியில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படுதல் போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து இருத்தல். இடுப்பு வலிக்கான பொதுவான காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும்பாலானவை வலி நிவாரணிகளுடன் மேம்படுகின்றன. பெரும்பாலான தொடர்ச்சியாக ஏற்படும் காரணங்களுக்கு, சிகிச்சைகள் கிடைக்கப் பெறுகின்றன.

இடுப்பெலும்பு என்பது உங்கள் வயிற்றின் மிக அடிப் பகுதியாகும் (அடிவயிறு). இடுப்பெலும்பானது உங்கள் குடல், சிறுநீர்ப்பை, கருப்பை (கர்ப்பப்பை) மற்றும் கருப்பைகள் ஆகிய உறுப்புகளை உள்ளடக்கும். இடுப்பெலும்புக்குரிய வலி, பொதுவாக இந்த உறுப்புகளுள் ஒன்றிலிருந்து தொடங்குகிறது. சில சமயங்களில் இந்த உறுப்புகளுக்கு அருகிலுள்ள இடுப்பெலும்பு அல்லது அருகிலுள்ள தசைகள், நரம்புகள், இரத்த நாளங்கள் அல்லது மூட்டுகளில் இருந்து வலி ஏற்படுகிறது. எனவே, இடுப்பெலும்புக்குரிய வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

இடுப்பெலும்பு வலி பொதுவாக ஆண்களை விட பெண்களில் அதிகம் ஏற்படுகிறது. இந்த துண்டுப்பிரசுரம் பெண்களுக்கு இடுப்பெலும்புக்குரிய வலி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களை கையாளுகிறது.

இடுப்பெலும்புக்குரிய வலி கடுமையானதாக அல்லது நாள்பட்டதாக இருக்கலாம். கடுமையானது என்றால், இந்த வகையான வலி உங்களுக்கு முதல் முறையாக ஏற்படுகிறது என்று அர்த்தம். நாள்பட்டது என்றால், இந்த வலி நீண்ட காலமாக அதாவது - ஆறு மாதங்களுக்கு மேலாக ஒரு பிரச்சினையாக இருந்துள்ளது என்று அர்த்தம்.

கருச்சிதைவு: கருச்சிதைவு என்பது 24-வது வாரம் வரை எந்த நேரத்திலும் ஏற்படும் கர்ப்பத்தின் இழப்பு ஆகும். 10-இல் 7 அல்லது 8 கருச்சிதைவுகள் கர்ப்பத்தின் 13 வாரங்களுக்கு முன் ஏற்படுகிறது. கருச்சிதைவின் வழக்கமான அறிகுறிகள் யோனியில் இருந்து இரத்தப்போக்கு மற்றும் அடிவயிறு (அடிவயிற்று) அல்லது இடுப்பெலும்பில் தசைப்பிடிப்புகள் ஆகும். அதன் பிறகு உங்கள் யோனியிலிருந்து இரத்த உறைவைப் போல தோற்றமளிக்கும் சில திசுக்கள் வெளியேறலாம். See separate leaflet called Miscarriage and Bleeding in Early Pregnancy for more details (மேலும் விவரங்களுக்கு கருச்சிதைவு மற்றும் ஆரம்பகால கர்ப்பத்தில் இரத்தப்போக்கு என்ற தனி துண்டுப்பிரசுரத்தை காணவும்).

எக்டோபிக் (இடம் மாறிய) கர்ப்பம்: எக்டோபிக் கர்ப்பம் என்பது கருப்பைக்கு (கர்ப்பப்பை) வெளியே உருவாக முயற்சிக்கும் ஒரு கர்ப்பமாகும். இது 100-க்கு 1 கர்ப்பத்தில் நிகழ்கிறது. வழக்கமான அறிகுறிகள் அடிவயிற்றின் ஒரு பக்கத்தில் அல்லது இடுப்பெலும்பில் வலி ஆகியவற்றை உள்ளடக்கும். இது தீவிரமாக வளரலாம், அல்லது பல நாட்களுக்கு பிறகு மெதுவாக மோசமடையலாம். இது கடுமையானதாகிவிடலாம். பெரும்பாலும் யோனியில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது, ஆனால் எப்போதும் அல்ல. இது பெரும்பாலும் மாதவிடாய் இரத்தப்போக்கை விட கருமை நிறமாக இருக்கும்.See separate leaflet called Ectopic Pregnancy for more details (மேலும் விவரங்களுக்கு எக்டோபிக் கர்ப்பம் என்ற தனி துண்டுப்பிரசுரத்தை காணவும்).

கார்ப்பஸ் லுட்டியம் நீர்க்கட்டியின் முறிவு: கார்ப்பஸ் லுட்டியம், நஞ்சுக்கொடி போன்ற பிற உறுப்புகள் பொறுப்பேற்றுக் கொள்ளும் வரை உங்கள் கர்ப்பத்தை தக்க வைத்திருக்க உதவும் ஹார்மோன்களை உருவாக்குகிறது. கருமுட்டை வெளிப்படுதலின் போது முட்டை வெளியான பிறகு இது உருவாகிறது. ஏதாவது காரணத்திற்காக, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது, தற்செயலாக அறியப்படுகின்றன. அவை பெரும்பாலும் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாமல் சிகிச்சை இன்றி மறைந்து விடுகின்றன. சில நேரங்களில் அது மிகவும் வீங்கி வெடிக்கலாம். இது உங்கள் இடுப்பெலும்பின் ஒரு பக்கத்தில் கடுமையான வலியை ஏற்படுத்தலாம். உங்கள் கர்ப்பத்தின் முதல் 12 வாரங்களில் உங்கள் இடுப்பெலும்பில் வலி இருந்தால், உங்களுடைய மருத்துவரைப் பார்க்கவும்.

குறைப்பிரசவ மகப்பேறு: சாதாரணமாக கர்ப்பத்தின் 37 வாரங்களுக்கு பிறகு மகப்பேறு தொடங்குகிறது. பொதுவாக அடிவயிறு முழுவதும் இறுக்கமான உணர்வுகளாக இயல்பான மகப்பேறு தொடங்குகிறது. இவை மேலும் வலுவடைந்து இன்னும் அதிக வலி மிகுந்ததாகி நெருக்கமாகின்றன. உங்களுக்கு ஒரு ‘ஷோ’ கூட இருக்கலாம். இது கருப்பையின் கழுத்திலிருந்து (கருப்பை வாய்) சளி பிளக் ஆகும். உங்களுடைய யோனியிலிருந்து திரவம் பீறிட்டால், உங்களுடைய பனிக்குடம் உடைந்திருக்கலாம். உடனடியாக உங்கள் மகப்பேறு செவிலியை தொடர்பு கொள்ள வேண்டும். உங்களுக்கு வழக்கமான முறையில் விட்டு விட்டு இடுப்பெலும்புக்குரிய வலிகள் இருந்தால், ஆலோசனைக்கு உங்கள் மகப்பேறு செவிலியை தொடர்பு கொள்ளுங்கள். See separate leaflet called Premature Labour for more details (மேலும் விவரங்களுக்கு, குறைப்பிரசவ மகப்பேறு என்ற தனி துண்டுப்பிரசுரத்தை காணவும்).

நஞ்சுக்கொடி தகர்வு: அரிதாக (ஒவ்வொரு 1000 மகப்பேறுகளிலும் சுமார் 6 முறை), கருப்பையின் சுவரில் இருந்து நஞ்சுக்கொடி துண்டித்துக் கொள்கிறது. கர்ப்பத்தின் 24 வாரங்களுக்கு முன் இது ஒரு கருச்சிதைவு ஆகும்; இருப்பினும், 24 வாரங்களுக்கு பிறகு இது ஒரு தகர்வு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அவசர நிலை ஆகும். ஏனென்றால் குழந்தை உணவு மற்றும் ஆக்ஸிஜனுக்கு நஞ்சுக்கொடியை நம்பியிருக்கிறது. செயல்படும் நஞ்சுக்கொடி இல்லாமல், குழந்தை இறந்துவிடும். மகப்பேறு துறையிலுள்ள ஊழியர்கள் விரைவில் குழந்தையை பிறக்க வைக்க முயற்சிப்பார்கள். இது பொதுவாக அவசர சிசேரியன் பிரிவு மூலம் நடக்கும்.

மகளிர் நோய் மருத்துவ இயல் (கைனகாலஜிகல்) பிரச்சினைகள்

கருமுட்டை வெளிப்படுதல்: கருமுட்டை வெளிப்படுதல் என்றால் உங்கள் கருவகத்தில் இருந்து ஒரு முட்டை உற்பத்தி செய்வதாகும். ஒரு முட்டை வெளியிடப்படும் போது சில பெண்களுக்கு கடுமையான வலி ஏற்படுகிறது. இந்த கருமுட்டை வெளிப்படுதல் வலி 'மிட்டில்ஷ்மர்ஸ்' என்று அழைக்கப்படுகிறது (நடுத்தர வலி - ஏனெனில் இது சுழற்சிக்கு நடுவில் ஏற்படுகிறது). எந்த கருவகத்திலிருந்து முட்டை வெளிப்படுகிறது என்பதை பொறுத்து இந்த வலி ஒவ்வொரு மாதமும் வேறொரு பக்கத்தில் ஏற்படலாம். இந்த வலி ஒரு சில மணி நேரம் நீடிக்கும் ஆனால் சில பெண்களுக்கு அது கடுமையானதாக இருக்கும்.

மாதவிடாய் வலிகள் (டிஸ்மெனோரியா): பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் மாதவிடாயின்போது சில வலிகள் ஏற்படும். இந்த வலி பெரும்பாலும் லேசானதாக இருக்கும், ஆனால், 10 பெண்களில் சுமார் ஒருவருக்கு அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அளவிற்கு வலி மிகக் கடுமையானதாக இருக்கும். இந்த வலி அவர்கள் பள்ளி அல்லது வேலைக்கு செல்ல முடியாத அளவிற்கு மிகக் கடுமையானதாக இருக்கும். மருத்துவர்கள் மாதவிடாய் வலியை ‘டிஸ்மெனோரியா’ என அழைக்கலாம். See separate leaflet called Period Pain (Dysmenorrhoea) for more details (மேலும் விவரங்களுக்கு மாதவிடாய் வலி (டிஸ்மெனோரியா) என்ற தனி துண்டுப்பிரசுரத்தை காணவும்).

இடுப்பெலும்பு அழற்சி நோய் (PID): PID என்பது உங்கள் கர்ப்பத்தின் நோய்தொற்று ஆகும். நோய்தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் (பாக்டீரியா) பொதுவாக உங்கள் யோனி அல்லது கருப்பையின் வாயில் இருந்து கருப்பையினுள் பயணம் செய்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கிளாமிடியா அல்லது கொனோரியாவால் உண்டாகின்றன. PID-யின் அறிகுறிகள் உங்கள் அடிவயிற்றில் அல்லது இடுப்பெலும்பில் வலி, அதிக உஷ்ணநிலை (காய்ச்சல்), அசாதாரண யோனி இரத்தப்போக்கு மற்றும் யோனி வெளியேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கும். See separate leaflet called pelvic inflammatory disease (மேலும் விவரங்களுக்கு இடுப்பெலும்பு அழற்சி நோய் என்ற தனி துண்டுப்பிரசுரத்தைக் காணவும்).

கருப்பை நீர்க்கட்டியின் முறிவு அல்லது முறுக்குதல்: கருப்பை நீர்க்கட்டி என்பது ஒரு கருவகத்தில் உருவாகும் திரவம் நிறைந்த திசுப்பை ஆகும். பெரும்பாலான கருப்பை நீர்க்கட்டிகள் புற்றுநோய் உண்டாக்காதவை (தீங்கற்றவை) மற்றும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாதவை. சில திசுப்பைகள் வலி மற்றும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவை வெடிக்கும்பொழுது (முறிவு) அல்லது முறுக்கப்படும்பொழுது (முறுக்குதல் என்று அழைக்கப்படும்) வலி ஏற்படும். சில வகையான கருப்பை நீர்க்கட்டிகள் தாமாகவே மறைந்துவிடும் என்பதால் அவற்றிற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. See separate leaflet called ovarian cysts (மேலும் விவரங்களுக்கு, கருப்பை நீர்க்கட்டி என்ற தனி துண்டுப்பிரசுரத்தைக் காணவும்).

நார்த்திசுக் கட்டியில் ஏற்படும் சிதைவு மாற்றங்கள்: நார்த்திசுக் கட்டிகள் உங்கள் கர்ப்பத்தில் ஏற்படும் புற்றுநோய் அல்லாத வளர்ச்சிகள். அவை பொதுவானவை, மற்றும் பொதுவாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. எனினும், அவை சில நேரங்களில் கடுமையான மாதவிடாய்கள், அடிவயிற்று வீக்கம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அரிதாக, நார்த்திசுக்கட்டி அதன் இரத்த சப்ளையைக் காட்டிலும் அதிகமாக வளர்கிறது. இது வலி மிகுந்த சுருங்குதலை(சிதைவு) ஏற்படுத்தலாம். See separate leaflet called Fibroids for more details (மேலும் விவரங்களுக்கு நார்த்திசுக் கட்டிகள் என்ற தனி துண்டுப்பிரசுரத்தைக் காணவும்).

எண்டோமெட்ரியோசிஸ்: இந்த நிலை 13 மற்றும் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களில் காணப்படுகிறது. இது முப்பதுகளில் உள்ள பெண்களில் மிகவும் பொதுவாக கண்டறியப்படுகிறது. கருத்தரிப்பதில் சிக்கல் உள்ள பெண்களுக்கு இது மிகவும் பொதுவானதாகும். இத்தகைய பெண்களில் இது 5-ல் 1-வரில் காணப்படுகிறது. இது உங்கள் மாதவிடாய் காலத்தின் போது வலியை ஏற்படுத்துகிறது. நீங்கள் உடலுறவு கொள்ளும் போதும் இது வலியை ஏற்படுத்தலாம். See separate leaflet called endometriosis (மேலும் விவரங்களுக்கு எண்டோமெட்ரியோசிஸ் என்ற தனி துண்டுப்பிரசுரத்தைக் காணவும்).

Period pain

Most women regularly experience period pain, but it should not be severe. If your periods are becoming progressively more painful and heavy, it is a good idea to see your GP, especially if simple painkillers do not help in the way they used to.

— Dr Jennifer Kelly, GP, Could your period pain be endometriosis?

நாள்பட்ட இடுப்பெலும்பு வலி: இது ஒரு பெண்ணிற்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஏற்பட்ட வலியைக் குறிப்பதாகும். நாள்பட்ட இடுப்பெலும்பு வலி 6 பெண்களில் 1-வருக்கு ஏற்படுவதால் இது மிகவும் பொதுவானதாகும். சில நேரங்களில், (மேலே உள்ளவை போன்ற) ஏதேனும் ஒரு காரணம் கண்டறியப்படுகிறது, மற்றும் சில நேரங்களில் வெளிப்படையான காரணம் எதுவும் இல்லை. உங்கள் நீண்டகால இடுப்பெலும்பு வலியின் மூலத்தைக் கண்டறிய முடியுமானால், சிகிச்சையானது அந்த காரணத்தின் மீது கவனம் செலுத்துகிறது. சில பெண்கள் அவர்களின் வலியை விளக்கும் வகையில் நோயறிதலைப் பெறுவதில்லை. எந்த காரணமும் கண்டறியப்பட முடியாவிட்டால், உங்கள் சிகிச்சையானது வலியை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தும். நோயின் அறிகுறிகள் பற்றி நாட்குறிப்பேடு வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். இது வலியின் பாங்கு மற்றும் உங்கள் வாழ்வில் அதற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய தூண்டுதல்களையும் அடையாளம் காணலாம். மன அழுத்தம், நாட்பட்ட மன அழுத்தம் அல்லது பாலியல் அல்லது உடல் ரீதியான துஷ்பிரயோகத்தின் கடந்த கால வரலாறு ஆகியவை நீடித்த இடுப்பெலும்பு வலி ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, எந்தவொரு உணர்ச்சிவயப்பட்ட துயரமும் பெரும்பாலும் வலியை மோசமடையச் செய்கிறது மற்றும் நாட்பட்ட வலியுடன் வாழ்வது உணர்ச்சிவயப்பட்ட துயரத்தைத் தூண்டுகிறது. உங்கள் மருத்துவர் வலிக்கு உதவும் வகையில், மனநல சிகிச்சைகள் தரலாம் என்று கருதுவார். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள குறிப்புகளை காணவும்.

குடல் அல்லது சிறுநீர்ப்பை பிரச்சனைகள்

குடல்வால் அழற்சி: குடல்வால் அழற்சி என்பது, உங்கள் குடல்வாலில் உண்டாகும் அழற்சி ஆகும். குடல்வால் என்பது குடலின் சுவரிலிருந்து வரும் ஒரு சிறிய பை ஆகும். குடல்வால் அழற்சி பொதுவானது. வழக்கமான அறிகுறிகள் அடிவயிற்று வலி மற்றும் உடல்நலக்குறைவு (வாந்தி எடுத்தல்) ஆகியவற்றை உள்ளடக்கும். இது 6-24 மணி நேரத்திற்கு மேல் படிப்படியாக மோசமடைகின்றன. சிலருக்கு பொதுவான அறிகுறிகள் குறைவாக இருக்கும். அழற்சியுடைய குடல்வாலை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சையானது பொதுவாக அது வெடிப்பதற்கு (துளையிடுதல்) முன்னால் செய்யப்படுகிறது. ஒரு துளையிடப்பட்ட குடல்வால் மிகவும் தீவிரமானது. See separate leaflet called Appendicitis for more details (மேலும் விவரங்களுக்கு அப்பெண்டிசைட்டிஸ் என்ற தனி துண்டுப்பிரசுரத்தைக் காணவும்).

எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS): IBS ஒரு பொதுவான குடல் கோளாறு ஆகும். இதன் காரணம் அறியப்படவில்லை. அறிகுறிகள் மிகவும் மாறுபட்டவையாகவும் மற்றும் அடிவயிற்று வலி, உப்புதல், மற்றும் சில நேரங்களில் வயிற்றுப்போக்கு மற்றும்/அல்லது மலச்சிக்கல் ஆகிய பிணித்தாக்கங்களைக் கொண்டிருக்கலாம். அறிகுறிகள் வந்து போக முனைகின்றன. IBS-ஐ குணப்படுத்த முடியாது, ஆனால் சிகிச்சையுடன் அறிகுறிகளின் தாக்கத்தை பெரும்பாலும் குறைக்கலாம். See separate leaflet called Irritable Bowel Syndrome for more details (மேலும் விவரங்களுக்கு, எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி என அழைக்கப்படும் தனி துண்டுப்பிரசுரத்தைக் காணவும்).

சிறுநீர்ப்பை அழற்சி: இது சிறுநீர்ப்பையில் உண்டாகும் சிறுநீர் நோய்தொற்று ஆகும். பெண்களில் இது பொதுவானது. ஒரு சிறிய காலஅளவிற்கு, நுண்ணுயிர் எதிர்ப்பி (ஆண்டிபயாடிக்) மருந்து எடுத்துக்கொள்வது, பொதுவான சிகிச்சையாகும். இது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தேவை இல்லாமல் தன்னிச்சையாக குணமடையலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுநீர்ப்பை அழற்சி சிக்கல் இன்றி விரைவாக மறைந்து விடுகிறது. See separate leaflet called Cystitis (Urine Infection) in Women for more details (மேலும் விவரங்களுக்கு, பெண்களில் சிஸ்டிசைடிஸ் என்றழைக்கப்படும் தனி துண்டுப்பிரசுரத்தைக் காணவும்).

உங்களுக்கு சிறுநீர்ப்பை அழற்சியின் அறிகுறிகள் இருந்தால், ஆனால் சிறுநீர் பரிசோதிக்கப்படும்போது தொற்றுநோய் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால், உங்களுக்கு சிற்றிடைவெளிக்குரிய சிறுநீர்ப்பை அழற்சிஇருக்கலாம். இது அழற்சியுடைய சிறுநீர்ப்பையின் சுவர்கள் கொண்ட ஒரு மோசமான நிலை ஆகும். இது நீண்டகால வலிக்கு காரணம் ஆகும். இது 'வலிமிகுந்த சிறுநீர்ப்பை நோய்க்குறி' என்றும் அழைக்கப்படுகிறது.

ஒட்டுதல்கள்: அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒட்டுதல்கள் நிகழலாம். அறுவை சிகிச்சைக்கு பிறகு உங்கள் உடலை குணப்படுத்தும் முயற்சியில், திசுக்கள் ஒட்டும் தன்மை உடையதாகின்றன. இந்த ஒட்டும் தன்மை திசுக்கள் தற்செயலாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளலாம். மிகவும் பொதுவாக பாதிக்கப்படும் உறுப்பு குடல் ஆகும். இது வலியை ஏற்படுத்தலாம்.

திருகிய குடலிறக்கம்: அடிவயிற்றின் சுவரில் பலவீனம் இருக்கும் இடத்தில் குடலிறக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, அடிவயிற்றில் உள்ள சில உள்ளடக்கங்கள் தோலுக்கு அடியில் தள்ளப்படுகிறது (வீக்கம்). அதன் பிறகு தோலுக்கு அடியில் நீங்கள் ஒரு மென்மையான கட்டி அல்லது வீக்கத்தை உணர முடியும். குடலிறக்கம் திருகப்படுவதற்கு ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. குடலிறக்கமானது தசையின் அல்லது தசைநாரில் உள்ள இடைவெளி வழியாக பெருமளவில் குடல் வந்துவிடும்பொழுது, திருகப்படுகிறது அல்லது அதன் பின்னர் பிழியப்படுகிறது. இது குடலிறக்கத்தில் உள்ள குடலின் பகுதிக்கு இரத்த சப்ளையை துண்டித்து விடலாம். இது கடுமையான வலி மற்றும் குடலிறக்கத்தில் உள்ள குடல்களின் பகுதிக்கு சில சேதங்களுக்கு வழிவகுக்கும். See separate leaflet called Hernia for more details (மேலும் விவரங்களுக்கு ஹெர்னியா என்ற தனியான துண்டுப்பிரசுரத்தைக் காணவும்).

தசை மற்றும் எலும்பு பிரச்சினைகள்

உங்கள் அடி முதுகு, இடுப்பில் உள்ள எலும்புகள் மற்றும் இடுப்பு மூட்டுகள் போன்ற அருகிலுள்ள மூட்டுகளில் உள்ள பிரச்சனைகள், வலியை ஏற்படுத்தலாம். பெரும்பாலும் வலி எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாக உள்ளது. எனினும், சில சந்தர்ப்பங்களில், உங்கள் இடுப்பெலும்பிற்குள் வலி இருப்பதைப்போல் உணர முடியும், மற்றும் அது எங்கிருந்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டுவது கடினமாக இருக்கலாம்.

இடுப்பெலும்பு வலிக்கு பல காரணங்கள் உள்ளன. சில மற்றவைகளை விட மிகவும் தீவிரமானவை. நீங்கள் வலியின் காரணத்தை நிச்சயமாக அறிவீர்கள் என்றால் - உதாரணமாக, மாதவிடாய் வலி - நீங்கள் -  paracetamol (பாரசிட்டமால்) அல்லது ibuprofen (ஐபுப்ரோஃபென்) போன்ற வலி நிவாரணியை (painkiller) எடுத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.

வலியின் காரணத்தை பற்றி உங்களுக்கு உறுதியாக தெரியாவிட்டால் அல்லது வலி மிகவும் கடுமையாக இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும். குறிப்பாக, சில காரணங்கள் அவசர நிலைகளாகும் - உதாரணமாக, ஒரு எக்டோபிக் கர்ப்பம். உங்களுக்கு இந்த சந்தேகம் இருந்தால் அவசரமாக மருத்துவ உதவியை நாடவும். வலி திரும்பத் திரும்ப ஏற்பட்டாலும் நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்கலாம். மேலே பட்டியலிடப்பட்டுள்ள நிலைமைகளில் பலவற்றிற்கு, சிகிச்சைகள் கிடைக்கப்பெறுகின்றன.

உங்கள் மருத்துவர் சில கேள்விகளை உங்களிடம் கேட்பார் மற்றும் அவர் உங்களைப் பரிசோதிக்கலாம். அவர் கண்டுபிடித்ததை அடிப்படையாகக் கொண்டு, இன்னும் கூடுதலான ஆராய்வுகளை மேற்கொள்ள உங்களுக்கு ஆலோசனை கூறலாம்.

சிறுநீரக நோய்த்தொற்று என்பது இடுப்பெலும்பு வலிக்கு மிகவும் பொதுவான ஒரு காரணமாகும் மற்றும் உங்கள் மருத்துவர் சிறுநீர் மாதிரியை (urine sample) கேட்கலாம். நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக அவர்கள் நினைத்தால், ஒரு மாதிரியை எடுக்குமாறு கேட்கலாம் (ஸ்வாப்). நீங்கள் உறுதியாக இல்லை என்றால் ஒரு கர்ப்பப் பரிசோதனை அறிவுறுத்தப்படலாம். உங்கள் உள்ளூர் மருத்துவமனையில் அவசர அல்ட்ராசவுண்ட் (ultrasound) (கருச்சிதைவு அல்லது எக்டோபிக் கர்ப்பம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால்) செய்வதற்கான ஏற்பாட்டை அவர்கள் செய்யலாம். கருப்பை நீர்க்கட்டிகள் போன்ற பிரச்சினைகளை கண்டறிய ஒரு வழக்கமான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஏற்பாடு செய்யப்படலாம்.

லேபரோஸ்கோபி பொதுவாக கைனகாலஜிஸ்ட்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடைமுறையில், உங்கள் தொப்புளில் ஒரு சிறிய வெட்டின் மூலம் ஒரு சிறிய தொலைநோக்கி வைக்கப்படுகிறது. இது மருத்துவர் உங்கள் இடுப்பெலும்பின் உள்ளே பார்க்க வகை செய்கிறது. See separate leaflet called Laparoscopy and Laparoscopic Surgery for more details (மேலும் விவரங்களுக்கு லேபரோஸ்கோபி மற்றும் லேபராஸ்கோபிக் அறுவைசிகிச்சை என்ற தனி துண்டுப்பிரசுரத்தைக் காணவும்).

குடல்வளையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் உங்கள் குடலுக்கு உள்ளே பார்ப்பதற்கு நெகிழ்வான தொலைநோக்கிகளை பயன்படுத்தலாம். உணவுக்குழல் மற்றும் வயிறு காஸ்ட்ரோஸ்கோபி மூலம் பார்க்கப்படலாம். See separate leaflet called Gastroscopy (Endoscopy) for more details (மேலும் விவரங்களுக்கு காஸ்ட்ரோஸ்கோபி (எண்டோஸ்கோபி) எனப்படும் தனி துண்டுப்பிரசுரத்தைக் காணவும்). அடிக்குடல் (மலக்குடல் மற்றும் பெருங்குடல்) colonoscopy (கொலனோஸ்கோபியால்) பார்க்கப்படுகிறது.

இது சாத்தியமான காரணத்தை பொறுத்தது. இதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு மேலே உள்ள தனி துண்டு பிரசுரங்களுக்கான இணைப்பைப் பின்தொடரவும்.

பிரச்சனை அவசரநிலை அல்ல என்றால், உங்கள் மருத்துவர் உங்களை மேலும் நிபுணத்துவ விசாரணைகளுக்கான ஆலோசகராகக் குறிப்பிடலாம் - மேலே குறிப்பிட்டபடி.

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Further reading and references

newnav-downnewnav-up