யோனிவழிக் கசிவு Vaginal Discharge

Authored by , Reviewed by Dr John Cox | Last edited

யோனிவழிக் கசிவு என்பது பெரும்பாலான பெண்களிடத்தில் ஒரு பொதுவான நிகழ்வு ஆகும். பெரும்பாலான நேரங்களில், இதற்கு எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்க வேண்டியதில்லை, ஆனால் இது விடாப்பிடியாகத் தொடர்ந்து நீடித்தால் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தினால், இதற்கு மேற்கொண்டு பரிசோதனையும் சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும். வழக்கத்துக்கு மாறான கசிவுக்கான பொதுவான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உடலியல் காரணங்கள்

இது, உங்கள் வழக்கமான மாதாந்திர மாதவிலக்குக் காலக்கட்டத்துடன் (மாதவிலக்குச் சுழற்சி) தொடர்புடைய, உங்கள் கசிவில் உள்ள மாற்றங்களைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு முட்டையை உற்பத்தி செய்த பிறகு (ஏறத்தாழ 14வது நாள் வாக்கில்), உங்கள் யோனியில் மிகவும் அதிகக் கோழை இருப்பது போல நீங்கள் கவனிக்கலாம். இது, வழக்கமாக உங்கள் மாதவிலக்குக் காலகட்டம் தொடங்குகிற வரையிலும் தொடர்கிறது. இது, வழக்கமானது மற்றும் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களால் ஏற்படுகிறது. இந்த வகையான கசிவு வழக்கமாகத் தெளிவானது மற்றும் துர்நாற்றமடிக்காது.

அதே போல, நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, இதே ஹார்மோன் உங்கள் உடலில் ஏராளமாக சுரக்கிறது. கர்ப்ப காலத்தில், பல பெண்கள் தங்களுக்கு வழக்கத்தை விட அதிகமான கசிவு இருப்பதை கவனிப்பார்கள். ஹார்மோன்களைக் கொண்டுள்ள சில கருத்தடைப் பொருட்களாலும் உங்கள் கசிவு அதிகப்படலாம்.

சில பெண்கள், பாலுறவுக்குப் பிறகு ஓரிரு நாட்களுக்குத் தமக்கு ஒரு கசிவு ஏற்படும் என்பதை நன்கு அறிந்துள்ளனர். பாலுறவின் போது ஆண் ஒரு கருத்தடுப்பு உறையைப் பயன்படுத்தாமல், யோனிக்குள் தனது விந்தை வெளியேற்றினால், பெரும்பாலான விந்தானது, ஒரு யோனிவழிக் கசிவாக யோனியை விட்டு வெளியேறும். மேலும், அந்த யோனிவழிக் கசிவில் பாலுறவின் போது யோனியின் சுரப்பிகள் சுரக்கின்ற திரவமும் சேர்ந்திருக்கும்.

பச்சிளம் சிறுமிகளிடத்தில், அவர்களின் தாயின் ஹார்மோன்களின் பாதிப்பால் கசிவு (மற்றும் சில நேரங்களில் இரத்தப்போக்கு) ஏற்படுகிறது. இது, புதிதாய் பிறந்த பச்சிளங்குழந்தைகளிடத்தில் மட்டுமே நிகழ்கிறது. ஏனெனில், கருப்பையில் இருக்கும் போது பச்சிளங்குழந்தையை ஹார்மோன்கள் பாதிக்கின்றன.

அந்நியப் பொருட்கள்

இது, யோனியில் வழக்கமாகப் பார்க்க முடியாத எந்தவொரு பொருளையும் குறிக்கிறது. சில நேரங்களில், இளம்வயது குழந்தைகள் யோனியில் சிறிய விளையாட்டுப் பொருள்களை வைத்து, அதன் பிறகு அவற்றை வெளியே எடுக்கலாம். பெண்களிடத்தில், யோனியில் இருக்கும் மிகவும் பொதுவான அந்நியப் பொருள் என்பது எடுக்க மறந்துவிட்ட இரத்தப்போக்கை உறிஞ்சுகின்ற அடைப்புப் பஞ்சுருண்டை ஆகும்.

பாலுறவு மூலம் கடத்தப்படாத நோய்த்தொற்றுகள்

இந்த வகையான கசிவானது நோய்த்தொற்றுகளால் ஏற்படுகின்றன. இந்தக் கசிவு அல்லது நோய்த்தொற்று ஆகிய இரண்டில் எதுவும் பாலுறவின்போது கடத்தப்படுவதில்லை.

 • பாக்டீரியல் வஜினோசீஸ் (Bacterial vaginosis - BV): இது கசிவை ஏற்படுத்தும் ஒரு பொதுவான காரணம் ஆகும். இதில், பெரும்பாலும் கவனிக்கத்தக்க மீன் நாற்றம் வீசும். இது, பாலுறவுக்குப் பிறகு அல்லது ஒரு மாதவிலக்குக் காலக்கட்டத்திற்குப் பிறகு மிகவும் மோசமாகலாம். பாக்டீரியல் வஜினோசீஸ் (Bacterial vaginosis) என்பது பாலுறவு மூலம் கடத்தப்படும் ஒரு நோய்த்தொற்று (STI) அல்ல. இது, யோனியில் வழக்கமான கிருமிகள் (பாக்டீரியா) அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் வளர்ச்சியுறுவதன் காரணமாக ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவை மற்றும் பாக்டீரியல் வஜினோசீஸ் நிலைமையானது சிகிச்சை எதுவுமில்லாமல் அழிந்தொழிந்துவிடும். மற்ற நேர்வுகளுக்கு ஆன்ட்டிபயாட்டிக்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கலாம். See separate leaflet called Bacterial Vaginosis for more details (மேலும் விவரங்களுக்கு, “பாக்டீரியல் வஜினோசீஸ்” என அழைக்கப்படும் ஒரு தனித் துண்டுப்பிரசுரத்தைப் பாருங்கள்).

 • வெண்புண் (இருதிரிபு காளான்): இது, யோனிவழிக் கசிவுக்கான இரண்டாவது மிகவும் பொதுவான காரணம் ஆகும். (யோனிவழிக் கசிவின் மிகவும் பொதுவான காரணம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாக்டீரியல் வஜினோசீஸ் ஆகும்) வெண்புண்ணில் இருந்து வரும் கசிவு வழக்கமாகப் பாலேட்டு வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் சிறிதளவு கெட்டியாக இருக்கும். ஆனால், சில நேரங்களில் நீர்த்துப் போய் இருக்கும். இது, யோனியின் வெளிப்புறத்தைச் சுற்றிலும் அரிப்பு, சிவப்பாதல், அசௌகரியம் அல்லது வலி ஏற்படுத்தலாம். வெண்புண்ணில் இருந்து வரும் கசிவு வழக்கமாகத் துர்நாற்றமடிக்காது. வெண்புண் கொண்டுள்ள சில பெண்களுக்கு, பாலுறவு கொள்ளும் போது அல்லது சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம். See separate leaflet called Vaginal Thrush for more details (மேலும் விவரங்களுக்கு, “யோனி வெண்புண் (ஈஸ்ட் நோய்த்தொற்று)” என அழைக்கப்படும் ஒரு தனித் துண்டுப்பிரசுரத்தைப் பாருங்கள்).

பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்றுகள்

பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்றுகளின் அறிகுறிகள் ஆளாளுக்கு வேறுபடும். சாத்தியமுள்ள அறிகுறிகளுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 • யோனிவழிக் கசிவு.
 • வழக்கத்துக்கு மாறான யோனிவழி இரத்தப்போக்கு.
 • யோனியை, (பெண் பிறப்புறுப்பு உதடுகள், யோனிலிங்கம், யோனிவாய் உள்பட) பெண்ணுறுப்பின் வெளி இதழ்ப் பகுதியை அல்லது மலவாயைச் சுற்றிலும் ஒரு புண், சீழ் வடியும் புண், சொறி, அல்லது கட்டி.
 • நீங்கள் பாலுறவு கொள்ளும் போது வலி அல்லது நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி.

யோனிவழிக் கசிவை ஏற்படுத்துகின்ற மிகவும் பொதுவான நோய்த்தொற்றுகளாகக் கிளமீடியா நோய், மேகவெட்டை நோய், டிரைகோமோனாஸ் (trichomonas) ஆகியவை உள்ளன. See separate leaflet called Sexually Transmitted Infections for more details (மேலும் விவரங்களுக்கு,“பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்றுகள்” என அழைக்கப்படும் ஒரு தனித் துண்டுப்பிரசுரத்தைப் பாருங்கள்).

கசிவை ஏற்படுத்தும் இதர அரிய காரணங்கள்

சில நேரங்களில் கருப்பையின் கழுத்தில் (கருப்பை வாய்) உள்ள மொட்டுக் கட்டிகள் காரணமாக ஒரு கசிவு ஏற்படலாம். ஒரு மொட்டுக் கட்டி என்பது ஒரு சிறிய சதைக் கட்டி ஆகும். இவற்றை வழக்கமாக உங்கள் மருத்துவர் அல்லது செவிலியர் உங்களைப் பரிசோதிக்கும் போது பார்க்க முடியும். இவை எளிதாக அகற்றப்படுகின்றன (இது மருத்துவமனையில் செய்யப்பட வேண்டும்) மற்றும் மிகவும் அரிதாக புற்றுநோய்ப் பண்புக் கொண்டவை ஆகும். சில நேரங்களில், கருப்பையின் கழுத்தை மூடியுள்ள பகுதி மாறுகிறது, எளிதில் உடையக்கூடியதாகிறது, மற்றும் அதிகளவு கசிவை உற்பத்தி செய்கிறது. இது, இடமாறிய நிலை (அல்லது வெளித்துருத்திய நிலை) என அழைக்கப்படுகிறது. இது, கடுமையானதல்ல மற்றும் பெரும்பாலும் சிகிச்சை எதுவும் தேவைப்படுவதில்லை. See separate leaflet called Common Problems of the Cervix for more details (மேலும் விவரங்களுக்கு, “கருப்பை வாயின் பொதுவான பிரச்சினைகள்” என அழைக்கப்படும் ஒரு தனித் துண்டுப்பிரசுரத்தைப் பாருங்கள்).

கருப்பைப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களும் ஒரு கசிவை ஏற்படுத்தலாம். வழக்கமாக மற்ற அறிகுறிகளும் உள்ளன. மேலும், இத்தகைய புற்றுநோய்களின் முக்கியமான அறிகுறியாக கசிவு ஏற்படுவது என்பது மிகவும் அரிதானது ஆகும்.

தோல் அழற்சி மற்றும் செந்தடிப்புத்தோல் அரிப்பு போன்ற சில தோல் நிலைமைகளும் ஒரு யோனிவழிக் கசிவை ஏற்படுத்தலாம். இவை தம்முடன் மற்ற அறிகுறிகளையும் கொண்டிருக்கும். இதில் மிகவும் பொதுவான அறிகுறி அரிப்பு ஆகும். இத்தகைய அரிதான காரணங்கள் பற்றி உங்களுக்குத் தைரியமூட்டுவதற்கு உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசோதிக்கலாம்.

உங்களுக்குச் சில நாட்களாக மாற்றங்கள் இருந்தால் நீங்கள் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும். பின்வரும் நிலைமைகள மருத்துவ ஆலோசனைக்கான தேவையை பரிந்துரைக்கின்றன:

 • கசிவின் நிறத்தில் ஒரு மாற்றம் - உதாரணத்திற்கு, மஞ்சள், பச்சை, சாம்பல், இளஞ்சிவப்பு அல்லது இரத்தக் கறைபட்ட நிறங்கள்.
 • மீன் அல்லது அழுகிய இறைச்சி போன்ற ஒரு விந்தையான துர்நாற்றம்.
 • கசிவின் அளவில் ஒரு அதிகரிப்பை கவனித்தல்.
 • உங்கள் கசிவின் ஒத்தத்தன்மை மாறலாம். மேலும், பாலாடைக்கட்டி பன்னீர் போலக் கெட்டியாகலாம் அல்லது கட்டியாகலாம்.
 • யோனியின் வாயைச் சுற்றிலும் அரிப்பு அல்லது இரணம், உங்கள் சிறுநீர்ப்பையை நீங்கள் காலியாக்கும் போது வலி, இடுப்புப்பகுதி வலி, மற்றும் மாதவிலக்குக் காலக்கட்டங்களுக்கு இடையே அல்லது பாலுறவுக்குப் பிறகு இரத்தத் திட்டுக்கள் போன்ற மற்ற அறிகுறிகளைக் கவனித்தல்.

எவ்வளவு காலமாக நீங்கள் கசிவைக் கொண்டிருந்தீர்கள் மற்றும் மேலே பட்டியலிடப்பட்டு உள்ள ஏதாவது மாற்றங்களை நீங்கள் கவனித்துள்ளீர்களா என மருத்துவர் உங்களிடம் கேட்கலாம். யோனிவழிக் கசிவு என்பது பாலுறவு மூலம் கடத்தப்படும் ஒரு நோய்த்தொற்றின் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்கிற காரணத்தால், நீங்கள் பயன்படுத்துகின்ற ஏதாவது கருத்தடை முறைகள் மற்றும் கருத்தடுப்பு உறைகள் பற்றிய விவரங்ளையும் மருத்துவர் உங்களிடம் கேட்கலாம். பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் பாதுகாப்பைப் பெறுவதற்குக் கருத்தடுப்பு உறையைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

நீங்கள் ஒருபோதும் பாலுறவில் தீவிரமாக ஈடுபடக்கூடியவராக இருந்ததில்லை எனில், வேறு எங்குத் தவறு நடந்திருக்கலாம் என்பதைக் கண்டறிவதற்காக மருத்துவர் உங்களிடம் வேறு சில கேள்விகளைக் கேட்கலாம். அப்படியில்லையென்றால், மருத்துவர் உங்களைப் பரிசோதிக்கலாம். உங்கள் மருத்துவர் ஒரு பெண்ணாக இருந்தாலும் கூட, உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் போது உங்களுக்கு உதவி செய்யும் பராமரிப்பாளர் ஒருவரை உங்களுடன் வைத்துக்கொள்ளக் கேட்பதற்கு நீங்கள் உரிமை கொண்டுள்ளீர்கள். மருத்துவர் உங்கள் ஆடைகளை உங்கள் இடுப்புக்குக் கீழே தாழ்த்துமாறு கேட்பார். நீங்கள் ஒரு தளர்வான பாவாடையை அணிந்திருந்தால், உங்கள் இடுப்பு உள்ளாடைகளை மட்டுமே நீங்கள் அகற்றினால் போதுமானது. பரிசோதனைக் கட்டிலில் நீங்கள் மல்லாந்து படுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். மருத்துவர் தனது இரண்டு விரல்களை உங்கள் யோனிக்குள் நுழைத்து பரிசோதிப்பார். இதன் மூலம், உங்கள் கருப்பை, கருமுட்டைப்பைகள் அல்லது கருமுட்டைக் குழாய்கள் மென்மையாக உள்ளனவா என்பதை அறிந்து அவர் உங்களிடம் சொல்ல முடியும்.

சில நேரங்களில், ஸ்பெக்குலம் என அழைக்கப்படும் ஒரு கருவியை மருத்துவர் பயன்படுத்தலாம். இது, உங்கள் யோனிக்குள் செல்கிறது. இது, யோனியை மெல்ல மெல்ல திறக்கிறது மற்றும் கருப்பை வாயைப் (யோனியின் உச்சியில்) பார்க்க உதவுகிறது. ஏதாவது கசிவு இருந்தால் அதை மருத்துவரால் பார்க்க முடியும் மற்றும் அந்தக் கசிவை ஒரு மருந்திட்ட பஞ்சுறையால் மாதிரிக்கூறு எடுப்பார். இந்த மாதிரிக்கூறு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, அதில் ஏதாவது நோய்த்தொற்று இருக்கிறதா என ஆய்வு செய்யப்படும். கருப்பையின் கழுத்தில் ஏதாவது புண்ணுள்ள பகுதிகள் அல்லது மொட்டுக் கட்டிகள் உள்ளனவா என்பதையும் மருத்துவரால் பார்க்க முடியும்.

நீங்கள் பாலுறவில் தீவிரமாக ஈடுபடக்கூடியவராக இருந்துள்ளீர்கள் எனில், மருத்துவர் உங்களுக்கு இரத்தப் பரிசோதனைகளும் மருந்திட்ட பஞ்சுறைகளும் சம்பந்தப்பட்ட பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்றுக்கான ஒரு முழுமையான தகுதிச் சோதனையைச் செய்யலாம். உங்கள் பாலுறவுத் துணைவரும்(களும்) பரிசோதிக்கப்பட வேண்டியிருக்கலாம்.

மருத்துவரிடம் அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் கிடைத்த பிறகு, உங்களுக்கு அல்ட்ராசவுண்டு ஸ்கேன் போன்ற மேலும் அதிகப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியுள்ளதா அல்லது நீங்கள் மகளிர் நோய் மருத்துவர் போன்ற ஒரு சிறப்பு மருத்துவரை பார்க்க வேண்டுமா என்பது பற்றி அவர் உங்களுடன் கலந்தாலோசனை செய்வார்.

சில நேரங்களில், உங்களுக்கு அச்சத்தைப் போக்கி தைரியமூட்டுவதே போதுமானதாக இருக்கலாம்.

யோனிவழிக் கசிவின் சிகிச்சையானது அடிப்படை காரணத்தைப் பொறுத்து அமைகிறது.

பாலுறவு மூலம் கடத்தப்படாத நோய்த்தொற்றுகள்

பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்றுகள்

பின்வருவன உள்ளிட்ட பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்றுகள் ஒரு கசிவை ஏற்படுத்துகின்றன:

For more information, including treatment, on these and other STIs, see separate leaflet called Sexually Transmitted Infections (இத்தகைய மற்றும் இதர பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்றுகளுக்கான சிகிச்சை உள்பட மேலும் தகவலுக்கு, “பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்றுகள்” என அழைக்கப்படும் ஒரு தனித் துண்டுப்பிரசுரத்தைப் பாருங்கள்).

அந்நியப் பொருட்கள்

இவை, வழக்கமாக நீங்கள் பரிசோதிக்கப்படும் நேரத்தில் மருத்துவரால் அகற்றப்படுகின்றன. சிறிய பொருட்கள் (கருத்தடுப்பு உறையின் ஒரு உடைந்த துண்டு போன்றவை) நீரால் பீய்ச்சிக் கழுவப்பட வேண்டியிருக்கலாம். அகற்றும் போது உங்களுக்கு அசௌகரியத்தைத் தருகின்ற ஒரு பெரிய அந்நியப் பொருள் இருந்தால், உங்களுக்கு அமைதியூட்டுகின்ற அல்லது லேசான மயக்கமளிக்கின்ற மருந்து தேவைப்படலாம். இதன் காரணமாக, நீங்கள் மருத்துவமனையில் ஒரு சில மணிநேரங்களுக்குத் தங்கியிருக்க வேண்டியிருக்கும். அதன்பிறகு, நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு உங்களுக்கு ஆன்ட்டிபயாட்டிக் தேவைப்படும்.

அரிதான காரணங்கள்

கருப்பை வாய் மொட்டுக் கட்டி - இதை உங்கள் பொது மருத்துவரால் அல்லது ஒரு சிறப்பு மருத்துவரால் அகற்ற முடியும்.

கருப்பை வாய் வெளித்துருத்திய நிலை - உங்களுக்குக் குறிப்பிட்ட பகுதியை மரத்துப் போகச் செய்யும் மருந்து (மின் வழித் தீய்த்தல்) கொடுக்கப்பட்டு ஒரு சூட்டுக்கோலால் எரிப்பதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

See separate leaflet called Common Problems of the Cervix (“கருப்பை வாயின் பொதுவான பிரச்சினைகள்” என அழைக்கப்படும் ஒரு தனித் துண்டுப்பிரசுரத்தைப் பாருங்கள்).

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Further reading and references

newnav-downnewnav-up