சின்னரிசைன் மாத்திரைகள் - Cinnarizine Tablets ஸ்டகரான் - Stugeron

Last updated by Peer reviewed by Dr Hannah Gronow
Last updated

Added to Saved items

உடல் நலமின்மை மற்றும் மயக்க உணர்வில் இருந்து நம்மை பாதுகாக்க, சின்னரிசைன் உதவுகிறது.

5 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள், யார் வேண்டுமானாலும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

இதன் பொதுவான பக்க விளைவு, அரைதூக்க உணர்வு ஆகும்.

மருந்தின் வகைஒவ்வாமையினை முறிக்கும் மருந்து (ஆண்டிஹிஸ்டமைன்)
பயன்பாடுகள்பயணத்தின் போது ஏற்படும் உடல் நலமின்மை; இதன் காரணிகளான, சமநிலை அல்லது இயக்கத்தின் போது ஏற்படும் பிரச்சினைகளான தலைச்சுற்றல் (வெர்டிகோ), காது இரைச்சல் (டின்னிடஸ்) மற்றும் மென்னியர்ஸ் (காது சம்பந்தமான) நோய்கள்; ஆகியவற்றை குறைத்தல்
பிற பெயர்கள்ஸ்டகரான்® (Stugeron®)
அர்லிவெர்ட்® (Arlevert®) (தலைச்சுற்றல் சிகிச்சைக்கு பயன்படும் சின்னரிசைன் மற்றும் டைமென்ஹைட்ரினேட் சேர்ந்த கலவை)
கிடைக்கும் வகைமாத்திரைகள்

காதின் உள்ளே ஏற்படும், உள்காது பிரச்சனை மற்றும் சமநிலை பிரச்சனை அதாவது dizziness (தலைச்சுற்றல் (கிறக்கம்)) மற்றும் sickness (உடல் நலமின்மை) போன்றவற்றிற்கு சின்னரிசைன் (cinnarizine) பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது travel sickness (பயணத்தின் போது ஏற்படும் உடல் நலமின்மையினையும்) தடுக்க உதவுகிறது.

காதின் உள்ளே அமைந்திருக்கும் நரம்புகள் உங்களுடைய இயக்கத்தினை பற்றிய தகவலை, உங்களுடைய மூளைக்கு செய்தியாக அனுப்புகின்றன. உங்கள் கண்கள் மற்றும் தசைகளுக்கும் சேர்த்து இந்த செய்திகள் செல்வதோடு, உங்களுடைய உடல் சமநிலையில் இருக்குமாறு பராமரிக்க உதவுகின்றன. உங்களுடைய காதில் இருக்கும் நரம்புகள், உங்கள் மூளைக்கு மிக அதிகமான, மிகக் குறைவான அல்லது தவறான செய்திகளை அனுப்பும்போது, உங்களுடைய கண்கள் மற்றும் உடல் பகுதிகளுக்கு மற்ற காதின் வழியாக மூளைக்கு வரும் செய்திகள் முற்றிலும் முரண்படும். இதனால் உங்களுடைய மூளையானது மிகவும் குழப்பமடையும், இதன் காரணத்தினால் உங்களுக்கு மயக்க உணர்வு மற்றும் தலைச்சுற்றுவது போன்ற உணர்வு (வெர்டிகோ (vertigo)), மற்றும் உங்களுடைய உடம்பு சரியில்லாதது போன்ற உணர்வுகள் தோன்றும்.

பயணம் செய்யும் போது ஏற்படும், தொடர்ச்சியான அசெளகரியமான இயக்கங்களினால், பயணத்தின் போது ஏற்படும் உடல் நலமின்மை ஏற்படுகிறது. இந்த தொடர்ச்சியான இயக்கங்கள், அதாவது மேடு பள்ளங்களில் அல்லது வட்ட வடிவில் செல்லும்போது, ஏராளமான செய்திகளை உங்களுடைய மூளைக்கு அனுப்புகின்றன. உங்களுடைய காதுகளில் இருக்கும் சமநிலை நுட்பமானது, உங்களின் கண்களின் வழியாக பல்வேறு விதமான அடையாளங்களை மூளைக்கு அனுப்புகிறது, இதன் விளைவாக மூளையானது ஒரு கலவையான மற்றும் குழப்பமான செய்திகளை பெறுகிறது. இதன் மூலமாகத்தான் உங்களுக்கு உடல் நிலை சரியில்லாதது போல உணரத்தோன்றுகிறது.

உடல் நிலை சரியில்லாதது போல உணருதல் மற்றும் வெர்டிகோ (கிறக்கம்) போன்ற பிரச்சினைகளை சின்னரிசைன் (Cinnarizine) குறைப்பதற்கு உதவுகிறது. இது மருந்து சீட்டு மூலமாக கிடைக்கிறது அல்லது மருந்து கடைகளில் மருந்து சீட்டு இல்லாமலும், நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இதை பெரியவர்களும் மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் எடுத்துக்கொள்ளலாம்.

சில மருந்துகள், மக்களின் சில குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்றவாறு இருப்பதில்லை, மேலும் கூடுதல் பராமரிப்பு எடுத்துக்கொள்ளப்படும்போது தேவைப்பட்டால் மட்டுமே இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதிரியான காரணங்களினால், நீங்கள் சின்னரிசைனை எடுத்துக்கொள்வதற்கு முன், இதைப்பற்றி உங்களுடைய மருத்துவர் அல்லது மருந்து கடைக்காரரிடம் கேட்டு தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்:

  • நீங்கள் கர்ப்பமாகவோ அல்லது தாய்ப்பால் கொடுப்பவராகவோ இருந்தால்.
  • உங்களுக்கு புரொஸ்டேட் (prostate) பிரச்சினைகள் ஏதேனும் இருந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும் போது ஏதாவது சிரமத்தினை அனுபவித்தால்.
  • உங்களுடைய கல்லீரல் செயல்படுவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அல்லது சிறுநீரகம் செயல்படுவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால்.
  • பின்வரும் நிலைகள் ஏதேனும் உங்களிடம் இருந்தால்: கண்ணில் அழுத்தம் அதிகரித்தல் (குளுக்கோமா (glaucoma) / கண் அழுத்த நோய்), காக்காய்வலிப்பு (எபிலெப்ஸி (epilepsy)), அல்லது பர்கின்சன் நோய் (Parkinson's disease).
  • உங்களுடைய குடலில் அடைப்பு ஏதேனும் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால்.
  • போர்பைரியா (porphyria) என்றழைக்கப்படும் அரிதான இரத்தம் சம்பந்தமான கோளாறுகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால்.
  • ஒருவேளை நீங்கள், வேறு ஏதாவது மருந்து எடுத்துக்கொண்டால். மருந்து சீட்டு இல்லாமல் என்ன மருந்து இருக்கிறதோ அந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது, அதாவது ஹெர்பல் (மூலிகை) மற்றும் இலவசமாக கிடைக்கும் மருந்துகள் போன்றவை இதில் அடங்கும்.
  • இந்த மருந்திற்கு எதிராக உங்களுக்கு எப்போதாவது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால்.
  • இந்த சிகிச்சையினை நீங்கள் தொடங்கும் முன்பு, உங்களிடம் இருக்கும் பாக்கெட்டின் உள்புறம் தயாரிப்பாளரால் அச்சிடப்பட்ட சிறிய துண்டு பிரசுரத்தில் இருக்கும் தகவலை படித்து பார்க்கவும். இது அந்த மாத்திரைகளை பற்றிய கூடுதல் தகவல்களை உங்களுக்கு தரும் மற்றும் இதை நீங்கள் எடுத்துக்கொள்வதனால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்ற முழு விபர பட்டியலையும் உங்களுக்கு தரும்.
    • உங்களுடைய மருத்துவர் அல்லது மருந்து கடைக்காரர் சொன்னபடி சின்னரிசைனை சரியாக எடுத்துக்கொள்ளுங்கள். இதை வழக்கமாக ஒரு நாளைக்கு 3 முறை எடுத்துக்கொள்ளலாம்.
    • பயணத்தின் போது ஏற்படும் உடல் நலமின்மையில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள, நீங்கள் சின்னரிசைனை எடுத்துக்கொள்வதாக இருந்தால், பயணம் செய்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே முதல் டோஸை எடுத்துக்கொள்ளவும். ஒருவேளை நீங்கள் நெடுந்தூர பயணம் செல்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கு ஒரு முறையும், இந்த மருந்தினை ஒவ்வொரு டோஸாக எடுத்துக்கொள்ளவும். நீங்கள் இந்த சின்னரிசைனை குழந்தைக்கு கொடுப்பதாக இருந்தால், உங்களுடைய குழந்தையின் வயதிற்கு ஏற்றவாறு, மருந்து டோஸை கொடுக்கிறீர்களா என்பதை மாத்திரை பட்டையில் இருக்கும் லேபிளில் கவனமாக சரிபார்க்கவும். ஒவ்வொரு டோஸிற்கும் இடையே 8 மணி நேரம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
    • உங்களால் முடிந்தால், சாப்பிட்ட பிறகு அல்லது சிற்றுண்டிக்கு பிறகு சின்னரிசைனை எடுத்துக்கொள்ளுங்கள்
    • சின்னரிசைனை எடுத்துக்கொண்டால் தூக்கம் வருவது போல இருக்கும். இந்த மாதிரியான சூழ் நிலைகளில் வண்டியினை ஓட்ட வேண்டாம் அல்லது கருவிகளை பயன்படுத்த வேண்டாம் அல்லது இயந்திரங்களை இயக்க வேண்டாம். மதுவானது தூக்கத்தினை இன்னும் அதிகமாக்கும், எனவே நீங்கள் சின்னரிசைனை பயன்படுத்தி இருக்கும் போது, மது அருந்தாமல் இருப்பது மிகவும் நல்லது.
    • நீங்கள் ஏதாவதொரு அறுவை சிகிச்சையினை செய்திருந்தால் அல்லது ஏதாவதொரு சிகிச்சையினை மேற்கொண்டிருந்தால் (குறிப்பாக அலர்ஜியினை சோதித்து பார்ப்பது), சின்னரிசைன் என்று அழைக்கப்படும் ஒவ்வாமையில் இருந்து பாதுகாக்கும் மருந்தினை (ஆண்டிஹிஸ்டமைன்), எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் நபரிடம் சொல்லுங்கள்.
    • நீங்கள் ஏதாவது மருந்து வாங்குவதாக இருந்தால், ஆண்டிஹிஸ்டமைன் மருந்து எடுத்துக்கொள்ளும் போது இந்த மருந்தினை அதனுடன் சேர்த்து உபயோகிப்பது பாதுகாப்பானதா என்று மருந்து கடைக்காரரிடம் கேளுங்கள். ஏனென்றால், மற்ற மருந்துகள் சில சமயங்களில் சின்னரிசைனின் வேலைகளில் குறுக்கிடும், இதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    பெரும்பாலான மருந்துகள், அவற்றின் பயனுள்ள விளைவுகளுடன் சேர்ந்து, தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் இந்த பக்க விளைவுகளை எல்லோரும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். கீழே இருக்கும் அட்டவணையில் சின்னரிசைன் தொடர்பான பக்க விளைவுகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. உங்களுக்கு வழங்கப்பட்ட மருந்துகளில் இருக்கும் தயாரிப்பாளர் தகவல் துண்டு பிரசுரத்தில், முழு விபர பட்டியல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். புதிய மருந்துகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது, அடிக்கடி மேம்படுத்தப்படும் தேவையற்ற விளைவுகளை, உங்களுடைய உடம்பானது ஒருவாறு சமாளித்துக்கொள்ளும், ஆனால் பின்வருபவற்றில் ஏதாவது தொடர்ச்சியாக இருக்குமா அல்லது தொந்தரவினை ஏற்படுத்துமா என்று உங்களுடைய மருத்துவர் அல்லது மருந்து கடைக்காரரிடம் கேளுங்கள்.

    சின்னரிசைனின் பொதுவான பக்கவிளைவுகள் (10 நபர்களில் ஒருவருக்குத்தான் இந்த பக்க விளைவுகள் ஏற்படுகின்றன)
    இது மாதிரி நான் அனுபவிக்க நேர்ந்தால் என்ன செய்வது?
    தூக்கம் வருவதை போன்ற உணர்வுஇந்த மாதிரி அறிகுறி இருந்தால், இந்த மாதிரியான சமயத்தில் வண்டியினை ஓட்ட வேண்டாம் அல்லது கருவி அல்லது இயந்திரங்களை உபயோகிக்க வேண்டாம். மது அருந்த வேண்டாம்
    சின்னரிசைனின் மற்ற பக்கவிளைவுகள்இது மாதிரி நான் அனுபவிக்க நேர்ந்தால் என்ன செய்வது?
    தலைவலி, உலர்ந்த வாய்ப்பகுதி, அஜீரணம், வயிற்று உபத்திரவம்இது விரைவில் சரியாக வேண்டும், ஆனால் எப்படி ஏதும் சரியாகாவிட்டால், மருந்து கடைக்காரரிடம் சென்று இதற்கான தீர்வு என்னவென்று கேட்டு அதை பரிந்துரைக்குமாறு அவரிடம் கேட்கவும்

    இந்த மாத்திரைகளை நீங்கள் உபயோகிக்கும்போது வேறு ஏதேனும் அறிகுறிகள் ஏற்படுவதாக உணர்ந்தால், உங்களுடைய மருத்துவர் அல்லது மருந்துகடைக்காரரிடம் மேற்கொண்டு என்ன செய்வது என்று கலந்தாலோசிக்கவும்.

    • எல்லா மருந்துகளையும், குழந்தைகளுக்கு எட்டாதவாறும், அவர்களுடைய பார்வையில் படாதவாறும் வைக்கவும்.
    • இந்த மருந்தை குளிர்ச்சியான பகுதி, உலர்ந்த பகுதி, நேரடி வெப்பம் மற்றும் வெளிச்சத்தில் இருந்து தூரமான பகுதி போன்ற இடங்களில் சேமித்து வைக்கவும்.

    பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவைவிட அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் அல்லது வேறு யாராவது இந்த மருந்தை அதிகமாக எடுத்துக்கொண்டிருப்பதாக சந்தேகித்தால், உங்கள் உள்ளூர் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரநிலை பிரிவிற்குச் செல்லவும். மருந்து கொள்கலன் காலியாக இருந்தாலும் கூட அதை உங்களுடன் எடுத்துச் செல்லவும்.

    இந்த மருந்து உங்களுக்கானது ஆகும். உங்களுடைய நிலைமை மற்றவர்களுக்கு இருப்பதாக தோன்றினாலும் கூட, ஒருபோதும் அவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

    காலாவதியான அல்லது தேவையற்ற மருந்துகளை வைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்காக அவற்றை அகற்றும் உங்கள் உள்ளூர் மருந்தகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

    உங்களுக்கு இந்த மருந்தைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

    பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

    Further reading and references

    • Manufacturer's PIL, Stugeron® 15 mg; Janssen-Cilag Ltd, The electronic Medicines Compendium. Dated September 2013.

    • British National Formulary; 68th Edition (Sep 2014) British Medical Association and Royal Pharmaceutical Society of Great Britain, London

    newnav-downnewnav-up