டிஃப்ளஸகார்ட் மாத்திரைகள் - Deflazacort tablets Calcort - கால்கார்ட்

Authored by , Reviewed by Dr Adrian Bonsall | Last edited

டிஃப்ளஸகார்ட் (Deflazacort), கார்டிகோஸ்டீராய்டுகள் (corticosteroids) (பொதுவாக ஸ்டீராய்டுகள் என அழைக்கப்படும்) மருந்துகளின் ஒரு வகைக்குரியது.

உங்கள் மருந்தாளர் உங்களுக்கு ஒரு நீல 'ஸ்டெராய்டு சிகிச்சை அட்டை' கொடுப்பார். எல்லா நேரங்களிலும் இது உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

காலை உணவில் தண்ணீருடன் டிஃப்ளஸகார்ட் எடுத்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், உங்களுக்கு சிகிச்சையளிக்கும் நபர், நீங்கள் டிஃப்ளஸகார்ட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை அறிவார் என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் மருந்தளவு குறுகிய காலத்திற்கு அதிகரிக்கப்படலாம்.
மருந்தின் வகைஒரு கார்ட்டிகோஸ்டிராய்ட் (corticosteroid) மருந்து
பயன்கள்பெரியவர்கள் அல்லது குழந்தைகளில் ஒவ்வாமை மற்றும் அழற்சி நிலைமைகளை கட்டுப்படுத்துதல்
பிற பெயர்கள்கால்கார்ட்® (Calcort®)
கிடைக்கும் வகைமாத்திரைகள்

டிஃப்ளஸகார்ட் (Deflazacort), கார்டிகோஸ்டீராய்டுகள் (corticosteroids) என்றழைக்கப்படும் மருந்துகளின் குழுவைப் சேர்ந்த்து. இது சில நேரங்களில் oral steroid (வாய்வழி ஸ்டெராய்டு) என்றும் குறிப்பிடப்படுகிறது.

பலவகையான நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக டிஃப்ளஸகார்ட் (deflazacort) போன்ற கார்டிகோஸ்டீராய்டுகள் (corticosteroids) பயன்படுத்தப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள், தன்னுடல் தாங்குதிறன் நோய் (உதாரணமாக, systemic lupus erythematosus – SLE (ஸிஸ்டெமிக் லூபஸ் எருதேமடோஸ்ஸ்), autoimmune hepatitis (ஆட்டோஇம்மியூன் ஹெப்பாடிட்டீஸ்), sarcoidosis (சர்காய்டொசிஸ)), மூட்டு மற்றும் தசை நோய்கள் (உதாரணமாக, rheumatoid arthritis (ரஹியுமடாய்டு ஆர்த்ரிடிஸ்)), மற்றும் allergies (அலர்ஜிஸ்) மற்றும் asthma (ஆஸ்துமா)) ஆகியவற்றை உள்ளடக்கும். அவை சில புற்றுநோய்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.

உங்கள் உடலில், வீக்கம் ஏற்படுத்தும் சில இரசாயன வெளியிடுதலை, குறுக்கீடு செய்வதன் மூலம், டிஃப்ளஸகார்ட் (Deflazacort) வேலை செய்கிறது.

சில மருந்துகள் சில குறிப்பிட்ட நிலைமைகள் கொண்ட மக்களுக்கு ஏற்றவை அல்ல, மற்றும் சில சமயங்களில் கூடுதல் கவனிப்பு மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே ஒரு மருந்து பயன்படுத்தப்பட முடியும். இந்த காரணங்களுக்காக, நீங்கள் டிஃப்ளஸகார்ட் (deflazacort) எடுத்துக்கொள்ளும் முன், உங்கள் மருத்துவர் பின்வருவனவற்றை அறிவது முக்கியமாகும்:

 • உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால்.
 • உங்களுக்கு மாரடைப்பு இருந்திருந்தால், அல்லது வேறு ஏதேனும் இருதய பிரச்சனைகள் இருந்தால்.
 • உங்களுடைய கல்லீரல் வேலை செய்யும் விதத்துடன் உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், அல்லது உங்களுடைய சிறுநீரகங்கள் வேலை செய்யும் விதத்துடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால்.
 • உங்களுக்கு (அல்லது ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கு) சர்க்கரை நீரிழிவு நோய் அல்லது க்ளௌகோமா என்று அழைக்கப்படும் கண் நிலை இருந்தால்.
 • உங்களுக்கு பின்வரும் நிலைகளில் ஏதேனும் இருந்தால்: ஒரு செயலற்ற தைராய்டு, எலும்புகள் ‘மெலிதாகுதல்’ (எலும்புப்புரை), வலிப்புத்தாக்கம், தசை பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு நிலை (மையஸ்தீனியா க்ராவிஸ் என்று அழைக்கப்படும்), வயிற்றுப் புண் அல்லது குடல் கோளாறு இருந்தால்.
 • உங்களுக்கு எப்போதாவது மனநல பிரச்சனையை இருந்திருந்தால்.
 • நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுப்பவராகவோ இருந்தாலோ. (நீங்கள் கர்ப்பமாக இருக்கும்பொழுது அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது டிஃப்ளஸகார்ட் (deflazacort) போன்ற வாய்வழி ஸ்டெராய்டுகள் எடுத்துக்கொள்ளப்படலாம்; இருப்பினும், உங்கள் மருத்துவர் குழந்தையைப் பற்றி அறிந்திருப்பது அவசியம் ஆகும்).
 • உங்களுக்கு ஒரு வகையான தொற்றுநோய் இருந்தால், அல்லது உங்களுக்கு எப்போதாவது காசநோய் (TB) இருந்திருந்தால்.
 • உங்களுக்கு எப்போதாவது ஒரு தமனி அல்லது நரம்பில் ஒரு தேவையற்ற இரத்த உறைவு இருந்திருந்தால்.
 • சமீபத்தில் ஏதேனும் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால் அல்லது பெறப்போகிறீர்கள் என்றால்.
 • நீங்கள் வேறு ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால் அல்லது பயன்படுத்திக்கொண்டிருந்தால். இது மருந்துச் சீட்டு இல்லாமல் வாங்குவதற்கு கிடைக்கக்கூடிய மருந்துகள், மூலிகை மற்றும் நிரப்பு மருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.
 • உங்களுக்கு எப்போதாவது ஒரு மருந்திற்கு ஒவ்வாமை இருந்திருந்தால், அல்லது ஒரு ஸ்டீராய்டு மருந்தை எடுத்துக்கொண்டபின் உங்களுக்கு தசை வலி உருவாகியிருந்தால்.
 • நீங்கள் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், பேக்கின் உள்ளே இருக்கும் உற்பத்தியாளரின் அச்சிடப்பட்ட தகவல் துண்டுப்பிரசுரத்தையும் மற்றும் உங்கள் மருத்துவரால் வழங்கப்படும் கூடுதல் தகவல்களையும் படிக்கவும். இவை டிஃப்ளஸகார்ட்டை (deflazacort) பற்றிய கூடுதல் தகவல்களைக் கொடுக்கும், மேலும் அதை நீங்கள் எடுத்துக்கொள்ளும் போது அனுபவிக்கக் கூடிய பக்க விளைவுகளின் முழு பட்டியலையும் உங்களுக்கு வழங்கும்.
 • ஒவ்வொரு மருந்தளவிற்கும் எத்தனை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் உங்களுக்கு தெரிவிப்பார். வயதுவந்தோருக்கு, தினசரி ½ -3 மாத்திரைகள் மருந்தளவு வரம்பாகும், இருப்பினும் நீங்கள் மிகவும் உடல் நலமில்லாமல் இருந்தால் இதை விட அதிகமாக இருக்கலாம். காலையில் உங்கள் காலை உணவுடன் மருந்தளவை எடுத்துக்கொள்ளவும். மாத்திரையை தண்ணீருடன் விழுங்கவும். சில நேரங்களில், குழந்தைகளுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் வகையில், மருந்தளவு பரிந்துரைக்கப்படுகிறது.
 • நீங்கள் மருந்தளவை உங்கள் வழக்கமான நேரத்தில் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால், உங்களுக்கு நினைவில் வந்த உடனேயே அதை எடுத்துக்கொள்ளவும் (சாப்பிட ஏதேனும் உணவுடன்). அடுத்த நாள் வரை உங்களுக்கு ஞாபகம் இல்லை என்றால், முந்தைய நாள் மறந்துவிட்ட மருந்தளவை விட்டு விடவும். ஒரு தவறவிட்ட ஒரு மருந்தளவிற்கு ஈடு செய்ய இரண்டு மருந்தளவுகளை ஒன்றாக எடுத்து கொள்ள வேண்டாம்.
 • டிஃப்ளஸகார்ட் (deflazacort) எடுத்து கொள்வதை நிறுத்துமாறு உங்கள் மருத்துவர் கூறும் வரை தொடர்ந்து எடுத்துக் கொள்ளவும். மாத்திரைகள் எடுத்து கொள்வதை திடீரென நிறுத்துவதால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் எப்போதாவது தேவைப்பட்டால் உங்கள் மருந்தளவுகளை படிப்படியாக குறைக்க உங்கள் மருத்துவர் விரும்புவார்.
 • உங்கள் சிகிச்சை மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்தால், நீங்கள் ஸ்டெராய்டுகள் எடுத்துக்கொண்டிருப்பதாக கூறும் மற்றும் உங்களுக்கான முக்கியமான சில ஆலோசனைகள் உள்ள ஒரு ‘ஸ்டெராய்டு சிகிச்சை அட்டை’ (Steroid Treatment Card) உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் இந்த அட்டையை படித்து, எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்வது முக்கியமாகும். இது உங்கள் மருந்தளவு பற்றி, நீங்கள் எவ்வளவு காலமாக டிஃப்ளஸகார்ட் (deflazacort) எடுத்து வருகிறீர்கள் மற்றும் அதை உங்களுக்கு பரிந்துரைத்தவர் யார் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது. இந்த தகவல்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அவை இன்றைய தேதி வரை புதுப்பித்து வைத்திப்பதை உறுதி செய்து கொள்ளவும். நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை அல்லது பல் சார்ந்த சிகிச்சை அல்லது ஒரு காயத்திற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் இருந்தால், சிகிச்சை அளிக்கும் நபரிடம் நீங்கள் டிஃப்ளஸகார்ட் எடுத்து கொள்வதை கூறவும் மற்றும் உங்கள் சிகிச்சை அட்டையைக் காண்பிக்கவும். ஏனென்றால் உங்கள் மருந்தளவு மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
 • உங்கள் மருத்துவருடனான வழக்கமான சந்திப்புகளை தவறாமல் வைத்துக்கொள்ள முயற்சி செய்யவும். இதனால் உங்கள் மருத்துவர் உங்களது முன்னேற்றத்தை சரிபார்க்க முடியும். சிகிச்சையின் தேவையற்ற பக்கவிளைவுகள் சிலவற்றில் இருந்து விடுபடுவதை உறுதிப்படுத்த உங்கள் மருத்துவர் உங்களுக்கு அவ்வப்போது பரிசோதனைகளை பரிந்துரைக்க விரும்பலாம்.
 • டிஃப்ளஸகார்ட் (deflazacort) உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை ஒடுக்கலாம், எனவே நீங்கள் நோய்வாய்ப்பட்டால், உங்கள் மருத்துவரை உடனடியாக சந்திக்க முன்பதிவு (Appointment) பெறுவது முக்கியம் ஆகும். மேலும், தட்டம்மை, ஷிங்கிள்ஸ் (shingles) அல்லது சின்னம்மை (அல்லது அவை இருக்கலாம் என சந்தேகிக்கக்கூடிய எவருடனும்) கொண்ட எவரையேனும் நீங்கள் தீண்டினால், உங்கள் மருத்துவரை கண்டிப்பாக விரைவாக பார்க்க வேண்டும்.
 • நீங்கள் டிஃப்ளஸகார்ட்டுடன் (deflazacort) சிகிச்சை பெறும்போது சில தடுப்பூசிகள் உங்களுக்கு ஏற்றவை அல்ல. உங்களுக்கு ஏதேனும் நோய்த்தடுப்பு தேவைப்பட்டால், நீங்கள் வாய்வழி ஸ்டீராய்டு (steroid) எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை குறிப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 • நீங்கள் ஏதேனும் மருந்துகளை வாங்கினால், டிஃப்ளஸகார்ட்டுடன் (deflazacort) எடுத்துக்கொள்வதற்கு அவை பாதுகாப்பானவை என்பதை உங்கள் மருந்தாளரிடம் சரிபார்க்கவும். குறிப்பாக நீங்கள் செரிமானமின்மைக்கான ஒரு மருந்தை எடுத்துக்கொண்டிருந்தால் (அமில நீக்கி போன்ற) இது அத்தியாவசியமானது, ஏனெனில் நீங்கள் டிஃப்ளஸகார்ட் (deflazacort) எடுத்துக்கொள்ளும் முன் இரண்டு மணிநேரத்திற்கு, அல்லது அதற்கு பிறகு இரண்டு மணிநேரத்திற்கு செரிமானமின்மை நிவர்த்திகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், அமில நீக்கிகள் டிஃப்ளஸகார்ட் (deflazacort) உங்கள் உடலால் உறிஞ்சப்படும் விதத்துடன் குறுக்கிட்டு, அதனை குறைவான செயல்திறனுடையதாக ஆக்கிவிடும்.

அதன் வழக்கமான விளைவுகளுடன் சேர்த்து, டிஃப்ளஸகார்ட் (deflazacort) தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம், இதை பற்றி உங்கள் மருத்துவர் உங்களுடன் கலந்துரையாடுவார். வாய்வழி ஸ்டீராய்டு எடுத்துக்கொள்வதன் நன்மைகள் பொதுவாக பக்க விளைவுகளைவிட அதிகமாக இருக்கும்; எனினும், சில நேரங்களில் அவை தொந்தரவாக இருக்க முடியும். கீழே உள்ள அட்டவணை டிஃப்ளஸகார்ட்டுடன் தொடர்புடைய மிகவும் பொதுவான சிலவற்றைக் கொண்டுள்ளது. உங்கள் மருந்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய பக்க விளைவுகளின் முழு பட்டியலைப் பெற சிறந்த இடம், மருந்துடன் விநியோகிக்கப்படும் உற்பத்தியாளரின் அச்சிடப்பட்ட தகவல் துண்டுப்பிரசுரம் ஆகும். மாற்றாக, உற்பத்தியாளரின் தகவல் துண்டுப்பிரசுரத்தின் ஒரு உதாரணத்தை கீழேயுள்ள குறிப்பு பகுதியில் காணலாம்.

ஒவ்வொருவரும் பக்க விளைவுகளை அனுபவிப்பதில்லை மற்றும் உங்கள் உடல் புதிய மருந்திற்கு ஏற்ப சரி செய்துகொள்ளும் போது சில மேம்படும் என்றாலும், பின்வருபவற்றைப் பற்றி நீங்கள் கவலையடைந்தால் உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும்:

பொதுவான டிஃப்ளஸகார்ட் (deflazacort) பக்க விளைவுகள்நான் இதை அனுபவித்தால் என்ன செய்ய வேண்டும்?
வயிற்று (அடிவயிறு) வலி, செரிமானமின்மை, உடம்பு சரியில்லை என்ற உணர்வுஎளிய உணவை எடுத்துக்கொள்ளவும். நீங்கள் நோய்வாய்ப்பட்டால் (வாந்தி) மற்றும் அதில் இரத்தம் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் உடனடியாக பேச வேண்டும்
தசை பலவீனம் அல்லது சோர்வாக உணர்தல்பாதிக்கப்பட்டிருக்கும்போது வாகனம் ஓட்ட வேண்டாம் மற்றும் கருவிகள் அல்லது இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாம்
மனநிலை அல்லது நடத்தை மாற்றங்கள், குறிப்பாக சிகிச்சை ஆரம்பத்தில்நீங்கள் குழம்பினால், எரிச்சல் அடைந்தால் அல்லது உங்களுக்கு நீங்களே தீங்கு செய்வது பற்றி கவலைப்படத் தொடங்கினால், உங்கள் மருத்துவரிடம் உடனடியாக பேசவும்
சிரமங்களை தூக்க, தலைவலி, அதிக எடை, மற்றும் பெண்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள்இவை ஏதேனும் தொந்தரவாக இருந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசவும்
தொற்றுநோயை அதிகரிப்பதற்கான ஆபத்து அதிகரிக்கலாம்நீங்கள் நோய்வாய்ப்பட்டால், உங்கள் மருத்துவரை உடனடியாக சந்திக்க ஒரு முன் அனுமதியை (Appointment) பெறவும்
டிஃப்ளஸகார்ட் (deflazacort) உடன் நீண்டகால சிகிச்சை மற்ற தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்உங்களுக்கு கவலை அளிக்கும் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை சந்திக்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்

நீண்ட காலமாக டிஃப்ளஸகார்ட் (deflazacort) எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றி மேலும் தகவலுக்கு, Oral Steroids என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தனி துண்டுப்பிரசுரத்தை பார்க்கவும்.

 • அனைத்து மருந்துகளையும் குழந்தைகளுக்கு எட்டாத மற்றும் அவர்கள் கண்களுக்கு புலப்படாத இடத்தில் வைக்கவும்.
 • நேரடி வெப்பம் மற்றும் வெளிச்சத்தில் வைக்காமல் குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.

பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவைவிட அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் அல்லது வேறு யாராவது இந்த மருந்தை அதிகமாக எடுத்துக்கொண்டிருப்பதாக சந்தேகித்தால், உங்கள் உள்ளூர் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரநிலை பிரிவிற்குச் செல்லவும். மருந்து கொள்கலன் காலியாக இருந்தாலும் கூட அதை உங்களுடன் எடுத்துச் செல்லவும்.

இந்த மருந்து உங்களுக்கானது ஆகும். உங்களுடைய நிலைமை மற்றவர்களுக்கு இருப்பதாக தோன்றினாலும் கூட, ஒருபோதும் அவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

காலாவதியான அல்லது தேவையற்ற மருந்துகளை வைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்காக அவற்றை அகற்றும் உங்கள் உள்ளூர் மருந்தகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

உங்களுக்கு இந்த மருந்தைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Further reading and references

 • Manufacturer's PIL, Calcort® 6 mg; Sanofi, The electronic Medicines Compendium. Dated February 2015.

 • British National Formulary; 71st Edition (March-September 2016) British Medical Association and Royal Pharmaceutical Society of Great Britain, London

newnav-downnewnav-up