பூஞ்சைக்காளான் எதிர்ப்பு மருந்துகள் - Antifungal Medicines in Tamil

Last updated by Peer reviewed by Dr John Cox
Last updated

Added to Saved items

பல்வேறு பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க, வெவ்வேறு பூஞ்சைக்காளான் எதிர்ப்பு தயாரிப்புகள் உள்ளன. அவை கிரீம்கள், ஸ்ப்ரேக்கள், கரைசல்கள், ஷாம்பூக்கள், யோனியினுள் செலுத்தப்பட வடிவமைக்கப்பட்ட மாத்திரைகள் (கருப்பையினுள் செலுத்தப்படும் மருந்துகள்), வாய் வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் உட்செலுத்தல்கள் ஆகிய வடிவங்களில் கிடைக்கின்றன. சிகிச்சையின் கால அளவு உங்களுக்கு எந்த வகையான பூஞ்சைக்காளான் நோய்த்தொற்று உள்ளது, அது எவ்வளவு கடுமையானது மற்றும் உங்களுக்கு வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் உதாரணமாக, நோயெதிர்ப்பு அமைப்புடனான பிரச்சினைகள் உள்ளனவா என்பதைப் பொறுத்தது. சில சிகிச்சை திட்டங்கள் ஒரு சில நாட்களே (உதாரணமாக, யோனியின் வெண்புண்) இருக்கும் அளவிற்கு குறுகியதாக இருக்கலாம். மற்ற திட்டங்கள் எட்டு வாரங்கள் வரை இருக்கலாம் (உதாரணமாக, உச்சந்தலையின் படர்தாமரை நோய்த்தொற்று).

உடலின் மேற்பரப்பில் அல்லது அதன் அருகில் உள்ள பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றுகள்

பல வகையான பூஞ்சைக்காளான் கிருமிகள் (பூஞ்சைக்காளான்கள்) மண்ணில், உணவின் மீது, நமது சருமத்தின் மீது மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள மற்ற இடங்களில் தீங்கிழைக்காமல் வாழ்கின்றன. எனினும், சில வகையான பூஞ்சைக்காளான்கள் உடலின் மேற்பரப்பில் பெருகி, தோல், நகங்கள், வாய் அல்லது யோனி ஆகியவற்றில் நோய்தொற்றை ஏற்படுத்தும்.

சரும நோய்தொற்றுகளை ஏற்படுத்தும் மிகவும் பொதுவான பூஞ்சைக்காளான்கள் படை வகையைச் சார்ந்ததாகும். உதாரணமாக, athlete's foot (tinea pedis)(பாதப்படை (டினியா பீடிஸ்)) கால்விரல்கள் மற்றும் பாதங்களின் பொதுவான பூஞ்சைக்காளான் நோய்த்தொற்று ஆகும். டினியா நோய்த்தொற்று ringworm (tinea corporis) (படர்தாமரை (டினியா கார்போரிஸ்)) மற்றும் ringworm of the scalp (tinea capitis) (உச்சந்தலையின் படர்தாமரை (டினியா கேபிடிஸ்)) ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. இது பல fungal nail infections (பூஞ்சைக்காளான் நக நோய்த்தொற்றையும்) ஏற்படுத்துகிறது. fungal infection of the mouth (வாய்) மற்றும் fungal infection of the vagina (யோனியின் ஒரு பொதுவான பூஞ்சை காளான் நோய்த்தொற்று) வெண்புண் (த்ரஷ்) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ஈஸ்ட் (பூஞ்சைக்காளான் வகை) ஆன கேன்டிடாவின் மிகைவளர்ச்சியால் ஏற்படுகிறது. சிறிய எண்ணிக்கையிலான கேண்டிடா பொதுவாக சருமத்தின் மீது தீங்கிழைக்காமல் வாழ்கிறது. எனினும், சில நிலைகளால் candida to multiply and cause infection (கேண்டிடா பெருகி, நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்). கேண்டிடா சில நேரங்களில் சில பூஞ்சைக்காளான் நக நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகிறது.

உடலுக்குள் ஏற்படும் பூஞ்சைக்காளான் நோய்த்தொற்று

சருமம், நகங்கள், யோனி மற்றும் வாய் ஆகியவற்றின் பூஞ்சைக்காளான் நோய்தொற்றுகள் மிகவும் பொதுவானவை. அவை அரிதாகவே கடுமையானதாக இருக்கின்றன, மற்றும் அவை பொதுவாக உடலில் ஆழமாக பரவுவதில்லை. நீங்கள் மற்றபடி ஆரோக்கியமாகவும் மற்றும் ஒரு சாதாரண நோய் எதிர்ப்பு அமைப்பையும் கொண்டிருந்தால், பூஞ்சைக்காளான் உட்புற உறுப்புக்களை பாதிப்பது என்பது அரிதானது. எனினும், இருதயம், நுரையீரல், மூளை மற்றும் பிற உறுப்புகளின் பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றுகள் சில நேரங்களில் நிகழலாம். இந்த உட்புற பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றுகள் கடுமையானதாகவும், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கலாம்.

பூஞ்சைக் காளானின் பல்வேறு வகைகள் உட்புற நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு:

 • ஆஸ்பர்ஜில்லோசிஸ் (Aspergillosis) மிகவும் பொதுவாக நுரையீரலை பாதிக்கிறது, ஆனால் சில நேரங்களில் மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.
 • க்ரிப்டோகாக்கோசிஸ் (Cryptococcosis) வழக்கத்திற்கு மாறானது, ஆனால் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தலாம்.
 • ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் (Histoplasmosis) அரிதானது, ஆனால் நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளிள் கடுமையான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம்.

உங்கள் immune system (நோயெதிர்ப்பு அமைப்பு) ஒழுங்காக இயங்கவில்லையெனில், உட்புற பூஞ்சைக்காளான் நோய்த்தொற்று உருவாகுவதற்கான அதிக ஆபத்து உங்களுக்கு இருக்கிறது. உதாரணமாக, உங்களுக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ் (HIV/AIDS) இருக்கும்போது, நீங்கள் கீமோதெரபி எடுத்துக் கொள்வது போன்றவை. மோசமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ள சிலருக்கு கடுமையான பூஞ்சைக்காளான் நோய்த்தொற்று உருவாகுவதைத் தடுக்க வழக்கமான பூஞ்சைக்காளான் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

பல்வேறு வகையான பூஞ்சைக்காளான் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன. அவை கிரீம்கள், ஸ்ப்ரேக்கள், கரைசல்கள், யோனியினுள் செலுத்தப்பட வடிவமைக்கப்பட்ட மாத்திரைகள் (கருப்பையினுள் செலுத்தப்படும் மருந்துகள்), ஷாம்பூக்கள், வாய் வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் உட்செலுத்தல்கள் ஆகிய வடிவங்களில் கிடைக்கின்றன பெரும்பாலானவை பூஞ்சைக் காளானின் உயிரணுச் சுவரை சேதப்படுத்துவதன் மூலம், பூஞ்சைக்காளான் உயிரணு இறப்பிற்கு காரணமாகின்றது. பூஞ்சைக்காளான் எதிர்ப்பு உட்செலுத்தல் முறைக்கு பரிந்துரைக்கப்படும் மக்கள் பொதுவாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர் மற்றும் அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும்.

பூஞ்சைக்காளான் எதிர்ப்பு கிரீம்கள், திரவங்கள் அல்லது, ஸ்ப்ரேக்கள் (மேற்புரத்தில் பூசும் பூஞ்சைக்காளான் எதிர்ப்பிகள்)

இவை சருமம், உச்சந்தலை மற்றும் நகங்கள் ஆகியவற்றின் பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகின்றன. அவை clotrimazole (க்ளோட்ரிமஸோல்), econazole (எகோனஸோல்), ketoconazole (கீட்டோகோனஸோல்), miconazole (மிக்கோனஸோல்), tioconazole (டியோகோனஸோல்), terbinafine (டர்பினஃபைன்) மற்றும் amorolfine (அமோரோல்ஃபைன்) ஆகியவற்றை உள்ளடக்கும். அவை பல வெவ்வேறு நிறுவன பெயர்களில் கிடைக்கின்றன.

சில நேரங்களில் இரண்டு செயல்பாடுகள் தேவைப்படும் போது ஒரு பூஞ்சைக்காளான் எதிர்ப்பு கிரீம், மற்ற கிரீம்களுடன் கலந்து பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, ஒரு பூஞ்சைக்காளான் எதிர்ப்பு கிரீம் சில தடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க பெரும்பாலும் hydrocortisone (ஹைட்ரோகோர்டிசோன்) போன்ற ஒரு லேசான ஸ்டீராய்டு கிரீமுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. பூஞ்சைக்காளான் எதிர்ப்பு கிரீம் நோய்த்தொற்றை அழிக்கிறது மற்றும் லேசான ஸ்டீராய்டு கிரீம் நோயைத்தொற்றின் காரணமாக ஏற்படும் அழற்சியை குறைக்கிறது.

பூஞ்சைக்காளான் எதிர்ப்பு ஷாம்பூ

கீட்டோகோனஸோல் (ketoconazole) கொண்ட ஷாம்பு சில சமயங்களில் உச்சந்தலை பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றுகளுக்கும், சில சரும நிலைகளுக்கும் சிகிச்சையளிக்க உதவ பயன்படுத்தப்படுகிறது.

கருப்பையினுள் செலுத்தப்படும் பூஞ்சைக்காளான் எதிர்ப்பு மருந்துகள்

ப்ரெஸ்ஸரிக்கள் (Pessaries) யோனியினுள் செலுத்தப்பட வடிவமைக்கப்பட்ட மாத்திரைகள் ஆகும். சில பூஞ்சைக்காளான் எதிர்ப்பு மருந்துகள் குறிப்பாக க்ளோட்ரிமஸோல் (clotrimazole), எகோனஸோல் (econazole), மிக்கோனஸோல் (miconazole) மற்றும் ஃபெண்டிகோனசோல் (fenticonazole) ஆகியவை யோனியின் வெண்புண்ணிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகின்றன.

வாய் வழியாக எடுத்துக்கொள்ளப்படும் பூஞ்சைக்காளான் எதிர்ப்பு மருந்துகள்

பல்வேறு வகைகள் உள்ளன. உதாரணத்திற்கு:

Miconazole (மிக்கோனஸோல்) ஒரு வாய்வழி ஜெல்-லாகவும், மற்றும் nystatin (நைஸ்டாட்டின்) ஒரு திரவமாகவும் கிடைக்கின்றன. அவை வாயின் மீது தடவப்படுகின்றன. அவை வாய் மற்றும் தொண்டையின் வெண்புண்ணிற்கு (கேண்டிடல் தொற்று) சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகின்றன.

Terbinafine (டர்பினாஃபைன்), itraconazole (இட்ராகோனஸோல்), fluconazole (ஃப்ளுகோனஸோல்), posaconazole (பொஸாக்கோனஸோல்) மற்றும் voriconazole (வொரிகோனஸோல்) ஆகியவை உடலிற்குள் உறிஞ்சப்படும் மாத்திரைகளாக கிடைக்கின்றன. அவை பல்வேறு பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றுகளைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் ஒன்று, உங்களுக்கு எந்த வகையான நோய்த்தொற்று உள்ளது என்பதைப் பொறுத்தது. உதாரணத்திற்கு:

 • டர்பினாஃபைன் (Terbinafine) பொதுவாக நக நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது, இது பொதுவாக ஒரு டினியா வகை பூஞ்சைக்காளானால் ஏற்படுகிறது
 • ஃப்ளுகோனஸோல் (Fluconazole) பூஞ்சைக்காளான் எதிர்ப்பு கிரீம் பயன்படுத்துவதற்கு ஒரு மாற்றாக, யோனியின் வெண்புண் சிகிச்சைக்கு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. உடலினுள் உள்ள குறிப்பிட்ட சில பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும், தடுக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

பூஞ்சைக்காளான் எதிர்ப்பு உட்செலுத்துதல்கள்

உடலினுள் ஒரு கடுமையான பூஞ்சைக்காளான் நோய்த்தொற்று இருந்தால், இவை பயன்படுத்தப்படலாம். ஆம்ஃபோடெரிசின் (Amphotericin), ஃப்ளூசைட்டோசைன் (flucytosine), இட்ராகோனஸோல் (itraconazole), வொரிகோனஸோல் (voriconazole), அனிடுலாஃபங்கின் (anidulafungin), காஸ்ப்போஃபங்கின் (caspofungin) மற்றும் மிகாஃபங்கின் (micafungin) மருந்துகள் சில நேரங்களில் இந்த வழியில் பயன்படுத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் ஒன்று, நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பூஞ்சைக்காளானின் வகையைப் பொறுத்தது.

குறிப்பு: பூஞ்சைக்காளான் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரிய எதிர்ப்பி மருந்துகளான, நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் இருந்து மாறுபட்டவை. Antibiotics (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்) பூஞ்சைக்காளான்களை கொல்வதில்லை அவை (பாக்டீரியா என்று அழைக்கப்படும்) பிற வகையான கிருமிகளைக் கொல்கின்றன. உண்மையில், நீங்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக் கொண்டால், பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, பல பெண்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களுக்கு வெண்புண் உருவாகிறது. இது ஏனென்றால், உங்கள் சருமம் அல்லது யோனியில் வாழும் சாதாரண தீங்கிழைக்காத பாக்டீரியாக்களை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அழித்துவிடலாம் மற்றும் பூஞ்சைக்காளான்கள் செழித்து வளர்வதை எளிதாக்கலாம்.

எச்சரிக்கைகள் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகளின் முழு பட்டியலுக்காக உங்கள் குறிப்பிட்ட பிராண்டுடன் வரும் தகவல் துண்டுப்பிரசுரத்தை நீங்கள் படிக்க வேண்டும். ஒரு பொதுவான விதியாக:

 • பூஞ்சைக்காளான் எதிர்ப்பு கிரீம்கள், ஸ்ப்ரேக்கள், திரவங்கள் மற்றும் ஷாம்பூக்கள். இவை வழக்கமாக பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை மற்றும் பயன்படுத்த எளிதானது. எப்போதாவது சிலருக்கு பூஞ்சைக்காளான் எதிர்ப்பு தயாரிப்பு தடவப்பட்ட இடத்தில் சிறிதளவு நமைச்சல், எரிச்சல் அல்லது சிவத்தல் ஆகியவை ஏற்படுகின்றன. இது கடுமையானதாக இருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். எப்போதாவது, சில பெண்களுக்கு யோனிக்கான பூஞ்சைக்காளான் எதிர்ப்பு தயாரிப்பு தடவப்பட்ட பிறகு யோனியைச் சுற்றி எரிச்சல் உண்டாகிறது.
 • வாய் வழியாக எடுத்துக்கொள்ளும் பூஞ்சைக்காளான் எதிர்ப்பு மருந்துகள். நக நோய்த்தொற்றுக்காக டெர்பினஃபைன் (terbinafine) மற்றும் வாயின் வெண்புண்ணிற்காக நைஸ்ட்டேட்டின் (nystatin) மற்றும் யோனியின் வெண்புண்ணிற்காக ஃப்ளுகோனஸோல் (fluconazole) ஆகியவை மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவாக எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. இது பிரச்சனைகளை ஏற்படுத்த சாத்தியமில்லாத ஒரு மருந்து என கருதப்படுவதால், ஃப்ளுகோனஸோலை (fluconazole) மருந்துச்சீட்டு இல்லாமல் கடைகளில் வாங்கலாம். சில பூஞ்சைக்காளான் எதிர்ப்பு தயாரிப்புகள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களில் கல்லீரல் பிரச்சினைகள் அல்லது இன்னும் அதிக கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சில பூஞ்சைக்காளான் எதிர்ப்பு மருந்துகளின் பொதுவான பக்க விளைவுகளில் சில பின்வருவன:
  • டெர்பினஃபைன் (Terbinafine) சில நேரங்களில் வயிற்று வலி, பசி இழத்தல், தூக்கமின்மை, உடம்பு சரியில்லாத உணர்வு (குமட்டல்), வயிற்று கோளாறுகள், வயிற்றுப்போக்கு, தலைவலி, சொறி, சுவை இடையூறு மற்றும் தசை அல்லது மூட்டு வலிகள் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
  • ஃப்ளுகோனஸோல் (Fluconazole) குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாய்வு, தலைவலி, அல்லது சொறி ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.
  • மிகோனஸோல் (Miconazole) குமட்டல் அல்லது உடல்நலமின்மை (வாந்தியெடுத்தல்), அல்லது சொறி ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.
  • நைஸ்ட்டேட்டின் (Nystatin) வாயில் புண்ணை ஏற்படுத்தலாம்.
 • பூஞ்சைக்காளான் எதிர்ப்பு உட்செலுத்தல்கள். இவை பக்க விளைவுகள் மற்றும் சில நேரங்களில் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் அதிக ஆபத்து கொண்டவை. எனினும், இவை கடுமையான பூஞ்சைக்காளான் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் சிகிச்சைக்கான தேவைக்கு பக்க விளைவுகளின் ஆபத்துகளை சமநிலைப்படுத்தப்பட வேண்டும்.

சிகிச்சையின் கால அளவு உங்களுக்கு எந்த வகையான பூஞ்சைக்காளான் நோய்த்தொற்று உள்ளது, அது எவ்வளவு கடுமையானது மற்றும் உங்களுக்கு வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் உதாரணமாக, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புடனான பிரச்சினைகள் உள்ளனவா என்பதைப் பொறுத்தது. சில சிகிச்சை திட்டங்கள் ஒரு சில நாட்களே (eg, for vaginal thrush (உதாரணமாக, யோனியின் வெண்புண்)) இருக்கும் அளவிற்கு குறுகியதாக இருக்கலாம். மற்ற திட்டங்கள் எட்டு வாரங்கள் வரை இருக்கலாம் (eg, for ringworm infection of the scalp (உதாரணமாக, உச்சந்தலையின் படர்தாமரை நோய்த்தொற்று)).

பெரும்பாலான மக்களால் மேற்புரத்தில் பூசும் பூஞ்சைக்காளான் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தவும் மற்றும் வாய்வழி பூஞ்சைக்காளான் எதிர்ப்பிகளை எடுத்துக்கொள்ளவும் முடிகிறது. உங்களுக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவர் அல்லது மருந்தாளர் அவை குறிப்பாக உங்களுக்கு பொருத்தமானதா என்பதைப் சரிபார்ப்பார்கள். எனினும், நீங்கள் ஒரு பூஞ்சைக்காளான் எதிர்ப்பியை எடுத்துக்கொள்ள முடிந்தாலும், உங்கள் மருத்துவர் வழக்கமாக உங்களுக்கு பொருத்தமான ஒன்றை கண்டறியலாம்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தால், அல்லது உங்களுக்கு கடுமையான கல்லீரல் நோய் அல்லது சிறுநீரக நோய் இருந்தால் நீங்கள் வாய்வழி பூஞ்சைக்காளான் எதிர்ப்பி மாத்திரைகளை எடுக்க முடியாமல் போகலாம். குழந்தைகளுக்கு வழக்கமாக வாய்வழி பூஞ்சைக்காளான் எதிர்ப்பி மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதில்லை, மற்றும் அவை பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அது வழக்கமாக ஒரு நிபுணரால் மட்டுமே செய்ய முடியும்.

சில வாய்வழி பூஞ்சைக்காளான் எதிர்ப்பிகள் நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய பிற மருந்துகளுடன் இடைவினை புரியலாம். இது எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம், அல்லது ஒன்று அல்லது மற்ற சிகிச்சைகளின் செயல்திறனைக் குறைக்கலாம். எனவே, உங்களுக்கு ஒரு பூஞ்சைக்காளான் எதிர்ப்பி பரிந்துரைக்கப்படுகையில், நீங்கள் பிற மருந்துகளை எடுத்துக் கொண்டால் ஒரு மருத்துவரிடம் கூற வேண்டும்.

ஆம் - உங்கள் மருந்தகத்தில் வாங்கக்கூடிய பலவிதமான பூஞ்சைக்காளான் எதிர்ப்பு கிரீம்கள் உள்ளன (உதாரணத்திற்கு, க்ளோட்ரிமஸோல் (clotrimazole), மற்றும் டர்பினஃபைன் (terbinafine)). கூடுதலாக, யோனியின் வெண்புண்களுக்கு சிகிச்சை அளிக்க, ஃப்ளுகோனஸோலை (fluconazole) உங்கள் மருந்தகத்தில் இருந்து வாங்கலாம்.

உங்கள் மருந்துகளில் ஒன்று உங்களுக்கு ஒரு பக்க விளைவை ஏற்படுத்தி உள்ளது என்று நீங்கள் நினைத்தால், இதனை மஞ்சள் அட்டை திட்டத்தில் நீங்கள் புகாரளிக்கலாம். இதை நீங்கள் ஆன்லைனில் பின்வரும் இணையதள முகவரியில் செய்யலாம்: www.mhra.gov.uk/yellowcard.

உங்களுடைய மருந்துகள் அல்லது வேறு ஏதேனும் உடல்நல கவனிப்பு பொருட்களால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஏதேனும் புதிய பக்க விளைவுகளை பற்றி மருந்தாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறிந்துகொள்ள மஞ்சள் அட்டை திட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பக்க விளைவைப் பற்றி நீங்கள் புகாரளிக்க விரும்பினால், நீங்கள் பின்வருபவை பற்றிய அடிப்படை தகவல்களை வழங்க வேண்டும்:

 • பக்க விளைவு.
 • அதை ஏற்படுத்தியது என நீங்கள் நினைக்கும் மருந்தின் பெயர்.
 • பக்க விளைவு கொண்ட நபர்.
 • பக்க விளைவு பற்றி புகாரளிப்பவராக உங்களுடைய தொடர்பு விவரங்கள்.

நீங்கள் அறிக்கையை பூர்த்தி செய்யும் பொழுது உங்கள் மருந்து மற்றும்/அல்லது அத்துடன் வந்த துண்டுப்பிரசுரம் உங்களுடன் இருந்தால், உதவிகரமாக இருக்கும்.

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Further reading and references

newnav-downnewnav-up