வலி மற்றும் அழற்சிக்கான அசிக்லோஃபெனாக் மாத்திரைகள் - ப்ரிசர்வெக்ஸ் Preservex

Authored by , Reviewed by Dr Hannah Gronow | Last edited

அசிக்லோஃபெனாக் (Aceclofenac) என்பது ஒரு ஸ்டெராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்தாகும். இது 'NSAID' என்றும் அழைக்கப்படுகிறது.

நீங்கள் அசிக்லோஃபெனாக்(Aceclofenac)-ஐ எடுத்துக்கொள்ளும் முன், வேறு ஏதேனும் அழற்சி எதிர்ப்பு வலிநீக்கி மருந்திற்கு, ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால். உங்களுடைய மருத்துவரிடம் கூறவும்.

காலையில் ஒரு மாத்திரை மற்றும் மாலையில் ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்ளவும். உணவை உட்கொள்ளும்போது அல்லது சிற்றுண்டிற்குப் பிறகு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும்.
மருந்தின் வகைஒரு ஸ்டெராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து (NSAID)
பயன்பாடுகள்மூட்டு அழற்சி அல்லது முதுகெலும்பு அழற்சி கொண்ட வயது வந்தவர்களில் வலி மற்றும் அழற்சியின் நிவாரணம்
பிற பெயர்கள்ப்ரிசர்வெக்ஸ்® (Preservex®)
கிடைக்கும் வகைமாத்திரைகள்

அசிக்லோஃபெனாக் போன்ற அழற்சி எதிர்ப்பு வலிநீக்கிகள் (Anti-inflammatory painkillers), ஸ்டெராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDகள்) என்றும் சிலநேரங்களில் 'அழற்சி எதிர்ப்பிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. அசிக்லோஃபெனாக் (Aceclofenac) osteoarthritis (ஒஸ்ட்டேவ்ர்த்ரிட்டிஸ்), rheumatoid arthritis (ரஹியூமட்டாய்டு ஆர்த்ரிடிஸ்) மற்றும் ankylosing spondylitis (அங்கயலோசிங் ஸ்பாண்டிலைடிஸ்) போன்ற வலிமிகுந்த வாத நிலைமைகளைக் கொண்ட மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது வலியை போக்கி அழற்சியை குறைக்கிறது.

சைக்ளோ-ஆக்ஸிஜனேஸ் (cyclo-oxygenase -COX) நொதிகள் என்று அழைக்கப்படும் இயற்கை பொருட்களின் விளைவுகளை தடுப்பதன் மூலம் அசிக்லோஃபெனாக் (Aceclofenac) வேலை செய்கிறது. இந்த நொதிகள் உடலில் புரோஸ்ட்டக்ளாண்டின்கள் (prostaglandins) என்று அழைக்கப்படும் பிற வேதியியல் பொருட்களை தயாரிக்க உதவுகின்றன. சில புரோஸ்ட்டக்ளாண்டின்கள் காயம் அல்லது சேதம் ஏற்படும் இடங்களில் உற்பத்தியாகி, வலி மற்றும் அழற்சியை ஏற்படுத்துகின்றன . COX நொதிகளின் விளைவை தடுப்பதன் மூலம், குறைந்த அளவான புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதாவது வலி மற்றும் அழற்சி குறைக்கப்படுகிறது.

சில மருந்துகள் சில குறிப்பிட்ட நிலைமைகள் கொண்ட மக்களுக்கு ஏற்றவை அல்ல, மற்றும் சில சமயங்களில் கூடுதல் கவனிப்பு மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே மருந்து பயன்படுத்தப்பட முடியும். இந்த காரணங்களுக்காக, நீங்கள் அசிக்லோஃபெனாக் எடுத்துக்கொள்ளும் முன், உங்கள் மருத்துவர் பின்வருவனவற்றை அறிவது முக்கியமாகும்:

 • உங்களுக்கு வேறு ஏதேனும் NSAIDக்கு (ஆஸ்பிரின் (aspirin), நப்ரோக்சன் (naproxen), டைக்ளோஃபினாக் (diclofenac) மற்றும் இண்டோமெட்டாசின் (indometacin) போன்றவை) அல்லது வேறு ஏதேனும் மருந்திற்கு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால்.
 • வயிற்றுப்புண் காரணமாக, உங்களுக்கு வயிற்றுடனான பிரச்சினை அல்லது முன்சிறுகுடலின் இரத்தப்போக்கு எப்போதாவது ஏற்பட்டிருந்தால்.
 • உங்களுக்கு ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் ஒவ்வாமை கோளாறு இருந்தால்.
 • உங்களுக்கு இருதயம் தொடர்பான சிக்கல்கள் அல்லது உங்கள் இரத்த நாளங்கள் அல்லது சுழற்சியுடன் சிக்கல் ஏற்பட்டிருந்தால்.
 • நீங்கள் கர்ப்பமாக இருந்தால், குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அல்லது தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால்.
 • உங்களுடைய கல்லீரல் வேலை செய்யும் விதத்துடன் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், அல்லது உங்களுடைய சிறுநீரகங்கள் வேலை செய்யும் விதத்துடன் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால்.
 • உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால்.
 • உங்களுக்கு எப்போதாவது இரத்தம் உறைதல் பிரச்சினைகள் இருந்திருந்தால்.
 • உங்களுக்கு கிரோன்ஸ் நோய் (Crohn's disease) அல்லது பெருங்குடல் புண் போன்ற அழற்சியுடைய குடல் கோளாறு இருந்தால்.
 • உங்களுக்கு சிஸ்டெமிக் லூபஸ் எரிதிமடோசஸ் போன்ற ஒரு இணைப்பு திசு கோளாறு இருந்தால். இது லூபஸ் அல்லது SLE என்றும் அழைக்கப்படும் ஒரு அழற்சி விளைவிக்கின்ற நிலை ஆகும்.
 • உங்களுக்கு பார்ஃபிரியா (porphyria) எனப்படும் ஒரு அரிதான மரபுவழி ரத்த கோளாறு இருந்தால்.
 • நீங்கள் வேறு ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால். இது மருந்துச் சீட்டு இல்லாமல் வாங்குவதற்கு கிடைக்கக்கூடிய மருந்துகள், மூலிகை மற்றும் நிரப்பு மருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.
 • நீங்கள் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், பேக்கின் உள்ளே இருக்கும் உற்பத்தியாளரின் அச்சிடப்பட்ட தகவல் துண்டுப்பிரசுரத்தை படிக்கவும். இது அசிக்லோஃபெனாக் பற்றிய கூடுதல் தகவல்களைக் கொடுக்கும், மேலும் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது அனுபவிக்கக் கூடிய பக்க விளைவுகளின் முழு பட்டியலையும் உங்களுக்கு வழங்கும்.
 • உங்கள் மருத்துவர் உங்களுக்கு கூறியபடி அசிக்லோஃபெனாக்கை எடுத்துக் கொள்ளவும். வழக்கமான மருந்தளவு தினமும் இரண்டு முறை 100 மி.கி. மாத்திரை, காலை மற்றும் மாலையில் எடுத்துக்கொள்வது விரும்பத்தக்கது.
 • அசிக்லோஃபெனாக்கை சாப்பாட்டுடன் எடுத்துக்கொள்ளவும்; ஒரு உணவு நேரத்தின் போது எடுத்துக்கொள்வது சிறந்ததாகும். இது செரிமானமின்மை மற்றும் வயிற்று எரிச்சல் போன்ற பக்க விளைவுகளிலிருந்து உங்கள் வயிற்றைப் பாதுகாக்க உதவுகிறது.
 • மாத்திரையை தண்ணீருடன் விழுங்கவும். மாத்திரைகளை மெல்லவோ அல்லது நசுக்கவோ வேண்டாம்.
 • நீங்கள் ஒரு மருந்தளவை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால், உங்களுக்கு நினைவில் வந்த உடனேயே எடுத்துக்கொள்ளவும் (உங்கள் அடுத்த மருந்தளவிற்கு நேரமாகிவிட்டால், அடுத்த மருந்தளவை எடுத்துக்கொள்ளவும், மறந்துவிட்ட மருந்தளவை விட்டு விடவும்). தவறவிட்ட ஒரு மருந்தளவிற்கு ஈடு செய்ய இரண்டு மருந்தளவுகளை ஒன்றாக எடுத்து கொள்ள வேண்டாம்.
 • பக்க விளைவுகளின் அபாயத்தை குறைக்கும் பொருட்டு, உங்கள் மருத்துவர் குறுகிய காலத்திற்கு குறைந்தபட்ச மருந்தளவை பரிந்துரைக்க முயற்சிப்பார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நீங்கள் அசிக்லோஃபெனாக் எடுத்துக்கொள்ள தேவைப்பட்டால், உங்கள் வயிற்றை எரிச்சலில் இருந்து பாதுகாக்க அதனுடன் சேர்த்து மற்றொரு மருந்தையும் உங்கள் மருத்துவர் பரிந்துரைக்க விரும்பலாம்.
 • உங்கள் மருத்துவருடனான வழக்கமான சந்திப்புகளை தவறாமல் வைத்துக்கொள்ள முயற்சி செய்யவும். இதனால் உங்கள் மருத்துவர் உங்களது முன்னேற்றத்தை சரிபார்க்க முடியும்.
 • உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், மூச்சிரைத்தல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் அசிக்லோஃபெனாக் போன்ற அழற்சி எதிர்ப்பிகளால் மோசமடையக் கூடும். இது உங்களுக்கு நடந்தால், நீங்கள் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும் மற்றும் விரைவில் உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
 • நீண்டகாலமாக சில அழற்சி எதிர்ப்பு வலி நீக்கிகளை எடுத்துக்கொள்ளும் மக்களில் உள்ள இருதய மற்றும் இரத்த நாள பிரச்சினைகளின் ஆபத்து சற்று அதிகமாக இருப்பதாக அறியப்படுகிறது. உங்கள் மருத்துவர் இதை பற்றி உங்களுக்கு விளக்குவார் மற்றும் அபாயத்தை குறைக்கும் பொருட்டு, குறுகிய காலத்திற்கு குறைந்தபட்ச மருந்தளவை பரிந்துரைப்பார். பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவை விட அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
 • நீங்கள் ஏதேனும் மருந்துகளை வாங்கினால், அசிக்லோஃபெனாக் போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துடன் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா என்று ஒரு மருந்தாளரிடம் சரிபார்க்கவும். இது ஏனென்றால் நீங்கள் மருந்துச் சீட்டு இல்லாமல் கடையில் வாங்கக்கூடிய இந்த மாத்திரைகளை சளி மற்றும் காய்ச்சல் குணப்படுத்தும் நிவாரணிகளில் கிடைக்கும் சில பிற எதிர்ப்பு அழற்சி நீக்கியுடன் எடுத்துக் கொள்ளக் கூடாது.
 • நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை அல்லது பல் சார்ந்த சிகிச்சையை பெறுவதாக இருந்தால், நீங்கள் என்ன மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று சிகிச்சையை மேற்கொள்ளும் நபரிடம் கூறவும்.

பெரும்பாலான மருந்துகள் தங்களது பயனுள்ள விளைவுகளுடன், எல்லோராலும் அனுபவிக்கப்படாவிட்டாலும் தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கீழே உள்ள அட்டவணை அசிக்லோஃபெனாக்குடன் தொடர்புடைய மிகவும் பொதுவான சிலவற்றைக் கொண்டுள்ளது. உங்கள் மருந்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய பக்க விளைவுகளின் முழு பட்டியலைப் பெற சிறந்த இடம், மருந்துடன் விநியோகிக்கப்படும் உற்பத்தியாளரின் அச்சிடப்பட்ட தகவல் துண்டுப்பிரசுரம் ஆகும். மாற்றாக, உற்பத்தியாளரின் தகவல் துண்டுப்பிரசுரத்தின் ஒரு உதாரணத்தை கீழேயுள்ள குறிப்பு பகுதியில் காணலாம். பின்வருவனவற்றில் ஏதாவது தொடர்ந்து இருந்தால் அல்லது தொந்தரவாக இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும்.

பொதுவான அசிக்லோஃபெனாக் பக்க விளைவுகள் (இவை 10 இல் 1 நபருக்கும் குறைவானவர்களை பாதிக்கிறது)நான் இதை அனுபவித்தால் என்ன செய்ய வேண்டும்?
செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், வயிற்று வலிமாத்திரைகளை ஏதாவது உணவுடன் எடுத்துக்கொள்ள நினைவில் கொள்ளவும். அசௌகரியம் தொடர்ந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசவும்
உடம்பு சுகவீனம்எளிய உணவை எடுத்துக்கொள்வதயே பின்பற்றவும் - கொழுப்பு நிறைந்த அல்லது காரமான உணவுகளை தவிர்க்கவும்
வயிற்றுப்போக்குஇழந்த திரவங்களை மாற்றீடு செய்வதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும்
மயக்க உணர்வுபாதிக்கப்பட்டிருக்கும் போது வாகனம் ஓட்ட வேண்டாம் மற்றும் கருவிகள் அல்லது இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாம்
அதிகரித்த கல்லீரல் நொதிகள்இது ஒரு கவலையாக இருந்தால், இதனை சரிபார்க்க ஒரு இரத்த பரிசோதனை செய்துகொள்ளுமாறு உங்கள் மருத்துவர் உங்களிடம் கேட்கலாம்

முக்கியமானது: பின்வருவனவற்றில் ஏதேனும் பொதுவான ஆனால் சாத்தியமாக கடுமையான அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், அசிக்லோஃபெனாக் எடுத்துக்கொள்வதை நிறுத்தவும் மற்றும் ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளவும்:

 • உங்களுக்கு மூச்சிரைத்தல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற சுவாசிப்பதில் சிரமங்கள் இருந்தால்.
 • உங்களுடைய வாய் அல்லது முகத்தை சுற்றி வீக்கம், அல்லது கடுமையான நமைச்சல் கொண்ட தோல் சொறி போன்ற ஒரு ஒவ்வாமை அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்.
 • நீங்கள் இரத்தம் அல்லது கறுப்பு நிறமான மலம் கழித்தால், அல்லது இரத்த வாந்தி எடுத்தால் அல்லது உங்களுக்கு கடுமையான வயிற்று (அடிவயிற்று) வலி இருந்தால்.

மாத்திரைகளின் காரணமாக இருக்கலாம் என நீங்கள் நினைக்கும் வேறு எந்த அறிகுறிகளையும் நீங்கள் அனுபவித்தால், மேலும் ஆலோசனை பெற உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும்.

 • அனைத்து மருந்துகளையும் குழந்தைகளுக்கு எட்டாத மற்றும் அவர்கள் கண்களுக்கு புலப்படாத இடத்தில் வைக்கவும்.
 • நேரடி வெப்பம் மற்றும் வெளிச்சத்தில் வைக்காமல் குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.

பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவைவிட அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் அல்லது வேறு யாராவது இந்த மருந்தை அதிகமாக எடுத்துக்கொண்டிருப்பதாக சந்தேகித்தால், உங்கள் உள்ளூர் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரநிலை பிரிவிற்குச் செல்லவும். மருந்து கொள்கலன் காலியாக இருந்தாலும் கூட அதை உங்களுடன் எடுத்துச் செல்லவும்.

இந்த மருந்து உங்களுக்கானது ஆகும். உங்களுடைய நிலைமை மற்றவர்களுக்கு இருப்பதாக தோன்றினாலும் கூட, ஒருபோதும் அவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

காலாவதியான அல்லது தேவையற்ற மருந்துகளை வைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்காக அவற்றை அகற்றும் உங்கள் உள்ளூர் மருந்தகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

உங்களுக்கு இந்த மருந்தைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Have new COVID-19 symptoms?
Become a COVID-19 treatment pioneer today.
Find out more

Further reading and references

 • Manufacturer’s PIL, Preservex® film-coated tablets; Almirall Limited, The electronic Medicines Compendium. Dated January 2017.

 • British National Formulary; 72nd Edition (Sep 2016) British Medical Association and Royal Pharmaceutical Society of Great Britain, London

Hi guys. New member here. I am researching for my 65 year old mother, diagnosed with RA, and on Humira every 14 days. I just have several questions for those of you who have received the COVID...

LilaVanilla
Health Tools

Feeling unwell?

Assess your symptoms online with our free symptom checker.

Start symptom checker
newnav-downnewnav-up