பாராசிட்டமால் - Paracetamol கால்பால் - Calpol, டிஸ்ப்ரால் - Disprol, ஹெடெக்ஸ் - Hedex, பானடால் - Panadol

Last updated by Peer reviewed by Dr Helen Huins
Last updated

Added to Saved items

பாராசிட்டமால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது, அதிகரித்த உடல் வெப்பநிலையையும் (காய்ச்சல்) குறைக்கிறது.

நீங்கள் பாராசிட்டமால் மருந்தளவை தேவைப்பட்டால் ஒவ்வொரு 4-6 மணிநேரங்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் எந்தவொரு 24 மணி நேரக் காலக்கட்டத்திலும் நான்கு மருந்தளவுகளை விட அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

பாராசிட்டமாலுடன் சேர்த்து பாராசிட்டமாலைக் கொண்டுள்ள, வேறு எந்தவொரு மருந்துத் தயாரிப்பையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. நீங்கள் அளவுக்கு அதிகமாகப் பாராசிட்டமாலை எடுத்துக்கொண்டால், நீங்கள் நன்றாக இருப்பதாக உணர்ந்தாலும் கூட, ஒரு மருத்துவரிடம் உடனடியாகப் பேசுங்கள்.

மருந்தின் வகைவலிக்கொல்லி
பயன்பாடுபெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் வலி மற்றும் காய்ச்சல் (அதிக உடல் வெப்பநிலை)
பிற பெயர்கள்அசிட்டாமினோபென் (Acetaminophen) (US-இல்); ஆல்விடான்® (Alvedon®); கால்பால்® (Calpol®); டிஸ்ப்ரால்® (Disprol®); ஹெடெக்ஸ்® (Hedex®); மண்டனால்® (Mandanol®); மெடினால்® (Medinol®); பானடால்® (Panadol®)
கிடைக்கும் வகைமாத்திரை, உறைமாத்திரை, கரையக்கூடிய மாத்திரை, 'வாயில் வைத்துச் சப்பினால் கரைந்துவிடும்' மாத்திரை, வாய்வழியாக உட்கொள்ளும் திரவம், வாய்வழியாக உட்கொள்ளும் திரவப் பொட்டலங்கள், மலவாய்க்குள்/யோனிக்குள்/சிறுநீர்க்குழலுக்குள் செருகப்படும் கரையக்கூடிய மருந்துக் குளிகை மற்றும் மருந்தூசி

பாராசிட்டமால் வலி நிவாரணிகள் அல்லது painkillers (வலிக்கொல்லிகள்)என அழைக்கப்படும் மருந்துகளின் தொகுதியைச் சேர்ந்தது. இது, லேசான வலி முதற்கொண்டு மிதமான வலி வரை நிவாரணம் அளிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சளிப்பிடித்திருக்கும் போது அல்லது குழந்தைப் பருவ நோய்த்தடுப்பு மருந்து அளிப்புகளுக்குப் பிறகு ஏற்படும் raised temperature (fever) (அதிகரித்த உடல் வெப்பநிலை (காய்ச்சல்)), குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

பாராசிட்டமால் ஒரு பொதுவான வலிக்கொல்லி ஆகும். இதை, பல சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து மாத்திரைகளாக / உறைமாத்திரைகளாக / திரவ மருந்தாக விலைக்கு வாங்க முடியும். சளி மற்றும் ஃப்ளூ காய்ச்சல் நிவாரணிகளுக்கான மருந்துக் கலவையில் உள்ளது போல, 'மருத்துவரின் பரிந்துரைச் சீட்டில்லாமல் கடையில் நேரடியாக வாங்குகிற' பல வலிக்கொல்லி பிராண்டுகளின் மருந்துக் கலவையில் பாராசிட்டமால் உள்ளது. நீங்கள் மருந்துத் தயாரிப்புகளை விலைக்கு வாங்கும் போது, பாராசிட்டமாலைக் கொண்டுள்ள ஒரு மருந்துத் தயாரிப்பைத் தவிர வேறு எந்தவொரு மருந்துத் தயாரிப்பிலும் பாராசிட்டமால் இல்லை என்பதை உறுதிசெய்வதற்கு, அனைத்து லேபிள்களையும் சரிபார்க்க வேண்டியது முக்கியமாகும்.

பெரும்பாலான மக்கள் பாராசிட்டமாலை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது உங்களுக்குச் சரியான சிகிச்சைதானா என்பதை உறுதிசெய்வதற்கு, நீங்கள் அதை எடுத்துக்கொள்ளத் தொடங்குவதற்கு முன்னதாக, ஒரு மருத்துவர் அல்லது மருந்தாளுநரிடம் பேசுங்கள்.

  • நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால். இது ஏனென்றால், நீங்கள் குழந்தையைச் சமீபத்தில் பிரசவிக்க எதிர்பார்த்திருக்கிறீர்கள் அல்லது குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், நீங்கள் ஒரு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • உங்கள் கல்லீரல் செயல்படும் விதத்தில் உங்களுக்கு கடுமையான பிரச்சினை இருந்தால், அல்லது நீங்கள் வழக்கமாக அதிக அளவில் மது அருந்துபவராக இருந்தால்.
  • நீங்கள் ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டு வருகிறீர்கள் எனில்.
  • நீங்கள் ஏதாவது மருந்தை பயன்படுத்தியதன் காரணமாக உங்களுக்கு எப்போதாவது ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால்.
  • நீங்கள் பாராசிட்டமாலை எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக, உங்கள் பேக்கின் உள்ளே இருக்கும் உற்பத்தியாளரின் அச்சிடப்பட்ட தகவல் துண்டுப்பிரசுரத்தை வாசிக்கவும். உற்பத்தியாளரின் துண்டுப்பிரசுரம் பாராசிட்டமாலைப் பற்றிய மேலதிக தகவல்களையும், அதை நீங்கள் எடுத்துக்கொள்வதன் மூலமாக நீங்கள் அனுபவிக்க வாய்ப்புள்ள பக்க விளைவுகளின் முழுமையான பட்டியலையும் உங்களுக்குக் கொடுக்கும்.
  • உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளுநர் உங்களுக்கு அறிவுறுத்தியவாறு அல்லது கன்டெய்னரின் லேபிளில் அறிவுறுத்தியவாறு மிகச்சரியாகப் பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பாராசிட்டமாலின் பரிந்துரைக்கப்படும் மருந்தளவுகள்:
    • 16 வயதான மற்றும் அதற்கு மேல் வயதான பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஒவ்வொரு 4-6 மணி நேரங்களுக்கு ஒருமுறை 500 மி.கி-1 கி. அதிகபட்சமாகத் தினமும் 4 கி. வரையிலும்.
    • 12-15 வயதான குழந்தைகளுக்கு: ஒவ்வொரு 4-6 மணிநேரங்களுக்கு ஒருமுறை 480-750 மி.கி. அதிகபட்சமாகத் தினமும் நான்கு மருந்தளவுகள் வரையிலும்.
    • 10-11 வயதான குழந்தைகளுக்கு: ஒவ்வொரு 4-6 மணிநேரங்களுக்கு ஒருமுறை 480-500 மி.கி. அதிகபட்சமாகத் தினமும் நான்கு மருந்தளவுகள் வரையிலும்.
    • 8-9 வயதான குழந்தைகளுக்கு: ஒவ்வொரு 4-6 மணிநேரங்களுக்கு ஒருமுறை 360-375 மி.கி. அதிகபட்சமாகத் தினமும் நான்கு மருந்தளவுகள் வரையிலும்.
    • 6-7 வயதான குழந்தைகளுக்கு: ஒவ்வொரு 4-6 மணிநேரங்களுக்கு ஒருமுறை 240-250 மி.கி. அதிகபட்சமாகத் தினமும் நான்கு மருந்தளவுகள் வரையிலும்.
    • 4-5 வயதான குழந்தைகளுக்கு: ஒவ்வொரு 4-6 மணிநேரங்களுக்கு ஒருமுறை 240 மி.கி. அதிகபட்சமாகத் தினமும் நான்கு மருந்தளவுகள் வரையிலும்.
    • 2-3 வயதான குழந்தைகளுக்கு: ஒவ்வொரு 4-6 மணிநேரங்களுக்கு ஒருமுறை 180 மி.கி. அதிகபட்சமாகத் தினமும் நான்கு மருந்தளவுகள் வரையிலும்.
    • 6 மாதங்கள் -1 வயதான குழந்தைகளுக்கு: ஒவ்வொரு 4-6 மணிநேரங்களுக்கு ஒருமுறை 120 மி.கி. அதிகபட்சமாகத் தினமும் நான்கு மருந்தளவுகள் வரையிலும்.
    • 3-5 மாதங்கள் வயதான குழந்தைகளுக்கு: ஒவ்வொரு 4-6 மணிநேரங்களுக்கு ஒருமுறை 60 மி.கி. அதிகபட்சமாகத் தினமும் நான்கு மருந்தளவுகள் வரையிலும்.
    • 2 மாதங்கள் வயதான குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து அளித்த பிறகு: 60 மி.கி. தேவைப்பட்டால் ஒவ்வொரு 4-6 மணிநேரங்களுக்குப் பிறகு ஒருமுறை திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.
  • நீங்கள் பாராசிட்டமால் மருந்தளவை தேவைப்பட்டால் ஒவ்வொரு 4-6 மணிநேரங்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு நாளில் நான்கு முறைகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. இரண்டு மருந்தளவுகளுக்கு இடையே குறைந்தபட்சம் நான்கு மணிநேரங்கள் இடைவெளி விட வேண்டும் என்பதையும் எந்தவொரு 24 மணிநேரக் காலக்கட்டத்திலும் பாராசிட்டமாலின் நான்கு மருந்தளவுகளை விட அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
  • நீங்கள் பாராசிட்டமாலை உணவுக்கு முன்பு அல்லது பின்பு எடுத்துக்கொள்ளலாம்.
  • உங்கள் குழந்தைக்கு நீங்கள் பாராசிட்டமாலைக் கொடுப்பதாக இருந்தால், உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற சரியான மருந்தளவை நீங்கள் கொடுக்கிறீர்களா என்பதை உறுதிசெய்வதற்கு எப்போதும் லேபிளைக் கவனமாகச் சரிபாருங்கள்.
  • லேபிளில் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவைவிட அதிகமாக ஒருபோதும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அளவுக்கு அதிகமாகப் பாராசிட்டமாலை எடுத்துக்கொண்டால் உங்கள் கல்லீரல் சேதமடையும். நீங்கள் அல்லது வேறு யாராவது இந்த மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டிருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், நீங்களோ/அவர்களோ நன்றாக இருப்பதாக உணர்ந்தாலும் கூட, உங்கள் உள்ளூர் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவுக்கு உடனடியாகச் செல்லுங்கள். உங்களுடன் கன்டெய்னரையும் எடுத்துச்செல்லுங்கள். அப்போதுதான் மருத்துவரால் நீங்கள் என்ன எடுத்துக்கொண்டீர்கள் என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.
  • நீங்கள் ஒரு மருந்தளவை எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், கவலைப்பட வேண்டாம். நீங்கள் அந்த மருந்தளவை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், உங்களுக்கு ஞாபகம் வந்தவுடன் முடிந்தவரை விரைவாக அதை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒரு தவறவிட்ட ஒரு மருந்தளவை ஈடு செய்வதற்காக இரண்டு மருந்தளவுகளையும் ஒன்றாகச் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டாம்.
  • நீங்கள் பாராசிட்டமாலை எடுத்துக்கொண்ட பிறகும் உங்களுக்கு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை எனில், மேல் அறிவுரையைப் பெறுவதற்காக உங்கள் மருத்துவரிடம் அல்லது மருந்தாளுநரிடம் பேசுங்கள்.
  • ஒரு நேரத்தில், பாராசிட்டமாலைக் கொண்டுள்ள ஒரு மருந்துத் தயாரிப்பை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பாராசிட்டமாலைக் கொண்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துத் தயாரிப்புகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. சளி மற்றும் ஃப்ளூ காய்ச்சல் மருந்துத் தயாரிப்புகள் உள்பட மருத்துவரின் பரிந்துரைச் சீட்டில்லாமல் கடையில் நேரடியாக வாங்குகின்ற ஏராளமான மருந்துத் தயாரிப்புகளில் பாராசிட்டமால் ஒரு சேர்மானப் பொருளாக உள்ளது. உங்கள் மருத்துவரால் உங்களுக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள வலிக்கொல்லிகளிலும் பாராசிட்டமால் அடங்கியிருக்கலாம். வேறு ஏதாவது மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக, அவற்றில் பாராசிட்டமால் அடங்கியுள்ளதா என லேபிளைச் சரிபாருங்கள்.

பரிந்துரைக்கப்பட்டுள்ளவாறு எடுத்துக்கொள்ளப்படும் போது, பாராசிட்டமால் அரிதாகப் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால், நீங்கள் பாராசிட்டமாலை எடுத்துக்கொண்டதன் காரணமாக ஏதாவது அறிகுறிகளை அனுபவிப்பதாகச் சந்தேகப்பட்டால், அது பற்றி உங்கள் மருந்தாளுநர் அல்லது மருத்துவருடன் கலந்தாயுங்கள்.

  • அனைத்து மருந்துகளையும் குழந்தைகளுக்கு எட்டாத மற்றும் அவர்கள் கண்களுக்குப் புலப்படாத இடத்தில் வையுங்கள்.
  • நேரடி வெப்பம் மற்றும் வெளிச்சத்தில் வைக்காமல் குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமியுங்கள்.

காலாவதியான அல்லது தேவையற்ற மருந்துகளை ஒருபோதும் வைத்துக்கொள்ளக் கூடாது. உங்களுக்காக அவற்றை அகற்றும் உங்கள் உள்ளூர் மருந்தகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை அல்லது பல் சார்ந்த சிகிச்சையைப் பெறுவதாக இருந்தால், நீங்கள் என்ன மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று சிகிச்சையை மேற்கொள்ளும் நபரிடம் கூறுங்கள்.

உங்களுக்கு இந்த மருந்தைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருந்தாளரிடம் கேளுங்கள்.

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Further reading and references

newnav-downnewnav-up