ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி Balanitis

Authored by , Reviewed by Dr Laurence Knott | Last edited

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி என்றால் ஆணுறுப்பின் நுனியில் ஏற்படும் அழற்சி (சிவப்பாதல், எரிச்சல் மற்றும் இரணம்) ஆகும். இது, நோய்த்தொற்று (பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்று, மற்ற பாக்டீரியா நோய்த் தொற்றுகள் அல்லது வாய்வெண்புண்), தோல் எரிச்சல் மற்றும் சில குறிப்பிட்ட தோல் நிலைமைகள், உள்படப் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியின் சிகிச்சையானது, அடிப்படை காரணத்தைப் பொறுத்து அமைகிறது.

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி என்பது ஆணுறுப்பின் நுனியில் (ஆணுறுப்பு மொட்டு) ஏற்படும் ஒரு அழற்சி ஆகும். பெரும்பாலும், ஆணுறுப்பு மொட்டில் அழற்சி ஏற்படும் அதே நேரத்தில் முன்தோலிலும் அழற்சி ஏற்படுகிறது. (நீங்கள் ஆணுறுப்பு முனைத்தோலை நீக்காதவர் எனில், முன்தோல் என்பது ஆணுறுப்பு மொட்டை மூடுகின்ற தளர்வான தோலை குறிக்கும்)

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி என்பது பொதுவாக காணப்படுவது மற்றும் இது எந்த வயதிலும் ஏற்படலாம். இது, பொதுவாக 4 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களையும் மற்றும் ஆணுறுப்பு முனைத்தோலை நீக்காத ஆண்களையும் பாதிக்கிறது. ஏறத்தாழ 25 சிறுவர்களுள் ஒருவரும், ஏறத்தாழ 30 ஆண் உறுப்பு முனை தோல் நீக்கப்படாத ஆண்களுள் ஒருவரும், தமது வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியால் பாதிக்கப்படுகின்றனர். இது, ஆணுறுப்பு முனைத்தோல் நீக்கப்பட்டுள்ள ஆண்களிடத்தில் மிகவும் அரிதாக ஏற்படுகிறது.

ஆணுறுப்பின் நுனியில் (ஆணுறுப்பு மொட்டு) சிவப்பாதல், எரிச்சல் மற்றும் இரணம் உள்ளிட்டவை மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும். இது, ஆணுறுப்பு மொட்டு, தோலின் மேற்பரப்பில், ஒரு வரம்புக்கு உட்பட்ட இடத்துக்குள், ஒரு சிறிய சிவப்பு நிறத் திட்டு முதற்கொண்டு ஒட்டுமொத்த ஆணுறுப்பு மொட்டும் சிவப்பாகி, வீங்கி வலிமிகுந்ததாக ஆவது வரை பலதரப்பட்ட வகையில் ஏற்படும். சில நேரங்களில், முன்தோலுக்குக் கீழ் இருந்து ஒரு கெட்டியான பாலாடைக்கட்டி போன்ற கசிவு வரலாம்.

முன்தோலை பின்னோக்கி இழுக்க முடியாமல் போகலாம். சிறுநீர் கழிக்கும் போது உங்களுக்கு வலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம்.

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.

மோசமான சுகாதாரத்தன்மை

ஆணுறுப்புப் பகுதியைச் சுற்றிலும் மோசமான துப்புரவும், அதனுடன் சேர்த்து ஒரு இறுக்கமான முன்தோலும் இருந்தால், ஆணுறுப்பின் முன்தோலுக்குக் கீழ் இருந்து வரும் குறிமெழுகு (smegma) கசிவால் எரிச்சல் ஏற்படும். குறிமெழுகு என்பது ஆணுறுப்பின் முன்தோலுக்குக் கீழ் உள்ள ஆணுறுப்பின் நுனி (ஆணுறுப்பு மொட்டு) சுத்தப்படுத்தப்படாமல் இருந்தால், அதனால் முன்தோலுக்குக் கீழ் உருவாகின்ற ஒரு பாலாடைக்கட்டி போன்ற பொருள் ஆகும். இதுவே, ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி ஏற்பட மிகப் பொதுவான காரணம் ஆகும்.

பாலுறவு மூலம் கடத்தப்படாத - நோய்த்தொற்று

தோலில் சிறிய எண்ணிக்கையில் வாழ்கின்ற பல்வேறு வகையான கிருமிகள் (பாக்டீரியா) அதிவிரைவாக இனப்பெருக்கம் செய்து நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். நோய்த்தொற்றின் ஒரு பொதுவான காரணம் இருதிரிபு காளான் (candida) என அழைக்கப்படும் ஒரு ஈஸ்ட் ஆகும். பெண்களிடத்தில் யோனி வெண்புண் ஏற்படுவதற்கும் இதே இருதிரிபு காளான் காரணமாக உள்ளது. சிறிய எண்ணிக்கையிலான இருதிரிபு காளான் பொதுவாகத் தோலில் வாழ்கிறது மற்றும் இது சில நேரங்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது.

சில வகையான பாக்டீரியாக்களும் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி ஏற்பட ஒரு பொதுவான காரணமாக உள்ளன. இந்த நோய்த்தொற்று எந்தவொரு ஆணுக்கும் அல்லது சிறுவனுக்கும் ஏற்படலாம். எனினும், ஆணுறுப்பு மொட்டு நோய்த்தொற்று, பின்வரும் காரணங்களால் உங்களுக்கு அநேகமாக ஏற்படலாம்:

 • ஒரு ஒவ்வாமை அல்லது எரிச்சலூட்டும் பொருள் காரணமாக ஆணுறுப்பு அழற்சி உங்களுக்கு ஏற்கனவே இருந்தால் (கீழே பாருங்கள்).
 • உங்களுக்கு நீரிழிவு இருந்தால். அதிலும் குறிப்பாக, உங்கள் நீரிழிவு கட்டுக்குள் இல்லாமலும் சிறுநீரில் சர்க்கரையும் இருந்தால். கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு, முன்தோலுக்குப் பின்னால் தங்கியிருக்கும் சர்க்கரையுள்ள சிறுநீர்த் துளிகள், கிருமிகள் எளிதில் அதிவிரைவாக இனப்பெருக்கம் செய்ய உதவுகின்றன.
 • உங்களுக்கு ஆணுறுப்பு முன்தோல் இறுக்கம் இருந்தால். இது, ஆணுறுப்பு மொட்டு மேலாக முன்தோலை பின்னோக்கி இழுக்க (பின்னோக்கி சுருக்க) முடியாத நிலைமை ஆகும். இது, இளம்வயது சிறுவர்களிடத்தில் பொதுவாகக் காணப்படுகிறது. 5 வயதுக்குப் பிறகு, முன்தோலை எளிதாகப் பின்னோக்கி இழுக்க முடியும் என்பதால் அப்போது ஆணுறுப்பு மொட்டை மெல்ல மெல்ல சுத்தப்படுத்தலாம். உங்களுக்கு ஆணுறுப்பு முன்தோல் இறுக்கம் இருந்தால், அதனால் வியர்வை, அழுக்கு மற்றும் சிறுநீர் ஆகியவை முன்தோலுக்குக் கீழ் சேரும் என்கிற காரணத்தால், உங்களுக்கு ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி அநேகமாக உருவாகலாம். இது, நேரடியாக எரிச்சலை ஏற்படுத்தலாம் அல்லது பாக்டீரியா செழித்து வளர்வதற்கு ஊக்குவித்து நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்.

பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்று

சில வகையான பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்றுகள் (STIs), எப்போதாவது ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக, உங்களுக்குச் சிறுநீர் ஒழுக்குக்குழல் அழற்சி (a condition called urethritis) (இந்த நிலை சிறுநீர்ப் புறவழியழற்சி என்று அழைக்கப்படுகிறது) இருந்தால், பாலுறவு மூலம் கடத்தப்படும் ஒரு நோய்த்தொற்று, அநேகமாக ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியை ஏற்படுத்தலாம். பாலுறவு மூலம் கடத்தப்படும் பல்வேறு வகையான நோய்த்தொற்றுகள் சிறுநீர் ஒழுக்குக்குழல் அழற்சியையும், ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியையும் ஏற்படுத்தலாம் - உதாரணத்திற்கு, பிறப்புறுப்பு படர்தாமரை (genital herpes), கிளமீடியா நோய் (chlamydia), மற்றும் மேகவெட்டை நோய் (gonorrhoea). சிறுநீர் ஒழுக்குக்குழல் அழற்சியின் அறிகுறிகள் பின்வருவனற்றை உள்ளடக்கியது:

 • நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி.
 • சிறுநீர் ஒழுக்குக்குழலில் இருந்து வருகிற ஒரு கசிவு.

ஒவ்வாமை மற்றும் எரிச்சலூட்டும் பொருட்கள்

ஆணுறுப்பு மொட்டின் தோல் கூருணர்ச்சிமிக்கது. இந்தத் தோலின் மீது வேதிப்பொருட்கள் அல்லது வேறு பொருட்கள் பட்டால், அப்போது இந்தத் தோல் 'வினைபுரிந்து' அழற்சி உண்டாகும். உதாரணத்திற்கு:

 • உங்கள் முன்தோலுக்குக் கீழ், நீங்கள் கழுவாமல் இருந்தால், அங்குப் பழைய சிறுநீர், வியர்வை மற்றும் இதர அழுக்குகள் சேர்ந்துவிடும். இது, ஆணுறுப்பு மொட்டுக்கு எரிச்சல் ஏற்படுத்தி அழற்சிக்கு வழிவகுக்கும்.
 • நீங்கள் ஆணுறுப்பைச் சுத்தப்படுத்துவதற்குச், சில குறிப்பிட்ட சோப்புகளையும் கிருமிநாசினிகளையும் பயன்படுத்தலாம்.
 • அளவுக்கு அதிகமாகக் கழுவினால் அல்லது தேய்த்தால் ஆணுறுப்பு மொட்டின் மென்மையான தோலில் எரிச்சல் ஏற்படும்.
 • பாலுறவு கொள்ளும் போது பயன்படுத்தப்படும் கருத்தடுப்பு உறைகள், விந்தணுக்கொல்லிகள், லூப்ரிகன்ட்கள் மற்றும் கருத்தடுப்பு உறைகளில் உள்ள லூப்ரிகன்ட்கள் ஆகியவையும் கூட ஆணுறுப்பு மொட்டில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
 • உங்கள் கைகளில் சிந்திய வேதிப்பொருட்களும் கூட, நீங்கள் கழிப்பறைக்குப் போகும் போது, உங்கள் ஆணுறுப்புக்குள் இடமாற்றப்படலாம்.
 • உள்ளாடைகள் நல்ல முறையில் துவைக்கப்படவில்லை எனில், சில சலவைத்தூள்கள் அல்லது ஃபேப்ரிக் கண்டிஷனர்களும் கூட உங்கள் ஆணுறுப்புக்குள் இடமாற்றப்படலாம்.

தோல் நிலைமைகள்

சில குறிப்பிட்ட தோல் நிலைமைகள் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியை ஏற்படுத்தலாம் அல்லது ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி எனத் தவறாகப் புரிந்துக்கொள்ளப்படலாம் - உதாரணத்திற்கு, psoriasis (சொரியாசிஸ்) மற்றும் சில அரிதான தோல் நிலைமைகள் ஆணுறுப்பைப் பாதிக்கலாம். எப்போதாவது அரிதாக, ஆணுறுப்பின் நுனியில் அழற்சி வடிவில் தோல் புற்றுநோயின் ஆரம்ப வகை இருக்கலாம். இத்தகைய அறிகுறிகளை நீங்கள் ஒரு மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

ஆணுறுப்பின் நுனியின் (ஆணுறுப்பு மொட்டு) சிவப்பு நிறம் மற்றும் அழற்சியுற்றத் தோற்றத்தின் மூலம் ஒரு மருத்துவரால் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியை எளிதில் கண்டறிய முடியும். சில நேர்வுகளில், அழற்சியின் தோற்றதை வைத்து ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியின் அநேகமான காரணத்தைத் தீர்மானிக்க முடியும். உதாரணத்திற்கு, இருதிரிபு காளானால் ஏற்படும் அழற்சி பெரும்பாலும் மிகவும் வழக்கமானதாகத் தோற்றமளிக்கும். எனவே, சில குறிப்பிட்ட நேர்வுகளில் உங்கள் மருத்துவரால் காரணத்தைக் கண்டறிய முடியும் மற்றும் உடனடியாகச் சிகிச்சையை அறிவுறுத்த முடியும்.

உங்கள் மருத்துவரால் காரணத்தைப் பற்றி உறுதியாகக் கூற இயலவில்லை எனில், அல்லது அவரால் அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி அழிந்தொழியவில்லை எனில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பின்வரும் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்:

 • ஒரு மெல்லிய குச்சியின் நுனியில் உள்ள சிறிய பருத்திப் பந்தில் (ஒரு மருந்திட்ட பஞ்சுறை) ஒரு மாதிரிக்கூறை எடுத்தல். இந்த மாதிரிக்கூறு, நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய சில குறிப்பிட்ட கிருமிகள் (பாக்டீரியா) உள்ளனவா எனக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
 • நீரிழிவு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதை உறுதிசெய்வதற்கான பரிசோதனை.
 • பாலுறவு மூலம் கடத்தப்படும் ஒரு நோய்த்தொற்று ஒரு சந்தேகத்திற்கிடமான காரணமாக இருந்தால், இனப்பெருக்க மற்றும் சிறுநீரக மண்டலம் சார்ந்த மருந்தளிக்கும் (GUM) மருத்துவமனைக்குப் பரிந்துரை.
 • தோலின் நிலைமை அல்லது ஒவ்வாமை தான், நோயிற்கான காரணமாக இருக்க முடியும் என யூகிக்கப்பட்டால், தோல் நோய்நிபுணருக்கு பரிந்துரைக்கப்படலாம். ஒவ்வாமை இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதை உறுதிசெய்வதற்காக ஒவ்வாமைப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படலாம்.
 • அரிதான நேர்வில், அழற்சி தொடர்ந்து நீடித்தால், removing a small sample of the inflamed skin tissue (a biopsy) (அழற்சி இருக்கும் தோல் திசுவின் பகுதியினை, மாதிரிக்கு சிறிதளவு நீக்குதல் / எடுத்தல் (பயாப்ஸி)) பரிந்துரைக்கப்படலாம். இதில், மாதிரிக்கூறு எடுக்கப்பட்டு நுண்ணோக்கியில் கீழ் நுண்ணாய்வு செய்யப்படும். இதன் மூலம், காரணம் கண்டறியப்படும்.

காரணம் எதுவாக இருந்தாலும், உங்களுக்கு ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி இருந்தால், பின்வருவன பரிந்துரைக்கப்படுகின்றன:

 • அழற்சி இருக்கும் போது சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் சோப்புக்குப் பதிலாக ஒரு ஈரப்பதமூட்டும் கிரீமை அல்லது ஆயின்ட்மென்ட்டை (ஒரு இளக்கு மருந்து) பயன்படுத்தலாம்.
 • உங்கள் ஆணுறுப்பைச் சுத்தப்படுத்துவதற்கு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள். அதன் பிறகு, ஆணுறுப்பை மெல்ல மெல்ல உலரவிடுங்கள்.
 • சிகிச்சை எடுக்கப்பட்டு வரும் காலத்தில், உப்புநீரால் கழுவுதல் ஆறுதலளிப்பதாகச் சிலர் கூறுகின்றனர்.

சிகிச்சையானது ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியின் காரணத்தைப் பொறுத்து அமையும். பின்வரும் சிகிச்சைகள் பொதுவாகக் கொடுக்கப்படுகின்றன:

 • இருதிரிபு காளானால் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி ஏற்பட்டால், அதற்கு வழங்கப்படும் சிகிச்சைகளுள் anti-yeast cream or a course of anti-yeast tablets (ஆண்டி- ஈஸ்ட் கிரீம் அல்லது ஒரு கோர்ஸ் அளவு கொண்ட ஆண்டி - ஈஸ்ட் மாத்திரைகள்) என்பது ஒரு பொதுவான சிகிச்சை ஆகும்.
 • Antibiotics (ஆண்டிபயாடிக்ஸ்), பாலுறவு மூலம் கடத்தப்படும் சில குறிப்பிட்ட நோய்த்தொற்றுகள் உள்படக் கிருமிகளால் (பாக்டீரியா) ஏற்படும் நோய்த்தொற்றை அழித்தொழிக்கும்.
 • அழற்சியைக் குறைப்பதற்கான ஒரு மிதமான steroid cream (ஸ்டீராய்டு கிரீம்)ஆனது, ஒவ்வாமைகளால் அல்லது எரிச்சலூட்டும் பொருட்களால் ஏற்படும் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சிக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. சில நேரங்களில், நோய்த்தொற்றால் ஏற்படும் அழற்சியைக் குறைப்பதற்கு ஈஸ்ட் எதிர்ப்பு மருந்துடன் அல்லது ஆன்ட்டிபயாட்டிக் மருந்துடன் சேர்த்துக் கூடுதலாக ஒரு ஸ்டீராய்டு கிரீம் பயன்படுத்தப்படுகிறது. (குறிப்பு: ஆணுறுப்பின் நுனியில் (ஆணுறுப்பு மொட்டு) ஏதாவது நோய்த்தொற்று இருந்தால், அப்போது ஸ்டீராய்டு கிரீம் மட்டுமே பயன்படுத்தப்படக் கூடாது, ஏனெனில் ஸ்டீராய்டுகள் நோய்த்தொற்றை மிகவும் மோசமாக்கலாம்.)

உங்களுக்கு ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி திரும்பத்திரும்ப ஏற்பட்டால் மற்றும் ஆணுறுப்பு மொட்டு மேலாக முன்தோலை பின்னோக்கி இழுக்க (பின்னோக்கி சுருக்க) முடியாத நிலைமை (ஆணுறுப்பு முன்தோல் இறுக்கம்) இருந்தால், circumcised to remove the foreskin (ஆண்குறியின் முன்புற தோலை அகற்றுதல்) என்பது ஒரு விருப்பத்தேர்வாக உள்ளது. இவ்வாறு உள்ள சூழலில், உங்கள் மருத்துவர் இது பற்றி மேலும் விளக்கமாகக் கலந்தாலோசிப்பதற்கு இத்துறையில் ஒரு நிபுணருக்கு உங்களைப் பரிந்துரைப்பார்.

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியின் சில நேர்வுகளைத் தடுப்பதற்குக் கீழே உள்ள சில உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்:

 • ஆணுறுப்பின் நுனியை (ஆணுறுப்பு மொட்டு) தினமும் கழுவ வேண்டும். குளியல் தொட்டியில் அல்லது குளியல் அறையில் இருக்கும் போது, ஆணுறுப்பின் முன்தோலை மெல்ல மெல்ல பின்னோக்கி இழுங்கள். அதன் பிறகு, வெறும் நீரால் அல்லது சோப்பு மற்றும் நீரால் ஆணுறுப்பு மொட்டை மெல்ல மெல்ல சுத்தப்படுத்துங்கள். உங்கள் உள்ளாடைகளை அணிவதற்கு முன்னதாக ஆணுறுப்பு மொட்டு உள்பட ஆணுறுப்பு உலர்வாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
 • கருத்தடுப்பு உறையுடன் தொடர்புடைய அறிகுறிகளாக இருந்தால், எளிதில் பாதிக்கப்படக்கூடிய மென்மையான தோலுக்கு எனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்தடுப்பு உறையை பயன்படுத்த முயற்சியுங்கள்.
 • மென்மையான தோலுக்கு எரிச்சல் அளிக்கக்கூடிய வேதிப்பொருட்களுடன் நீங்கள் பணியாற்றினால், கழிப்பறைக்குச் செல்வதற்கு முன்னதாக உங்கள் கைகளைக் கழுவுங்கள்.
 • ஒரு புதிய பாலுறவுத் துணைவருடன் நீங்கள் பாலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஒரு கருத்தடுப்பு உறையைப் பயன்படுத்துங்கள்.

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Further reading and references

newnav-downnewnav-up