சிறுநீரில் இரத்தம் Blood in Urine
சிறுநீரில் இரத்தம் என்றால் என்ன?
உங்களுடைய சிறுநீரில் இரத்தம் கலந்து வரும்போது, பொதுவாக அந்த சிறுநீரானது சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இது நம்மை பயமுறுத்துவதாக இருந்தாலும், அந்த அளவிற்கு இது ஒன்றும் மோசமான நிலை கிடையாது. இருந்தாலும், உங்களுடைய சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், உங்களுடைய மருத்துவரை கட்டாயம் நேரில் சென்று பார்க்க வேண்டும். சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றை பற்றி நாம் கீழே விவாதிக்கலாம்.
இதற்கு மாறாக, சில மக்களுக்கு, தங்களுடைய சிறுநீரில் லேசாக இரத்தம் கலந்து வரலாம். இது கண்ணுக்கு தெரியாது, ஆனால் அவர்களுடைய சிறுநீரை டிப்ஸ்டிக் சோதனை மூலமாக, மாதிரியாக வைக்கும்போது தான் இரத்தம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்படும்.
சிறுநீர் மற்றும் சிறுநீர்ப்பையினை பற்றி புரிந்துகொள்ளுதல்
சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பைக்கு கீழே இருக்கும் (உங்களுடைய சிறுநீர் குழாய்க்கு) சிறுநீர் குழாய்கள் மூலமாக தொடர்ச்சியாக சிறுநீரை வெளியேற்றுவதே, சிறுநீரின் தந்திரம் ஆகும். நீங்கள் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவின் அளவு, வியர்வை ஆகியவற்றை பொறுத்து உங்களுக்கு வரும் சிறுநீரின் அளவு மாறுபடும்.

உங்களுடைய சிறுநீர் பையானது தசையினால் ஆனது மற்றும் இது சிறுநீரினை சேமித்து வைக்கிறது. இது பலூனை போல விரிவடைந்து சிறுநீரை நிரப்புகிறது. சிறுநீரை வெளியேற்றும் பகுதியானது (உங்களுடைய சிறுநீர் குழாய்) பொதுவாக மூடியிருக்கும். இவ்வாறு இருக்க, உங்களுடைய சிறுநீர்ப்பைக்கு கீழே சுற்றி இருக்கும் தசைகள், உதவி புரிகின்றன மற்றும் உங்களுடைய சிறுநீர் குழாயினையும் இத்தசைகள் (இடுப்பு பகுதியின் தசைகள்) பாதுகாக்கின்றன.
உங்களுடைய சிறுநீர்ப்பையில், சிறுநீரானது குறிப்பிட்ட அளவிற்கு வந்தவுடன், உங்களுடைய சிறுநீர்ப்பை நிரம்பி விட்டதாக உணர்வீர்கள். நீங்கள் கழிப்பறைக்கு சென்று சிறுநீரை வெளியேற்றும் போது, உங்களுடைய சிறுநீர்ப்பை தசையானது (உடன்பாடடைந்து) பிழியப்படுகிறது. உங்களுடைய சிறுநீர் குழாய் மற்றும் இடுப்பு பகுதி தசைகளானது தளர்வாகி, சிறுநீரை வெளியேற்றுவதற்கு அனுமதிக்கிறது.
சிறுநீரில் இரத்தம் (ஹெமடூரியா- haematuria) என்றால் என்ன?
சிறுநீரில் இரத்தம் என்பது, ஹெமடூரியா என்ற மருத்துவ சொல்லினால் அழைக்கப்படுகிறது. உங்களுடைய சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது இது நிகழ்கிறது. சிறுநீரில் இரத்தம் கலந்து வரும்போது, சிலருக்கு வேறு சில அறிகுறிகள் காணப்படும், வேறு சிலருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது, அவர்கள் முற்றிலும் தாங்கள் நன்றாக இருப்பதாக உணர்வார்கள்.
சிறுநீரில் இரத்தம் இருப்பதற்கான காரணங்கள் என்ன?
இதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. இரத்தமானது, உங்களுடைய சிறுநீரகத்தில் இருந்து வரலாம் அல்லது உங்களுடைய சிறுநீர் பாதையின் எந்த பகுதியில் இருந்தும் வரலாம் – உதாரணம், உங்களுடைய சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய் அல்லது சிறுநீர்ப்பை குழாய்.
சில நேரங்களில் இரத்தமானது எங்கிருந்து வருகிறது என்பதை, பெண்களால் சரியாக தெரிந்து கொள்வது மிகவும் கடினம். இந்த இரத்தமானது பெண்களின் மாதவிடாய் சுழற்சியினால் வரலாம் அல்லது பெண் உறுப்புகளில் இருந்து சிறுநீரில் இரத்தம் கலந்து வரலாம். இன்னும் வேறு ஏதேனும் காரணமும் இருக்கலாம்.
சிறுநீர்பாதை நோய்த்தொற்று
உங்களுடைய சிறுநீரில் இரத்தம் கலந்து இருக்கும்போது, சிறுநீர் தொற்று ஏற்படுவது என்பது மிகவும் பொதுவானது, குறிப்பாக பெண்களுக்கு. இந்த சிறுநீர் தொற்றானது உங்களுடைய சிறுநீர் பையில் வீக்கத்தினை (சிறுநீர்ப்பை அழற்சி) ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது மற்றும் வழக்கமாக சிறுநீர் கழிப்பதை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்றவைதான் இதன் பொதுவான அறிகுறிகளாகும். இதனால் உங்களுடைய அடி வயிற்றில் வலி இருக்கலாம் மற்றும் அதிக வெப்ப நிலையும் (காய்ச்சல்) இருக்கும். உங்களுடைய சிறுநீர்ப்பையில் ஏற்படும் வீக்கத்தினால், உங்களுடைய சிறுநீரில் இரத்தம் உண்டாகும்.
சிறுநீர்ப்பாதை தொற்றுகளுக்கு, பொதுவாக திறமையான முறையில், சிறிதளவிலான ஆண்டிபயாடிக்ஸ் டோஸ்கள் (மருந்தினை எடுத்துக்கொள்ளுதல்) மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்வருவன உங்களுக்கு இருந்தால், மேலும் சோதனைகள் தேவைப்படலாம்:
- நோய்த்தொற்றுகள் அடிக்கடி ஏற்படுதல் – see separate leaflet called Recurrent Cystitis in Women (பெண்களுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீர்ப்பை அழற்சி (ரெக்கரண்ட் சிஸ்டிக்ஸ் இன் வுமன்) என்று அழைக்கப்படும் தனி துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்.).
- பிற அடிப்படை நிலைமைகள் – உதாரணமாக, கடந்த காலத்தில் சிறுநீரக பிரச்சினை ஏதேனும் இருந்தால்.
Cystitis (Urine Infection) in Women (பெண்களுக்கு ஏற்படும் சிறு நீர்ப்பை அழற்சி (சிறுநீரக நோய்த்தொற்று)), Urinary Infection in Men (ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீரக நோய்த்தொற்று), Urine Infection in Older People (வயதானவர்களுக்கு ஏற்படும் சிறுநீரக நோய்த்தொற்று), Urine Infection in Pregnancy (கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரக நோய்த்தொற்று) மற்றும் Urine Infection in Children (குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக நோய்த்தொற்று) பற்றிய தகவல்களை அறிவதற்கு, தனித்தனியாக இருக்கும் துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்.
சிறுநீரக நோய்த்தொற்று
சிறுநீரக நோய்த்தொற்றுகளானது (பைலோனெப்ரிடிஸ்), பொதுவாக சிறுநீர்ப்பை நோய்தொற்றின் விளைவாக ஏற்படுகிறது. சிறுநீரக நோய்த்தொற்றுகளின் அறிகுறிகள் பொதுவாக, சிறுநீர்ப்பாதையின் நோய்தொற்றுகளின் அறிகுறிகளை விட கடுமையானதாக இருக்கும். அடிக்கடி அதிக வெப்ப நிலை (காய்ச்சல்) ஏற்படுவது மற்றும் உங்களுடைய வயிற்றுப்பகுதியில் (அடிவயிறு) வலி ஏற்படுவது அல்லது பின்பகுதி முழுவதும் வலி ஏற்படுவது.
சிறுநீரக நோய்த்தொற்றிற்கு, நீண்ட காலத்திற்கு, அதிக அளவிலான ஆண்டிபயாடிக் டோஸ்கள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய்த்தொற்றானது மிகவும் அதிகமாக இருந்தால், பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் வைத்து, அவரின் நரம்புகள் வழியாக ஆண்டிபயாடிக்குகளை செலுத்த வேண்டும். இந்த நோய்தொற்றினை பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு, Kidney Infection (Pyelonephritis) (சிறுநீரக நோய்த்தொற்று (பைலோனெப்ரிடிஸ்) தனி துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்).
சிறுநீர்ப்புற வழி அழற்சி
உங்களுடைய உடலில் இருந்து, சிறுநீரை வெளியேற்றுகின்ற போது, சிறுநீர்க்குழாயில் (உங்களுடைய சிறுநீர்ப்பைகுழாயில்) ஏற்படும் வீக்கமே, சிறுநீர் புற வழி அழற்சியாகும். சிறுநீர் புற வழி அழற்சியானது, sexually transmitted infection (உடலுறவு பரிமாற்றத்தின் போது ஏற்படும் நோய்தோற்றாகும்). இதற்கு ஆண்டிபயாடிக்குகள் மூலம் எளிதாக சிகிச்சையளிக்கலாம்.
சிறுநீரக கற்கள்
கல்லானது, சிறுநீர் பாதை வழியாக செல்லும் போது, சிறுநீர் குழாயின் உள்ளே உராய்ந்து செல்வதால், உங்களுடைய சிறுநீர் பாதையில் இரத்தம் ஏற்படுகிறது. இது பொதுவாக உங்களுடைய பின்புறத்தில் வலியினை ஏற்படுத்தும் மற்றும் உங்களுடைய வயிறு முழுவதும், வயிறு மற்றும் தொடை இணையுமிடத்திலும் இந்த வலியானது ஏற்படுகிறது. சிறுநீரக கற்களை கொண்ட, சில மனிதர்களுக்கு அவர்களுடைய சிறுநீரில் இரத்தம் வரும் அறிகுறி மட்டுமே இருக்கும், இந்த வகை மனிதர்களுக்கு டிப்ஸ்டிக் சோதனையின் மூலம் மட்டுமே சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை கண்டுபிடிக்க முடியும்.
இருந்தாலும், பெரும்பாலான சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை எதுவும் தேவை இல்லை, அவை தானாகவே வெளியில் வந்து விடும், சில மக்களுக்கு, சிறுநீரக கற்களை அகற்ற குறிப்பிட்ட சிகிச்சை தேவைப்படும். மேலும் பல தகவலுக்கு, See separate leaflet called Kidney Stones (சிறுநீரக கற்களுக்கு என்று தனியாக இருக்கும் துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்).
சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தில் இருக்கும் கட்டிகள்
Bladder cancer (சிறுநீர்ப்பை புற்று நோய்) அல்லது kidney cancer (சிறுநீரக புற்றுநோய்க்கான)cஆரம்ப அறிகுறிகள் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதுதான், பொதுவாக இதற்கு வேறு எந்த அறிகுறிகளும் கிடையாது. இருப்பினும், சிறுநீரில் இரத்தத்தினை கொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு புற்றுநோய் எதுவும் இல்லை.
சிறுநீரகம் மற்றும் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நோயினை கண்டறியும் முறையானது, முன்னரே கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த மாதிரியான குறிப்பிட்ட சில மனிதர்களுக்கு, அவர்களுடைய சிறுநீரில் இரத்தம் இருந்தால், அவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்று நோய் இருப்பதை தெரிந்து கொள்வதற்கு, சோதனை செய்து பார்ப்பது மிகவும் முக்கியம். உதாரணமாக, 45 வயதிற்கு மேற்பட்டு இருக்கும் நபருக்கு சிறுநீரில் இரத்தத்தை உண்டாகக்கூடிய, எந்தவிதமான நோய்த்தொற்றுகளும் இல்லாமல் இருந்தால், அவரை சோதனை செய்து கொள்வதற்கு பரிந்துரைக்க வேண்டும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது சிறிய மெல்லிய டெலஸ்கோப்பினை, உங்களுடைய சிறுநீர்ப்பையினுள் நுழைத்து செய்யும் செயல்முறை (சிஸ்டோஸ்கோபி - cystoscopy) போன்ற செயல்முறைகள் இந்த சோதனைகளில் அடங்கும்.
சிறுநீரகத்தில் இருக்கும் வீக்கம்
உங்கள் சிறுநீரகங்களில் வீக்கம் ஏற்படுவதற்கு பல்வேறு நிலைமைகள் காரணமாக உள்ளன. இதன் விளைவாக உங்களுடைய சிறுநீரில் இரத்தம் கலந்து வரலாம், இதை பொதுவாக உங்களுடைய சிறுநீரினை கொண்டு, டிப்ஸ்டிக் சோதனையின் மூலமாக கண்டுபிடிக்கலாம். சிறுநீரகங்களில் ஏற்படும் வீக்கம் குளோமெரூலோனெஃபிரிட்டிஸ் (glomerulonephritis) என்று அழைக்கப்படுகிறது. மற்ற அறிகுறிகளான சோர்வு, கண்கள் மற்றும் கால்களை சுற்றி ஏற்படும் வீக்கம் போன்றவையும் கூட ஏற்படும்.
இந்த வீக்கமானதுபொதுவாக உங்களுடைய உடலின் நோயெதிர்ப்பு அமைப்பின் மூலமாக ஏற்படும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் குளோமெரூலோனெஃபிரிட்டிஸ் (glomerulonephritis) ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இவை சில சமயங்களில் நோய்த்தொற்றினாலும் கூடதூண்டப்படலாம். குளோமெரூலோனெஃபிரிட்டிஸ் (glomerulonephritis) என்பது குழந்தைகள் மற்றும் இள வயதினரின் சிறு நீரில் இரத்தம் கலந்து வரும் ஒரு பொதுவான செயலாகும். இருப்பினும், இது மக்களுக்கு எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இதன் தகவல்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள See separate leaflet called Glomerulonephritis (குளோமெரூலோனெஃபிரிட்டிஸ் என்று அழைக்கப்படும் தனி துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்).
இரத்தப்போக்கினால் ஏற்படும் சீர்குலைவு
உங்களுடைய உடலில், இரத்தம் உறைவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் சில நிலைகள் உள்ளன. இதற்கான உதாரணம் ஹீமோபிலியா (haemophilia). இது அசாதாரணமானது, ஆனால் உங்களுடைய சிறுநீரில் இரத்தத்தினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. நீங்கள் இரத்ததின் அடர்த்தியினை குறைப்பதற்கான மாத்திரையினை எடுத்துக்கொள்ளும்போது (உதாரணமாக, warfarin (வார்ஃபரின்)), உங்களுடைய சிறுநீரில் இரத்தம் ஏற்பட்டால், முக்கியமாக உங்களுடைய இரத்தத்தை உடனடியாக சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் வார்ஃபரின் டோஸேஜின் அளவானது, ஒருவேளை அதிகமாக இருக்கக்கூடும்.
உங்களுடைய சிறுநீரில் இரத்தத்தினை ஏற்படுத்துவதற்கு சில அசாதாரண நிலைகளும் உள்ளன. இதில் sickle cell disease (சிக்கிள் செல் டிஸீஸ்) (வளைந்த உயிரணு நோய்கள்), உங்களுடைய சிறுநீர்ப்பாதை காயங்கள் மற்றும் polycystic kidney disease (பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்) போன்றவை அடங்கி உள்ளன.
குறிப்பு: சிலர் தங்களுடைய சிறுநீரானது சிவப்பு நிறமாக மாறி இருப்பதை பார்ப்பார்கள், ஆனால் உண்மையில் அந்த சிறுநீரில் இரத்தமானது கலக்கவில்லை. அவர்கள் பீட்ரூட் சாப்பிட்டதாலோ அல்லது வேறு சில மருந்துகளை உட்கொண்ட காரணத்தினாலோ, அவர்களுடைய சிறுநீரானது சிவப்பு நிறத்தில் வரலாம், உதாரணமாக ஆண்டிபயாடிக் rifampicin (ரிஃபேம்பிசின்).
எந்த மாதிரியான ஆய்வுகள் பரிந்துரைக்கப்படலாம்?
உங்களுக்கு வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலோ, உங்களுடைய வயதில் வேறு ஏதேனும் நோய்கள் அல்லது வேறு ஏதேனும் நிலைகள் இருந்தாலோ, ஒருவேளை நீங்கள் இந்த ஆலோசனைகளுக்கு பலவிதமான, வெவ்வேறு காரணிகளை சார்ந்திருக்க வேண்டி இருக்கலாம்.
உங்களுக்கு இருக்கும் நோய்தொற்றினை சோதனை செய்து பார்ப்பதற்காக, நீங்கள் உங்களுடைய சிறுநீரின் மாதிரியினை உள்ளூரில் இருக்கும் ஆய்வகத்திற்கு சோதனை செய்வதற்கு கொடுக்க வேண்டி இருக்கலாம். மேலும் சில இரத்தப்பரிசோதனைகள் மற்றும் எக்ஸ்-ரேக்கள் அல்லது ஸ்கேன்கள் கூட உங்களுக்கு செய்யப்படலாம்.
உங்களுடைய சிறுநீர்ப்பையினை மதிப்பீடு செய்வதற்காக சிஸ்டோஸ்கோப்பியானது (cystoscopy) செய்யப்படலாம். இந்த சிஸ்டோஸ்கோப்பினை செய்வதற்கு மருத்துவர் அல்லது செவிலியர், சிஸ்டோஸ்கோப் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பான, மெல்லிய டெலஸ்கோப்பினை கொண்டு உங்களுடைய சிறுநீர்ப்பையினை பார்ப்பார்கள். உங்களுடைய சிறுநீர் (சிறுநீர் குழாய்) பாதையின் வழியாக இந்த சிஸ்டோஸ்கோப் ஆனது சிறுநீர்ப்பைக்குள் செலுத்தப்படுகிறது. இந்த சிறுநீர்ப்பை ஆய்வின் போது மயக்க மருந்து (anaesthetic) பொதுவாக கொடுக்கப்படுகிறது.
பல்வேறு விதமான சோதனைகளை பற்றிய விபரங்களை முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு, மேலே குறிப்பிட்டு இருக்கும் தனித்தனி நிபந்தனை துண்டு பிரசுரங்களில் பார்க்கவும்.
இதற்கு எந்த மாதிரியான சிகிச்சை முறைகள் அவசியம்?
சிகிச்சையானது உங்களுடைய சிறுநீரில் இரத்தம் ஏற்படுவதற்கான அடிப்படை காரணத்தைப் பொறுத்தது. உங்களுடைய சிறுநீரில் இரத்தத்தை உண்டாக்குகின்ற பல்வேறு நிலைமைகள் பற்றிய தகவல்களை எல்லாம் தனித்தனியாக இருக்கும் துண்டு பிரசுரங்களில் பார்க்கலாம்.
இதற்கான எந்தவொரு காரணத்தினையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், இதற்கு தேவையான அனைத்து சோதனைகளையும் மேற்கொள்ளவதோடு, இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான அறிக்கைகளை பற்றி நீங்கள் உங்களுடைய ஜிபி (ஜெனரல் பிராக்டீசனர் - மருத்துவர்)யிடம் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய கடந்த காலத்தில், ஏதாவதொரு சாதாரண சோதனைகளை செய்து இருந்தாலும், அதற்கு பிறகு, உங்களுடைய சிறுநீரில் ஏதேனும் இரத்தத்தினை பார்க்க நேர்ந்தால் அதை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.
பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.