மலக்குடல் இரத்தப்போக்கு - மலத்தில் இரத்தம் Blood in Faeces

Last updated by Peer reviewed by Dr John Cox
Last updated

Added to Saved items

மலக்குடலில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. இதன் தீவிரமானது லேசான இரத்தப்போக்கிலிருந்து (பொதுவானது), வாழ்வாதாரத்தினை அச்சுறுத்தக்கூடிய கடுமையான இரத்தப்போக்கு (வழக்கத்திற்கு மாறானது / அசாதாரமானது) வரைக்கும் வேறுபடலாம். இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது உங்களுடைய மலம் கருப்பாக இருந்தால் – குடலில் உயர் அழுத்தத்தினால் ஏற்படும் இரத்தக்கசிவினால் பழைய இரத்தம் ஏற்பட்டால் - தொடர்ச்சியாக லேசான இரத்தப்போக்கு இருந்தாலும் கூட உடனடியாக மருத்துவரை சென்று பார்க்கவும் அல்லது ஆம்புலன்ஸை கூப்பிடவும். இந்த மாதிரியான சூழ்நிலையில், உங்களுடைய மருத்துவரை சந்திக்க அனுமதி பெறுவதன் மூலமாக, இதற்கான காரணத்தினை என்னவென்று கண்டுபிடிக்கலாம்.

மலக்குடல் இரத்தப்போக்கு என்ற வார்த்தையானது மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் வார்த்தை, நீங்கள் கழிப்பறைக்கு சென்று மலம் கழிக்கும் போது மலத்துடன் (கழிவுகள்) சேர்ந்து இரத்தம் வருவது மலக்குடல் இரத்தப்போக்கு எனப்படுகிறது. இருப்பினும், எல்லா இரத்தப்போக்கும் பின் பக்கமாக மட்டும் வருவதில்லை (மலக்குடல் வழியாக). குடலில் இருந்து எந்த பகுதியின் வழியாக வேண்டுமானாலும் இரத்தம் வரலாம். இதை இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இரைப்பை-குடல்வழி இரத்தப்போக்கு என்றும் சொல்லலாம், இது சுருக்கமாக ஜிஐ (GI) இரத்தப்போக்கு என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. மலக்குடல் இரத்தப்போக்கிற்கு (ஜிஐ (GI) இரத்தப்போக்கு) பலவிதமான காரணங்கள் உள்ளன, அதைப்பற்றி பின்வரும் பகுதிகளில் விவாதிக்கலாம்.

குடலானது (இரைப்பை-குடல்வழி பாதை) வாய்ப்பகுதியில் ஆரம்பித்து, ஆசனவாயில் முடிவடைகிறது. நாம் சாப்பிடும் போதும் அல்லது குடிக்கும் போதும், உணவு மற்றும் திரவமானது, உணவுக்குழல் (உணவுக்குழாய்) வழியாக வயிற்றுக்கு செல்கிறது. வயிறானது உட்கொண்ட உணவுப்பொருட்களை உடைத்து, அவற்றை சிறுகுடலுக்குள் அனுப்புகிறது.

The Gut - simple
Large bowel

சிறுகுடல் பல மீட்டர் நீள முள்ளது. இங்கு தான் உணவு செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் நடைபெறுகிறது. செரிக்கப்படாத உணவு, நீர் மற்றும் கழிவுப் பொருட்கள் பெருங்குடலுக்கு பிறகு அனுப்பப்படுகின்றன. குடலின் முக்கியமான பகுதிகளில் ஒன்று பெருங்குடல் என்று அழைக்கப்படுகிறது, இதுசுமார் 150 செ.மீ நீளம் கொண்டது. இது நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை ஏறுகுடல், கிடைக்குடல், இறங்குகுடல் மற்றும் சிக்மாயுடு பெருங்குடல் ஆகும். நீர் மற்றும் உப்புக்கள் பெருங்குடலில் இருந்து உடலுக்கு உறிஞ்சப்படுகின்றன. பெருங்குடலானது பின் பக்க பகுதி (மலக்குடல்) வரைக்கும் நீண்டு செல்கிறது, இது 15 செ.மீ நீளம் கொண்டது. மலம் மலக்குடலில் சேகரிக்கப்பட்டு பின் ஆசனவாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.

உங்களுக்கு ஜிஐ (GI) இரத்தப்போக்கு இருக்கும்போது, மருத்துவர் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் பின்வருமாறு:

எவ்வளவு மோசமான (தீவிரமான) இரத்தப்போக்கு இது

இரத்தப்போக்கானது லேசான துளியிலிருந்து ஆரம்பித்து, உயிருக்கு ஆபத்தான கடுமையான இரத்தப்போக்கு வரை ஏற்படலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரத்தப்போக்கு மெதுவாகவும் இடைவெளிவிட்டும் இருக்கும். இந்த சூழ்நிலையில், செய்ய வேண்டிய எந்த சோதனையும் ஒரு வெளிநோயாளி பிரிவில் செய்ய வேண்டும். லேசான, இடைவெளி விட்டு வரும் ஜிஐ (GI) இரத்தப்போக்கு உயிருக்கு எந்த ஆபத்தையும் உடனடியாக ஏற்படுத்தாது. எனினும் அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும், அதிகப்படியான இரத்தப்போக்கிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்.

சில நேரங்களில் குடலில் இருந்து (ஜிஐ குடல்வழி) ஏற்படும் மிதமான இரத்தப்போக்கு மலத்தின் (கழிவுகள்) நிறத்தை மாற்றும் அளவிற்கு அதிகமாக இல்லாததால் அதை உங்களால் கண்டுபிடிக்கமுடியாது. எனினும் மலத்தின் மூலமாக செய்யப்படும் சோதனைகளால், உங்களுடைய மலத்தில் சிறிதளவு இரத்தக்கசிவு இருந்தாலும் கூட அதை கண்டுபிடித்துவிடலாம். இந்த சோதனைகள் பலவித சூழ்நிலைகளில் செய்யப்படலாம் (இதை பற்றி பிறகு விரிவாக காணலாம்).

இரத்தப்போக்கு எங்கிருந்து வருகிறது

இரத்தப்போக்கானது ஜிஐ (GI) குடல்வழியிலிருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். இதற்கான பொது விதி:

  • ஆசனவாய் அல்லது மலக்குடலில் ஏற்படும் இரத்தப்போக்கால் வெளியேறும் இரத்தத்தின் நிறம் வெளிர் சிவப்பு மற்றும் புதிதாகவும் இருக்கும். இது மலத்தோடு சேராது, ஆனால் மலம் கழித்த பிறகு இரத்தம் வெளியாவதை நீங்கள் கவனிக்கலாம், அல்லது மலத்தின் மேலே இரத்தமானது உறைந்து இருப்பதை போல காணப்படும். எடுத்துக்காட்டு, anal tear (fissure) (ஆசன வாய் வெடிப்பு (பிளவு)) இருந்து இரத்தம் கசிதல் அல்லது haemorrhoids (மூல நோய்கள்) (இது பற்றி பிறகு விரிவாக காணலாம்).
  • மலக்குடலில்இருந்து இரத்தக்கசிவு- அவ்வப்போது மலத்துடன் இரத்தம்கலந்து காணப்படும். அந்த இரத்தம் அடர்ந்த சிவப்பாக இருக்கும். உதாரணமாக பெருங்குடல் அழற்சியின் மூலமாக ஏற்படும் இரத்தப்போக்கு, டைவர்டிகுலர் நோய் (diverticular disease), அல்லது மலக்குடலில் ஏற்படும் கட்டி. எப்படி இருந்தாலும், சில சமயங்களில், இரத்தப்போக்கு விறுவிறுப்பாக இருந்தால் அது பளிச்சென்று சிவப்பு நிறத்தில் இருப்பதோடு, அது மலத்துடன் அதிக அளவில் கலந்து இருக்காது. உதாரணமாக திடீரென்று அதிகப்படியான இரத்தப்போக்கு டைவர்டிகுலாவினால் (மலக்குடல்வால் வீக்கத்தினால்) ஏற்படும் (இதை பற்றி பிறகு விரிவாக காணலாம்).
  • வயிறு மற்றும் சிறுகுடலில் ஏற்படும் இரத்தப்போக்கு - வயிற்றிலிருந்து இரத்தமானது ஆசனவாய் வழியாக வெளியேறுவதற்கு அதிக தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. இரத்தமானது தன்னுடைய நிறத்தினை அடர்த்தியாக மாற்றுவதற்கும், மலத்துடன் கலப்பதற்கும், இந்த நேரத்தினை எடுத்துக்கொள்கிறது. இதனால் மலம் கறுப்பு அல்லது பிளம் நிறத்தில் தோற்றமளிக்கும் - இது மெலீனா என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக இது வயிற்றில் ஏற்படும் இரத்தப்போக்கு அல்லது சிறுநீரக புண்ணால் ஏற்படலாம். குறிப்பு: உங்களுக்கு மெலீனா ஏற்பட்டால் அப்போது உடனடியாக அவசர சிகிச்சை தேவைப்படும், இது பொதுவாக வயிற்றில் அல்லது சிறுநீரகத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கை குறிப்பிடும். உங்களுக்கு மெலீனா இருப்பது போல சந்தேகம் ஏதேனும் இருந்தால், அதை நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணம்

இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் குறித்து பல்வேறு விதமான கேள்விகளை/ சாத்தியமான அறிகுறிகளைப் பற்றி மருத்துவர் கேட்கலாம். மேலும் பின்வரும் கேள்விகளையும் கேட்கலாம்:

  • உங்களுக்கு வலி ஏதாவது இருக்கிறதா
  • உங்களுக்கு வலி இருந்தால், எங்கே வலிக்கிறது, எந்த மாதிரி வலிக்கிறது.
  • உங்களுடைய கீழ்ப்பகுதியினை சுற்றி ஏதாவது அரிப்பு இருக்கிறதா.
  • வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற ஏதெனும் மாற்றங்கள் உங்களுடைய குடல் பகுதியில் தென்படுகிறதா
  • எடை இழப்பு உள்ளதா
  • உங்களுடைய குடும்பத்தில் யாருக்காவது, குடல் நோய் இருந்ததாக ஏதாவது வரலாறு இருக்கிறதா.

மருத்துவர் உங்களை ஆய்வு செய்வதற்கு விருப்பப்படலாம். இந்த ஆய்வில் உங்களுடைய பின்புற பாதையினை (ஆசனவாய் மற்றும் மலக்குடல்) சோதனை செய்ய வேண்டி இருக்கும், ஆசனவாய் வழியாக கையுறை அணிந்த விரல்களின் மூலம் சோதனை செய்யப்படும். உங்களுடைய பின்பகுதியில் பாதையினை ஏற்படுத்தி உள்ளே பார்ப்பதற்கு, புரோட்டோஸ்கோப் (மலக்குடல் அக நோக்கி) என்ற கருவியினை சில சமயங்களில் அவர்கள் உபயோகிப்பார்கள். சிலநேரங்களில், இதற்குப்பிறகு ஆய்வு செய்யப்படும். உதாரணமாக, ஆசனவாய் வெடிப்பு அல்லது மூல நோய் (பைல்ஸ் / மூல நோய்). எனினும், காரணங்களை கண்டுபிடிப்பதற்கு இன்னும் செய்யவேண்டிய சோதனைகளை மேற்கொண்டு செய்ய வேண்டும். சிறிய பாதையின் வழியாக, விரல் அல்லது புரோட்டோஸ்கோப் மட்டுமே உங்களுடைய ஜிஐ (GI) குடல்வழியாக சென்று பரிசோதனையினை செய்ய முடியும். இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு எந்தவிதமான காரணமும் தென்படவில்லை என்றால், உயர்ந்த அழுத்தத்தின் காரணத்தினாலும் கூட ஒருவேளை இரத்தப்போக்கு ஏற்படலாம்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவான காரணங்களை பற்றிய விரிவான கருத்தானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

மூல நோய் (பைல்ஸ் / மூல வியாதி / ஹெமொராய்ட்ஸ்)

மனித உடலில், பின்பக்கமாக இருக்கும் கீழ்குடலில் இருந்து ஆசனவாய் வரைக்கும் உள்ள குடல் பாதைகள் (கீழே இருக்கும் மலக்குடல்) அதிக வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீக்கம் போல ஏற்படுவது மூல நோய் எனப்படுகிறது. சிறிய இரத்த நாளங்களுக்கும் (நரம்புகள்) கீழே இருக்கும் மலக்குடல் மற்றும் ஆசனவாயின் உட்புற விளிம்புக்கு இடையே ஒரு தொடர்பு இருக்கும். இந்த நரம்புகள் சில சமயங்களில் நன்கு விரிவடைந்தும் மற்றும் வழக்கத்திற்கு மாறாக அதிக இரத்தத்தினாலும் நிரப்பப்பட்டும் இருக்கும். இந்த வீக்கமான (விரிவடைந்த) நரம்புகள் மற்றும் அதன்மீது படர்ந்து இருக்கும் திசுக்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து உருவாக்கிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய வீக்கங்கள் மூல நோய் என்றழைக்கப்படுகிறது. மூல நோய் என்பது மிகவும் பொதுவானது, நிறைய மக்களுக்கு ஒரு சில காலகட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூல நோய்கள் உருவாகும். சிறிய மூல நோய்கள் பொதுவாக வலியற்றவை. கழிப்பறைக்கு போய்விட்டு வந்த பிறகு இரத்தக்கசிவு ஏற்படுவதுதான், இதனுடைய பொதுவான அறிகுறி. பெரிய மூல நோயானது சளியினை வெளியேற்றுதல், வலி, எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றினை ஏற்படுத்தும். See separate leaflet called Piles (Haemorrhoids) for details (மேலும் விவரங்களுக்கு மூல நோய் என்ற தனி துண்டுப்பிரசுரத்தைப் பார்க்கவும்).

ஆசனவாய் வெடிப்பு/பிளவு

ஆசனவாயின் தசையானது சிறிய அளவில் கிழிந்து இருப்பதுதான் ஆசனவாய் வெடிப்பு எனப்படுகிறது. மேலும் ஆசனவாயின் தசையானது பொதுவாக சிறிய அளவில்தான் கிழிந்து இருக்கும் (சென்டிமீட்டர் அளவிற்கும் மிக குறைவாக), இப்படி இருந்தாலும் கூட வலி மிகவும் அதிகமாகத்தான் இருக்கும், ஏனென்றால் ஆசனவாய் மிகவும் சென்சிடிவான (உணர்ச்சிமிக்க) பகுதி. பெரும்பாலும் ஆசனவாய் வெடிப்பின் போது சிறிதளவில் இரத்தம் கசியும். நீங்கள் மலம் கழித்த பின்பு (கழிவு) இரத்தம் கசிவதை கவனிக்கலாம். இந்த இரத்தமானது பொதுவாக நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும், இதை கழிப்பறை டிஸ்யூவினைக் கொண்டு துடைக்கலாம், ஆனால் இது மிக விரைவில் நின்றுவிடும். See separate leaflet called Anal Fissure for details (மேலும் விபரங்களுக்கு ஆசனவாய் வெடிப்பிற்கான தனி துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்).

நாளச்சுவர் பிதுக்கம் / டைவர்டிகுலா

டைவர்டிகுலம் என்பது நேரான கழுத்தினை கொண்ட சிறிய பை போன்றது, இது குடலின் சுவர்ப்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட டைவர்டிகுலம் என்பதிலிருந்துதான் டைவர்டிகுலா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இவை குடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் உருவாகும், ஆனால் பொதுவாக இவை பெருங்குடலில்தான் ஏற்படும். ஒரே நேரத்தில் பல டைவர்டிகுலாக்கள் உருவாகலாம். இந்த டைவர்டிகுலாவானது எப்போதாவதுதான் இரத்தக்கசிவினை ஏற்படுத்தும், இதனால் உங்களுடைய ஆசனவாயின் வழியாக சிறிதளவு இரத்தமானது வெளியேறும். இந்த இரத்தகசிவானது பொதுவாக தீடீரென வரும் மற்றும் வலியின்றி இருக்கும். சிலசமயம் குடல் சுவற்றில் ஏற்படும் டைவர்டிகுலாவினால், இரத்த நாளங்கள் வெடித்து இரத்தக்கசிவானது ஏற்படுகிறது மற்றும் இதனால் ஏற்படும் இரத்த இழப்பின் அளவானது மிகவும் அதிகமாக இருக்கும். வயிற்று வலி, மற்றும் சாதாரண குடல் பழக்க வழக்கங்களின் மாற்றங்கள் போன்ற பிற அறிகுறிகளை டைவர்டிகுலாவானது ஏற்படுத்தும். See separate leaflet called Diverticula (including Diverticulosis, Diverticular Disease and Diverticulitis) for details (மேலும் விபரங்களுக்கு நாளச்சுவர் பிதுக்கம் / டைவர்டிகுளாவிற்கான (சளிப்படலப் பிதுக்கம், டைவர்டிகுளோசிஸ் நோய், குழலுறுப்பு போன்றவையும் இதில் அடங்கும்) தனி துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்.).

க்ரோன்ஸ் நோய்

குடலில் ஏற்படும் வீக்கமே க்ரோன்ஸ் நோய் (Crohn’s disease) எனப்படுகிறது. நாட்கள் செல்ல செல்ல இந்நோயின் தாக்கம் அதிகரிக்கும். குடலின் பாதிக்கப்பட்ட பகுதியையும், நோயின் வீரியத்தையும் பொறுத்தே இந்நோயின் அறிகுறிகள் தென்படுகின்றன. இதன் பொதுவான அறிகுறிகள் இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, அடிவயிற்று வலி மற்றும் அசௌகரியமாக உணர்தல். See separate leaflet called Crohn's Disease for details (மேலும் விவரங்களுக்கு க்ரோன்ஸ் நோய்க்கான தனி துண்டுப்பிரசுரத்தைப் பார்க்கவும்).

புண்களை கொண்ட பெருங்குடல் அழற்சி மற்றும் பெருங்குடல் அழற்சியின் பிற வடிவங்கள்

புண்களை கொண்ட பெருங்குடல் அழற்சி (யூசி) அல்சர் என்பது பெருங்குடல் மற்றும் மலக்குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறிக்கின்றது. இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு இந்நோயின் தாக்கத்தை வெளிப்படுத்தும் பொதுவான அறிகுறியாகும். வீங்கிய குடலின் உட்புறச் சுவர்களில் உருவான புண்களிலிருந்து வழியும் இரத்தம்தான் அது. இவ்வாறு பெருங்குடல் மற்றும் மலக்குடல் வீக்கத்தால், மலக்குடலில் இருந்து இரத்தம் வடிவதற்கு வேறுசில அரிய காரணங்களும் இருக்கின்றன. See separate leaflet called Ulcerative Colitis for details (மேலும் விவரங்களுக்கு புண்களை கொண்ட பெருங்குடல் அழற்சி அல்சர் நோய்க்கான தனி துண்டுப்பிரசுரத்தைப் பார்க்கவும்).

சிறு சிறு கட்டிகள்

குடலில் சிறு சிறு கட்டிகள் என்பது பெருங்குடலிலோ அல்லது மலக்குடலிலோ, அவற்றின் உட்புறத்தில் சில சமயங்களில் உருவாகும் சிறிய திசுக் கட்டியாகும். பொதுவாக இந்நோய் வயதானவர்களுக்குத் தான் வருகின்றது. இந்த குடல் சிறுகட்டிகள் புற்றுநோயாக மாறும் அபாயமில்லாதவை, எவ்வித தொல்லையும் தராதவை எனினும் சில நேரங்களில் இந்த சிறு கட்டிகளில் இருந்து இரத்தம் கசிவதும் உண்டு. சில சமயங்களில் இவ்வகை சிறு சிறு கட்டிகள் புற்றுநோயாக மாறுவதும் உண்டு. See separate leaflet called Bowel (Colonic) Polyps for details (மேலும் விவரங்களுக்கு குடலில் சிறு சிறு கட்டிகள் நோய்க்கான தனி துண்டுப்பிரசுரத்தைப் பார்க்கவும்).

புற்று நோய்

வயதானவர்களுக்கு வரும் புற்றுநோய்களில் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் பொதுவானவை. சில நேரங்களில் அவை சிறு வயதினரையும் தாக்குகின்றன. மலக்குடலிலிருந்து இரத்தம் கசிவது இந்தப்புற்று நோய்க்கான அறிகுறியாகும். இந்த இரத்தக் கசிவு அதிகமாகி கண்களுக்குத் தென்பட ஆரம்பித்த பின்னர்தான் நோயின் (மறைமுகமாக இருத்தல் - பிறகு பார்க்கலாம்) மற்ற அறிகுறிகளும் தெரிய ஆரம்பிக்கின்றன. உதாரணத்திற்கு, உடல் எடைகுறைவு, இரத்த இழப்பினால் தோன்றும் களைப்பு (anaemia (அனீமியா)), வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்றவை. பெருங்குடலுக்கு மேலிருக்கும் மற்ற குடல் பாகங்களில் உண்டாகும் புற்றுநோயினாலும் மலக்குடலிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படும் ஆனால் அவை அசாதாரணமானவை. See separate leaflet called Bowel (Colorectal) Cancer for details (மேலும் விவரங்களுக்கு குடல் புற்றுநோய்க்கான தனி துண்டுப்பிரசுரத்தைப் பார்க்கவும்).

ஆன்ஜியோடிப்ளசியா

பெருங்குடலின் உட்புற விளிம்பில் எண்ணற்ற விரிவடைந்த நிலையில் இருக்கும் இரத்த நாளங்களை உருவாக்குவதுதான் ஆன்ஜியோடிப்ளசியா (Angiodysplasia) என்றழைக்கப்படுகிறது. பெருங்குடலில் பொதுவாக ஏறுவரிசையில் (வலதுபக்கத்தில்) ஆன்ஜியோடிப்ளசியாவானது உருவாகிறது, ஆனால் அவை பெருங்குடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வளரும். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை ஆனால் இவை பொதுவாக வயதானவர்களிடையேதான் ஏற்படுகிறது. ஆன்ஜியோடிப்ளசியாவின் இரத்தப்போக்கானது வலியின்றி இருக்கும். வெளிர் சிவப்பு நிறத்திலான இரத்தக்கசிவு, மலத்துடன் கலந்த அடர்ந்த நிறம், கருப்பு அல்லது ப்ளம் நிறத்திலான மலங்கள் (மெலீனா) போன்ற வகைகளில் காணப்படும். ஆன்ஜியோடிப்ளசியாவானது கண்ணுக்கு தெரியாத (மறைமுகமான) இரத்த இழப்பினையும் கூட ஏற்படுத்தும் (கீழே பார்க்கவும்).

குடலின் அசாதாரமாண அமைப்புகள்

குடலின் பல்வேறு இயல்புகள் அல்லது சிறிய குழந்தைகளுக்கு இந்த குடல் சுவரானது மலக்குடல் இரத்தப்போக்கினை ஏற்படுத்தும். இதற்கான எடுத்துக்காட்டுகள்:

  • குடல் முறுக்கம் (வல்வுலஸ்) – குடலை முறுக்குதல்
  • குடல்செருகல் – ஒரு குடல் பகுதி மற்றொரு குடல் பகுதியுடன் ஒட்டிக்கொள்ளுதல், அடைப்பினை உருவாக்குதல்.
  • மெக்கெல்லேவின் டைவர்டிகுளம் (Meckel's diverticulum) – பிறந்ததில் இருந்தே (பிறவியிலேயே) சிறுகுடலில் கூடுதலாக காணப்படும் அதிகப்படியான வீக்கம் அல்லது பை போன்ற அமைப்பு
  • ஹிர்ச்ப்ரங்ஸ்ஸின் நோய் (Hirschsprung's disease) – சிறுகுடலின் ஒரு பகுதி அவை சொன்னபடி இயங்காமல் இருக்கும் நிலை. குடல் தசைகளின் சுவர்கள் அவை சொல்கின்ற படி மலத்தினை அழுத்தி / பிழிந்து வெளியே தள்ள முடியாது.
  • இரத்த நாளத்தின் அசாதாரமாண வளர்ச்சி.

வயிறு மற்றும் சிறுகுடல் புண்கள்

ulcer in the stomach (வயிற்றில் இருக்கும் புண்) அல்லது duodenum (முன்சிறுகுடலினால்) இரத்தப்போக்கு ஏற்படலாம். இது மெலீனாவை ஏற்படுத்தும் – ஏற்கனவே விவரித்தபடி, உங்களுடைய மலம் கருப்பாக மாறும் அல்லது ப்ளம் நிறத்தில் மாறும்.

சில குடல் நோய்த்தொற்றுகள்

குடல் வீக்கம் மற்றும் சில நோய்தொற்றின் காரணமாக, இவை இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கினை ஏற்படுத்தும்.

இன்னும் பிற பல்வேறு அரிதான காரணங்கள் உள்ளன.

மருத்துவரை பார்க்கவும். இரத்தப்போக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது மெலீனா என்றழைக்கப்படும் – உங்களுடைய மலம் கருப்பாக இருந்தாலோ அல்லது ப்ளம் நிறத்தில் இருந்தாலோ (ஏற்கனவே விவரித்தபடி), உடனடியாக மருத்துவரை சென்று பார்க்கவும் அல்லது ஆம்புலன்ஸை கூப்பிடவும். உங்களுக்கு மயக்கம் வருவது போல இருந்தாலோ, கீழே விழுவது போல அல்லது உடம்பு சரியில்லாதது போல நீங்கள் உணர்ந்தால் ஆம்புலன்ஸை கூப்பிடலாம், இதெல்லாம் அதிகமான இரத்தப்போக்கிற்கான அறிகுறிகள். இருப்பினும் இரத்தப்போக்கு எப்போதாவது சிறிதளவில் இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் சீக்கிரம் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். மலக்குடல் இரத்தப்போக்கானது, மூல நோயினால் (ஹெமராய்ட்ஸ்) வருகிறது என்று சில மக்கள் நினைப்பார்கள், அதனால் அவர்கள் மருத்துவரிடம் சென்று சோதித்து கொள்ள மாட்டார்கள். பொதுவாக மூல நோயானது எப்போதும் இரத்தப்போக்கினை ஏற்படுத்தும். இருந்தாலும், நீங்கள்மருத்துவரை முறைப்படி கலந்தாலோசிக்காமல், இரத்தப்போக்கு மூல நோயினால்தான் வருகிறது என்று தவறாக கணிக்கக்கூடாது.

இரத்தப்போக்கானது, சில சாத்தியமான காரணங்களை சார்ந்துள்ளது. இதை மருத்துவர் உங்களிடம் பேசிப்பார்த்துவிட்டு (உங்களுடைய பிண்ணனி பற்றி), மற்றும் உங்களை சோதித்த பிறகே இதை தீர்மானிப்பார். வழக்கமாக பின்வரும் சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:

  • மலக்குடலை உள்நோக்குவது (சிக்மாய்டோஸ்கோபி).
  • பெருங்குடலை உள்நோக்குவது (கோலனோஸ்கோபி).
  • நிஜமாக பெருங்குடலை உள்நோக்குவது (விர்ச்சுவல் கோலனோஸ்கோபி) (சிடி கோலனோக்ராபி)
Colonoscopy

பெருங்குடலை உள்நோக்குவது (கோலனோஸ்கோபி) என்றால் என்ன?

கோலனோஸ்கோபி (colonoscopy) சோதனை என்பது யாரவது ஒருவர் (மருத்துவர் அல்லது செவிலியர்) உங்களுடைய பெருங்குடலை சோதனை செய்வதுதான். பொதுவாக, இந்த சோதனைக்கு உங்களை முழுவதுமாக தூங்க வைக்க மாட்டார்கள்; இருந்தாலும், நீங்கள் அரைத்தூக்க நிலையில் இருக்கும்படியான ஊசி (மயக்க மருந்து) போடப்படும்.

கோலோனோஸ்கோப் (colonoscope) என்பது மெல்லிய, நெகிழும் தன்மைகொண்ட ஒரு தொலைநோக்கி. இது நம்முடைய சிறு விரலை விட சிறிதளவு தடிமனாக இருக்கும். இது ஆசன வாய் வழியாக பெருங்குடலுக்குள் செலுத்தப்படுகிறது. பெருங்குடலுக்குள் இருக்கும் எல்லா பகுதிகளுக்கும் இதை உள்ளே செலுத்தி பார்ப்பதோடு சிறுகுடல் மற்றும் பெருங்குடல் சந்திக்கும் இடம் வரைக்கும் கூட சென்று பார்க்கலாம் (பெருங்குடல்வால்).

கோலோனோஸ்கோப்பில் ஃபைபர் ஆப்டிக் சேனல்கள் உள்ளன, எனவே இது வெளிச்சத்தினை தரும், இதன் மூலம் இதை இயக்குபவர்களால் பெருங்குடலில் உள்ளே இருப்பதை நன்கு பார்க்க முடியும். இந்த செயலை நேரடியாக கோலோனோஸ்கோப்பின் மூலமாக பார்க்கலாம் அல்லது இந்த கோலோனோஸ்கோப்பினை டிவியுடன் இணைத்து அந்த டிவி திரையின் வழியாகவும் பார்க்கலாம்.

கோலோனோஸ்கோப் பக்க சேனலை கொண்டுள்ளது, இதன் மூலமாக சாதனத்தினை உள்ளே அனுப்பி சோதனையினை செய்ய முடியும். இவை ஆபரேட்டர் மூலமாக கையாளப்படுகிறது. எடுத்துக்காட்டு, பக்க சேனல் மூலமாக மிக மெல்லிய சாதனத்தினை பெருங்குடலின் உள்ளே செலுத்தி பெருங்குடலை சுற்றியுள்ள சவ்வுப்படலத்தில் இருந்து, அந்த மெல்லிய சாதனத்தினை கொண்டு, ஒரு சிறிய மாதிரியினை (பயாப்ஸி) எடுத்துக்கொண்டு வருவது. See separate leaflet called Colonoscopy for details (மேலும் விவரங்களுக்கு கோலோனோஸ்கோப்பிக்கான தனி துண்டுப்பிரசுரத்தைப் பார்க்கவும்).

மலக்குடலை உள்நோக்குவது (சிக்மாய்டோஸ்கோபி) என்றால் என்ன?

பெருங்குடலும், மலக்குடலும் இணைந்த கடைசிப்பகுதி சிக்மாய்டு பெருங்குடல் எனப்படுகிறது. சிக்மாய்டோஸ்கோப் (sigmoidoscope) என்பது வெளிச்சத்தினை தரும் விரல் தடிமன் அளவில் இருக்கும் ஒரு சிறிய தொலை நோக்கி. இது கோலோனோஸ்கோப்பியை போன்றது ஆனால் அதைவிட இது மிகவும் சிறியது. கோலோனோஸ்கோப்பி பயன்படுத்துவதை விட, சிக்மாய்டோஸ்கோப்பியை பயன்படுத்துவது மிகவும் எளிது. மலக்குடல் அல்லது கீழ் பெருங்குடலில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படுவதாக சந்தேகம் இருந்தால், கோலோனோஸ்கோப்பிக்கு பதிலாக சிக்மாய்டோஸ்கோப்பியை பயன்படுத்தலாம். மருத்துவர் அல்லது செவிலியர் சிக்மாய்டோஸ்கோப்பை ஆசனவாயின் வழியாக மலக்குடல் மற்றும் கீழ்பெருங்குடலின் உள்ளே மெதுவாக செலுத்துவார். இந்த செயல்முறையானது எப்போதும் வலியில்லாதது ஆனால் சிறிது அசெளகரியமாக இருக்கக்கூடியது. See separate leaflet called Sigmoidoscopy for details (மேலும் விவரங்களுக்கு சிக்மாய்டோஸ்கோபிக்கான தனி துண்டுப்பிரசுரத்தைப் பார்க்கவும்).

நிஜமாக பெருங்குடலை உள்நோக்குவது (விர்ச்சுவல் கோலனோஸ்கோபி) என்றால் என்ன?

விர்ச்சுவல் கோலனோஸ்கோபி (virtual colonoscopy) (இது சிடி கோலோனோக்ராபி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு புதிய சோதனை. குழாயினை பெருங்குடலினுள் உள்ளே விடாமலேயே, குடலின் உட்புறத்தில் இருப்பதை மருத்துவர்நன்கு தெளிவாக பார்ப்பதற்கு இது உதவுகிறது. குழாயானது பின்பக்கம் (மலக்குடல்) வழியாக செலுத்தப்படும், ஆனால் அது ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேலே செல்லாது. இந்த குழாயின் மூலமாக வாயுவினை பெருங்குடலிற்கு அனுப்பி குடலை நன்கு விரிவடையச் செய்கிறது. அதற்கு பின் பெருங்குடல் ஆனது சிடி ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த சோதனை சிறிது அசெளகரியத்தைனை தந்தாலும், பாரம்பரிய கோலோனோஸ்கோப்பியை விட இது பொறுத்துக் கொள்ளக்கூடியது. கோலோனோஸ்கோப்பிக்கு யார் அதிகமாக பயப்படுகிறார்களோ மற்றும் பொறுத்துக்கொள்ள மாட்டார்களோ, அவர்களுக்கு இந்த முறை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இது எல்லா பகுதிகளிலும் கிடைப்பதில்லை. See separate leaflet called CT Colonography (மேலும் விவரங்களுக்கு சிடி (CT) கோலோனோக்ராபிக்கான தனி துண்டுப்பிரசுரத்தைப் பார்க்கவும்).

உங்களுடைய மலத்தில் கண்ணுக்கு தெரியாத இரத்தம் அல்லது அதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால், இந்த எஃப்ஒபி (Faecal Occult Blood test) சோதனை உங்களுடைய மலத்தில் (கழிவுகள்) இருக்கும் மிகச்சிறிய அளவிலான இரத்தத்தினையும் கண்டுபிடித்துவிடும்.

எஃப்ஒபி சோதனை எப்போது மற்றும் எதற்கு நடத்தப்படுகிறது?

ஏற்கனவே விவாதித்தபடி, பலவிதமான நோய்களினால் குடலில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இவை ஏற்படுத்தும் மலக்குடல் இரத்தப்போக்கினை நீங்கள் பார்க்கலாம். எப்படி இருந்தாலும், இந்த மாதிரியான சில நோய்களினால், மக்களுக்கு இரத்தப்போக்கானது சொட்டு சொட்டாக ஏற்படும். உங்களுடைய மலத்தில் இரத்தமானது குறைந்த அளவில் இருந்தால், உங்கள் மலம் சாதாரணமாகத்தான் தோன்றும். இருப்பினும், எஃப்ஒபி சோதனை அதில் இருக்கும் இரத்ததினை கண்டுபிடித்துவிடும். எனவே, உங்களுக்கு வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், அதாவது குடல் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளுக்கு, இந்த சோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு, தொடர்ச்சியான வயிற்று (அடிவயிறு) வலி, எடை குறைதல், மற்றும் இன்னும் பல. குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் அதிகமாவதற்கு முன்பே, இந்த சோதனைகளை செய்யலாம் (கீழே பார்க்கவும்).

குறிப்பு: எஃப்ஒபி சோதனையானது, குடலில் ஏதோ ஒரு பகுதியில் இரத்தப்போக்கு உள்ளது என்று மட்டும் சொல்லும். எந்த பகுதியில் என்று குறிப்பிட்டு சொல்லாது. சோதனையின் முடிவு சாதகமானதாக இருந்தால், இரத்தப்போக்கிற்கான காரணத்தினை கண்டுபிடிப்பதற்கு, மேற்கொண்டு செய்யவேண்டிய பொதுவான சோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும். உதாரணமாக கோலனோஸ்கோபி

எஃப்ஒபி சோதனை எப்படி நடத்தப்படுகிறது?

மாதிரி மலங்கள் அட்டையில் ஒட்டுவதற்கு வேண்டும். எனவே நீங்கள் கழிப்பறைக்கு செல்லும் போது ஒரு சிறிய சுரண்டும் கருவியினை பயன்படுத்தி மலத்தில் இருந்து சிறிதளவு, டிஸ்யூ தாளை பயன்படுத்தி சுரண்டி எடுக்கவும். இந்த மாதிரி மலத்தினை அட்டையில் வைத்து அதன் மீது இரசாயனத்தை ஊற்றி சோதனை செய்து பார்க்கவும். இரசாயனத்தினை சேர்த்த பின்பு மலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால், அதில் இரத்தம் இருக்கிறது என்று அர்த்தம்.

வெவ்வேறு நாட்களில் இருந்து பெறப்பட்ட, 2 அல்லது 3 விதமான மலத்தின் மாதிரிகளைக் கொண்டு, 2 அல்லது 3 விதமான எஃப்ஒபி சோதனைகள் செய்யப்படுகின்றன. ஏனென்றால் குடலின் இரத்தப்போக்கானது, தற்போதும், பின்னரும் ஒழுங்கற்று இருக்கின்ற காரணத்தினால் இவ்வாறு செய்யப்படுகிறது. எனவே, எல்லா மாதிரிகளிலும் இரத்தம் இருக்காது. சில நாட்களுக்கு 2 அல்லது 3 மாதிரிகளை தொடர்ச்சியாக செய்தால் ஒழுங்கற்று இருக்கும் குடல் இரத்தக்கசிவிற்கான காரணத்தினை, துல்லியமாக கண்டுபிடித்து விடலாம்.

See separate leaflet called Faecal Occult Blood test for more details (கழிவுப்பொருளில் மறைமுகமாக இருக்கும் இரத்தத்திற்கான சோதனையின் முழு விபரங்களை தனி துண்டு பிரசுரத்தில் பார்க்கவும்).

குடல் புற்று நோய்க்கான ஆய்வு/ஸ்கிரீனிங் (ஐக்கிய அரசாட்சிக்குட்பட்ட நாடுகளைச் சேர்ந்த (United Kingdom) மக்களுக்கு மட்டும்)

ஸ்க்ரீனிங் என்பது, ஒரு குறிப்பிட்ட நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகளை பார்ப்பதாகும், அல்லது ஆரோக்கியமான மக்களுக்கு எந்தவொரு அறிகுறிகளும் தெரியவில்லை எனில் அவற்றை சரிசெய்வதற்கான சிகிச்சை முறைதான் இது. குடல் புற்று நோய்க்கான (பெருங்குடல்சிறுகுடல் புற்று நோய்) ஸ்க்ரீனிங்கின் குறிக்கோளானது, ஆரம்ப கால கட்டத்திலேயே பெருங்குடல்/சிறுகுடல் புற்று நோயினை கண்டறிவதுதான், இப்படி கண்டறிவதனால் நல்ல தரமான சிகிச்சையின் மூலம் புற்றுநோயினை குணமாக்குவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

யூகே-வில் (United Kingdom) சில குறிப்பிட்ட வயது குழுவினருக்கு செய்வதற்கென ஆய்வு/ஸ்கிரீனிங் திட்டம் உள்ளது. உங்களுடைய இரத்தம் கலந்த மலத்தை மூன்று மாதிரிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. யூகே-வில் வெவ்வெறு பகுதிகளில் இருப்பவர்கள், வெவ்வேறு வயது குழுவினராக இருப்பார்கள். நீங்கள் அந்த குறிப்பிட்ட வயது குழுவினருடன் ஒத்துப்போனால், எஃப்ஒபி ஆய்வு செய்யும் கிட்டும், அழைப்பிதழும் உங்களுக்கு அனுப்பப்படும், எனவே நீங்கள் வீட்டிலேயே இந்த சோதனையை செய்யலாம். அதிகபட்சமாக நீங்கள் அந்த குறிப்பிட்ட வயதினை அடையும் வரையிலும், உங்களுடைய முதல் ஸ்க்ரீனிங் சோதனைக்கு பிறகு, 2 வருடத்திற்கு ஒருமுறை உங்களுக்கு ஆய்வு செய்யும் கிட் மற்றும் அழைப்பிதழ் அனுப்பப்படும். அதற்கு மேலும் நீங்கள் இந்த ஸ்க்ரீனிங் திட்டத்தில் பங்கு கொண்டு தொடர விரும்பினால், தேவையான கிட்டை கேட்டு வாங்கிக்கொள்ளலாம். See separate leaflet called Screening for Bowel (Colorectal) Cancer for more details (குடல் புற்று நோய்க்கான ஆய்வு என்று அழைக்கப்படும், நோயின் முழு விபரங்களை தனி துண்டு பிரசுரத்தில் பார்க்கவும்).

சிகிச்சையானது அதனதன் காரணங்களைப் பொறுத்து அமையும். மலக்குடல் இரத்தப்போக்கை ஏற்படுத்தும் பல்வேறு விதமான நோய்கள் பற்றி தனித்தனியாக இருக்கும் துண்டுபிரசுரத்தினை பார்க்கவும்.

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Further reading and references

newnav-downnewnav-up