வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் Swollen Lymph Glands
வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றுள் மிகவும் பொதுவான காரணம், நோய்த்தொற்று ஆகும். உங்களுக்கு வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் இருந்தால், மற்றும் எதனால் அவை ஏற்பட்டன என்பது உங்களுக்குத் தெரியவில்லை எனில், அல்லது ஒரு நோய்த்தொற்றின் காரணமாக ஏற்படும் வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள், இரண்டு வாரங்களுக்கு உள்ளாகக் குறையவில்லை எனில், உங்கள் மருத்துவரை பாருங்கள்.
நிணநீர்ச் சுரப்பிகள் என்றால் என்ன?

சிறிய நிணநீர்ச் சுரப்பிகள் (சில நேரங்களில் நிணநீர் கணுக்கள் என அழைக்கப்படுகின்றன) உடல் முழுவதும் ஏற்படும். ஒன்றுடன் மற்றொன்று அருகருகே உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் பெரும்பாலும் தொகுதிகளாக அல்லது சங்கிலித்தொடர்களாக உருப்பெறுகின்றன. கழுத்தின் பக்கவாட்டுப் பகுதிகள், அக்குள்கள் மற்றும் கால் கவட்டைகள் ஆகிய இடங்களில் உருவாகும் நிணநீர்ச் சுரப்பிகள் இவ்வாறு தொகுதிகளாக அல்லது சங்கிலித்தொடர்களாக உருப்பெறும் நிணநீர்ச் சுரப்பிகளுக்கு உதாரணங்கள் ஆகும். தலையிலும் கழுத்திலும் உள்ள நிணநீர்ச் சுரப்பிகளின் முக்கியமான தொகுதிகளை விளக்க வரைபடம் காட்டுகிறது. எனினும், நிணநீர்ச் சுரப்பிகள், உடலில் வேறு பல இடங்களிலும் ஏற்படலாம்.
நிணநீர்ச் சுரப்பிகள், நிணநீர் செல்வழிகளின் ஒரு வலையமைப்பால் ஒன்றாகச் சேர்த்து இணைக்கப்படுகின்றன. நிணநீர் என்பது உடலின் உயிரணுக்களுக்கு இடையே உருவாகின்ற ஒரு திரவம் ஆகும். இந்த நீர்த்த திரவம், பல்வேறு நிணநீர்ச் சுரப்பிகளின் ஊடாக நிணநீர் செல்வழிகளில் பயணித்து கடைசியில் இரத்த ஓட்டத்திற்குள் வடிகிறது.
நிணநீர் மற்றும் நிணநீர்ச் சுரப்பிகள் the immune system (நோய் எதிர்ப்பு மண்டலத்தின்) முக்கியமான பகுதிகள் ஆகும். இவை, நோய்த்தொற்றுக்கு எதிராக நமது உடலை தற்காத்துக் கொள்ளும் வெள்ளை இரத்த உயிரணுக்களையும் (லிம்போசைட்கள்), ஆன்ட்டிபாடிகளையும் கொண்டுள்ளன.
வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் எதனால் ஏற்படுகிறது?
நிணநீர்ச் சுரப்பிகள் வழக்கமாகப் பட்டாணியைப் போல, உருவளவு கொண்டவை ஆகும். இவற்றை நீங்கள் சில நேரங்களில், தோலுக்குக் கீழ் கட்டிகளாக உணர முடியும். மக்கள் தமது கழுத்தில் நிணநீர்ச் சுரப்பிகளைப் பெரும்பாலும் உணரலாம். தோலுக்குக் கீழ் உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கினால், அவற்றை எளிதாகக் கவனிக்கவும், உணரவும் முடியும். இவை, கோலிக்குண்டுகளைப் போன்ற அல்லது அதை விடப் பெரிய உருவ அளவு வரை வீங்கக்கூடும்.
மார்பில் அல்லது வயிற்றில் (அடிவயிறு) ஆழமாக உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கினால், அவற்றை உங்களால் பார்க்க அல்லது உணர முடியாது.
பின்வரும் காரணங்களால் வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் ஏற்படலாம்:
நோய்த்தொற்றே பொதுவான காரணம்
நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்ற கிருமிகள் (பாக்டீரியா, வைரஸ்கள், முதலியன) நோய் எதிர்ப்பு மண்டலத்தை ‘எதிர்த்துப் போராடுகின்றன' என்பதால் ஒரு நோய்த்தொற்றுக்கு அருகில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் விரைவாக வீங்கிவிடும் மற்றும் மென்மையாக ஆகிவிடும். நிணநீர்ச் சுரப்பிகள் வழக்கமாக, நோய்த்தொற்று சரியானதும் தமது இயல்பான பட்டாணியைப் போன்ற உருவளவுக்குத் திரும்பிச் சென்றுவிடும். இவ்வாறு இவை நோய்த்தொற்று சரியான பிறகு படிப்படியாகத் தமது இயல்பான உருவ அளவுக்குத் திரும்புவதற்கு ஓரிரு வாரங்கள் ஆகலாம். சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- Throat infections (தொண்டை நோய்த்தொற்றுகள்), tonsillitis (உள்நாக்கு அழற்சி), the common cold (சளி) மற்றும் பல் தொடர்பான நோய்த்தொற்றுகள் காரணமாகக் கழுத்தில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கும்.
- மண்டையை மூடியுள்ள உரோமத்துடன் கூடிய தோல் நிலைமைகள் அல்லது head lice (தலைப் பேன்) ஆகியவற்றின் காரணமாகவும், தலையின் பின்புறத்தில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கலாம்.
- கரத்தில் உள்ள தோல் நோய்த்தொற்றுகள் காரணமாக, அக்குளில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கும்.
- கால் அல்லது பிறப்புறுப்புப் பகுதிகளில் உள்ள நோய்த்தொற்றுகள் காரணமாக, nappy rash (நாப்கின் சார்ந்த சொறி), கால் கவட்டையில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கும்.
- flu (influenza) ( ஃப்ளூ (சளிக்காய்ச்சல்)), chickenpox (சின்னம்மை) அல்லது glandular fever (infectious mononucleosis) (சுரப்பிகள் சார்ந்த காய்ச்சல் (நோய்த்தொற்றுள்ள ஒற்றை உட்கரு அணு மிகைப்பு)) போன்ற வைரஸ் நோய்த்தொற்றுகள் முழு உடலையும் பாதிக்கக்கூடும். உங்களுக்குக் கழுத்து, அக்குள் மற்றும் கால் கவட்டை போன்ற உடலின் பல்வேறு பகுதிகளில் வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் உருவாகலாம்.
புற்றுநோய்கள், நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய்கள் மற்றும் இரத்தப் புற்றுநோய்கள் ஆகியவை குறைந்த பொதுவான காரணங்கள் ஆகும்
ஒரு புற்றுநோயில் இருந்து, சில உயிரணுக்கள் உடைந்து, நிணநீர் செல்வழிகள் வழியாக, அருகில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகளுக்குப் பரவலாம் (உட்பரவல்). அதன் பிறகு, இத்தகைய புற்றுநோய் உயிரணுக்கள் நிணநீர்ச் சுரப்பிகளில் அதிவிரைவாக இனப்பெருக்கம் செய்து, சுரப்பிகளை வீங்கச்செய்யும். உதாரணத்திற்கு:
- Breast cancer (மார்பகப் புற்றுநோய்) ஆனது அக்குளில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகளுக்குப் பரவலாம்.
- கழுத்தில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகளுக்கு Throat cancer (தொண்டைப் புற்றுநோய்) பரவலாம்.
- Lung (நுரையீரல்) மற்றும் stomach cancers (வயிற்றுப் புற்றுநோய்கள்) மார்பு மற்றும் அடிவயிற்றில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகளுக்குப் பரவலாம். இதை நீங்கள் பார்க்கவோ அல்லது உணரவோ முடியாது.
- Skin cancers (தோல் புற்றுநோய்கள்) முதலில் சம்பந்தப்பட்டுள்ள தோல் பகுதிக்கு மிக அருகில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகளுக்குப் பரவும்.
- நிணநீர் மற்றும் இரத்த மண்டலங்களில் உள்ள புற்றுநோய் (non-Hodgkin's lymphoma (நான்-ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா), Hodgkin's lymphoma (ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா) மற்றும் leukaemias (இரத்தப் புற்றுநோய்கள்)) காரணமாக நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கும்.
விதிப்படி, புற்றுநோய்கள், நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய்கள் மற்றும் இரத்தப் புற்றுநோய்கள் காரணமாக வீங்கும் நிணநீர்ச் சுரப்பிகள், நோய்த்தொற்றுகள் காரணமாக ஏற்படும் வீங்கும் நிணநீர்ச் சுரப்பிகளை விட மெதுவாகவே உருவாகும். இவையும் முதலில் வலி இல்லாமலே இருக்கும்.
இதர அரிதான காரணங்கள்
அரிதாக, வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள், பின்வருவன போன்ற காரணங்களால் ஏற்படும்:
- சில குறிப்பிட்ட மருந்துகளுடனான வினைகள்.
- Glycogen storage disorders (கிளைக்கோஜென் சேமிப்புக் கோளாறுகள்).
- Sarcoidosis (துகள் கழலை நோய்).
- Systemic lupus erythematosus (SLE) (சிஸ்டமிக் லூபஸ் எரிதமட்டோசஸ் (SLE)).
- Rheumatoid arthritis (முடக்கு வாதம்) போன்ற சில குறிப்பிட்ட வகையான மூட்டு அழற்சி.
- HIV (எச்ஐவி), Kawasaki disease (கவாசகி நோய்) மற்றும் tuberculosis (Tb) (காச நோய் (டி.பி)) போன்ற குறைந்த அளவு பொதுவான நோய்த்தொற்றுகள்.
வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகளுக்கான சிகிச்சை என்ன?
சிகிச்சையானது அதனதன் காரணங்களைப் பொறுத்து அமையும். பல்வேறு நிலைமைகளின் காரணமாக வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் ஏற்படலாம். இவை வெவ்வேறு பாங்குகளையும் சிகிச்சைகளையும் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, பொதுவான காரணம் ஒரு வைரஸ் நோய்த்தொற்று ஆகும். இந்த நேர்வில், குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் அறிவுறுத்தப்படுவதில்லை. மேலும், நிணநீர்ச் சுரப்பிகள் ஓரிரு வாரங்களுக்குப் பிறகு இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். எனினும், ஒரு புற்றுநோய், நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் அல்லது இரத்தப் புற்றுநோய் காரணமாக வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் ஏற்பட்டால், அதற்கு விரிவான சிகிச்சை தேவைப்படும்.
எனக்கு வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
வைரஸ் நோய்த்தொற்றுகள் காரணமாக வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் இருந்தால், அது பொதுவாகக் காணப்படுவதே ஆகும். உதாரணத்திற்கு, உங்களுக்கு அடிக்கடி தொண்டை நோய்தொற்றுகள் இருந்தால், கழுத்தில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் மேலும் கீழுமாக வீங்கலாம். இது, சிறிதளவே கவலை அளிக்கக்கூடியது. எந்தவொரு தெளிவான காரணமும் இல்லாமல் வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் இருந்தால், அது நிச்சயமாகக் கவலையளிக்கக் கூடியதே ஆகும். பின்வருவன இருந்தால் உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள்:
- உங்களிடத்தில் வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் இருப்பதை நீங்கள் கண்டறிகிறீர்கள். ஆனால் அவை ஏன் வீங்கின என்பதற்கான காரணம் உங்களுக்குத் தெரியவில்லை. உதாரணத்திற்கு, அவை வீங்கும் அளவுக்கு உங்களுக்கு நோய்த்தொற்று எதுவும் இல்லை.
- உங்கள் கழுத்துப்பட்டை எலும்புக்கு (காறையெலும்பு) சற்று மேலே அல்லது சற்று கீழே வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் இருப்பதை நீங்கள் கண்டறிகிறீர்கள். இந்தப் பகுதியில் உள்ள வீங்கிய சுரப்பிகள் பெரும்பாலும் கவலையளிக்கக் கூடியவையாக உள்ளன.
- நோய்த்தொற்றின் காரணமாக ஏற்படும் வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள், இரண்டு வாரங்களுக்கு உள்ளாகக் குறையவில்லை.
பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.
Further reading and references
Neck lump; NICE CKS, January 2016 (UK access only)
Richner S, Laifer G; Peripheral lymphadenopathy in immunocompetent adults. Swiss Med Wkly. 2010 Feb 20140(7-8):98-104.