வைரஸ் சொறிகள் Viral Rashes

Last updated by Peer reviewed by Prof Cathy Jackson
Last updated

Added to Saved items

பல வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்ற அறிகுறிகளுடன் கூடுதலாக, ஒரு சொறியையும் ஏற்படுத்தலாம். வைரஸ் நோய்த்தொற்றுகள் ஏற்படும் போதெல்லாம் சொறிகள் ஏற்படுவது, அதிலும் குறிப்பாகக் குழந்தைகளிடத்தில் ஏற்படுவது மிகவும் பொதுவானது. கடுமையான நோய்த்தொற்றின் காரணமாகச் சொறி ஏற்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகும். உதாரணமாக, தண்டு-மூளை உறையழற்சியுடன் (மெனின்ஜைட்டிஸ்) தொடர்புடைய மெனின்ஜோகோக்கல் நோய்த்தொற்று. வைரஸ் தடிப்புகள் தொடர்பாக, ஏதேனும் சந்தேகங்கள்/கவலைகள் இருந்தால், உங்கள் பொது மருத்துவரை நீங்கள் உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

வைரஸ் கிருமியின் வகையைப் பொறுத்து வைரஸ் நோய்த்தொற்றுகளால் ஏற்படும் அறிகுறிகள் மாறுபடும். இத்தகையை அறிகுறிகளுள் ஒன்று சொறி ஆகும். பரவலாக அறியப்படும் ஒரு சில வைரஸ் சொறிகள் உள்ளன. உதாரணத்திற்கு, measles virus (தட்டம்மை வைரஸ்) மற்றும் chickenpox virus (சின்னம்மை வைரஸ்) ஆகியவை, மற்ற அறிகுறிகளுடன் சேர்த்துத் குறிப்பிடத்தகுந்த பண்புகளுடைய சொறிகளை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில், ஒரு வழக்கமான சொறியானது, மருத்துவருக்கு, நோய்க்குக் காரணமான வைரஸைக் கண்டறிய உதவுகிறது.

பல வைரஸ்கள் அதிக உடல் வெப்பநிலை (காய்ச்சல்) மற்றும் இருமல் போன்ற மற்ற அறிகுறிகளுடன் கூடுதலாக ஒரு சொறியை ஏற்படுத்தலாம். இத்தகைய சொறிகளுள் பல, 'வரையறுக்கப்படாதவை' ஆகும். அதாவது, இந்தச் சொறி, ஒரு குறிப்பிட்ட வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது என அடையாளம் கண்டறியும் வகையில் வரையறுக்கப்பட முடியாதது அல்லது தனிச்சிறப்புப் பண்பு எதுவும் இல்லாதது. மருத்துவரால் எந்த வைரஸ், இந்த சொறியை ஏற்படுத்துகிறது என உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால், தடிப்பிற்கு காரணம், ஏதோ ஒரு வைரஸ் கிருமியாகத்தான் இருக்கக்கூடும்.

வைரஸ் சொறிகள் உருவ அளவிலும் வடிவத்திலும் மாறுபடும். எனினும், இவை பெரும்பாலும் கொப்புளங்களை உடைய சிவப்பு நிறப் புள்ளிகளாகத் தோன்றும். இவை பொதுவாக உங்கள் உடலின் பெரும்பாலான இடங்களைப் பாதிக்கும். சில நேரங்களில் இவை திடீரென ஆச்சரியமளிக்கும் வகையில் தோன்றலாம். உதாரணத்திற்கு, காலையில் நீங்கள் தூக்கத்தில் இருந்து எழுந்ததும், உங்கள் உடலில் சொறியை பார்க்கலாம். இது, வழக்கமாக ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். சில நேரங்களில், சொறி லேசாக அரிக்கக்கூடும். வழக்கமாக சொறி ஒரு சில நாட்களுக்குள் சுவடு தெரியாமல் மறைந்து போய்விடும். பலவகையரன சொறிகள் உள்ளன.

eczema (தோல்படை) அல்லது urticaria (தோல் தடிப்புச்சொறி), போன்ற சில தோல் நிலைமைகள், ஒரு வைரஸ் சொறியை போலவே தோற்றமளிக்கும் சொறிகளை உண்டாக்கலாம்.

வெறும் வைரஸ் சொறி என்றால், வழக்கமாகக் கடுமையானதல்ல. எனினும், ஒரு கடுமையான நோய்த்தொற்றின் ஒரு பகுதியாகச் சொறி உண்டாகவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகும் - உதாரணம்: meningococcal infection (மெனின்ஜோகோக்கல் நோய்த்தொற்று). பச்சிளங்குழந்தைகள் மற்றும் இளம்வயது குழந்தைகளிடத்தில், மெனின்ஜோகோக்கல் (meningococcal) நோய்த்தொற்றை, குறிப்பாக உணர்த்தும் மற்ற அடையாளங்கள், நெகிழ்த்தன்மை மற்றும் எதிர்விளைவற்று இருத்தல், வழக்கத்திற்கு மாறான அழுகை, தூக்கக் கலக்கமாக இருத்தல் மற்றும் அதிக உடல் வெப்பநிலையை (காய்ச்சல்) கொண்டிருத்தல் ஆகும். மெனின்ஜோகோக்கல் (meningococcal) நோய்த்தொற்றினால் ஏற்படும் சொறி, வழக்கமாக கருஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறப் புள்ளிகளாக இருக்கும். இவை, அழுத்தத்தின் மூலம் மங்கிவிடாது (உதாரணத்திற்கு, உங்கள் தோலின் மீது ஒரு தெளிவான கண்ணாடியை அழுத்துவதன் மூலம்).

Glass test for meningitis rash

“மெனின்ஜைட்டிஸ் நவ்” (Meningitis Now) தொண்டு நிறுவனத்திடம் இருந்து அனுமதியைப் பெற்று மறுஉருவாக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தடிப்புகள் தொடர்பாக, ஏதேனும் சந்தேகங்கள்/கவலைகள் இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

மற்ற அறிகுறிகள் அல்லது பிரச்சினைகள் ஏதாவது ஏற்படுமா என்பதை அறிவது அவசியமானதாகும். உதாரணத்திற்கு, தட்டம்மை வைரஸ் ஆனது, சொறியுடன் சேர்த்து, மோசமான மார்பு நோய்த்தொற்று, கடுமையான வயிற்றுப்போக்கு முதலியவற்றை உண்டாக்கலாம் எனினும், பல வைரஸ்கள் மிதமான காய்ச்சல் அல்லது லேசான இருமல் போன்ற சிறிய அறிகுறிகளை மட்டுமே உண்டாக்குகின்றன. ஆனால் சொறி திடீரென ஆச்சரியமளிக்கும் வகையில் தோன்றலாம். சில நேரங்களில், சொறியானது, மற்ற அறிகுறிகள் அதிகரிப்பின் காரணமாகத் தோன்றுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள்
சொறியை உண்டாக்குகின்ற பெரும்பாலான வைரஸ் நோய்த்தொற்றுகள் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்தவொரு தீங்கையும் விளைவிப்பதில்லை. எனினும், சில வைரஸ் நோய்த்தொற்றுகள், தீங்கு விளைவிக்கலாம். உதாரணத்திற்கு, rubella (German measles) virus (ரூபெல்லா (ஜெர்மானியத் தட்டம்மை) வைரஸ்). எனவே, ஒரு நோய்த்தொற்றுள்ள சொறியைக் கொண்டுள்ள மக்களைத் தவிர்ப்பது பெரும்பாலும் சிறந்தது. மேலும், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்பொழுது சொறி உங்களுக்கு உண்டானால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

பரவலாகக் கொப்புளங்களை உடைய சொறி திடீரெனத் தோன்றுவது மிகவும் பொதுவானது. இது, பெரும்பாலும் ஒரு வைரஸ் நோய்த்தொற்றினால் ஏற்படுகிறது. மற்ற அறிகுறிகள் இருக்குமானால், அது கவலையளிக்கக்கூடியது. மற்ற அறிகுறிகள் மிதமானதாக இருந்தால் அது வழக்கமாகச் சிறிதளவு கவலையளிக்கக்கூடியதே ஆகும். இது, வழக்கமாக ஒரு சில நாட்களில் மறைந்துபோகும். வெறும் சொறிக்கு குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவுமில்லை. மற்ற அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு, அதிக உடல் வெப்பநிலைக்கு (காய்ச்சல்) paracetamol (பாராசிட்டமால்) பயன்படுத்தப்பட வேண்டும்.

அரிப்புடன் கூடிய சொறிகள் பெரும்பாலும் antihistamine tablet (ஹிஸ்டமைன் எதிர்ப்பு மாத்திரை) மாத்திரைக்குக் குணமாகும். இதை உங்கள் மருத்துவரிடம் அல்லது ஒரு மருந்தாளுநரிடம் இருந்து நீங்கள் பெறலாம். அரிப்பை போக்குவதற்குப் பல்வேறு கிரீம்களும் கிடைக்கின்றன.

சொறி/தடிப்புகள் அல்லது மற்ற அறிகுறிகள் கடுமையானதாக இருக்கலாம் என நீங்கள் கவலைப்பட்டால், ஒரு மருத்துவரை பாருங்கள்.

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Further reading and references

newnav-downnewnav-up